“நல்லா இருக்க தமிழ்நாட்ட எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நான் அரசியல் பேசல.. இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது!” - நடிகர் வடிவேலு  

ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தியவர் முதல்வர் ஸ்டாலின் என நடிகர் வடிவேலு பாராட்டியுள்ளார்.

“நல்லா இருக்க தமிழ்நாட்ட எதுக்கு பிரிச்சுக்கிட்டு? நான் அரசியல் பேசல.. இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது!” - நடிகர் வடிவேலு   

கொரோனா வைரஸ் இரண்டாம் அலையால் தமிழகம் கடுமையாக பாதிக்கப்பட்ட போது தமிழக அரசு நிதி நெருக்கடியால் தவித்தது. அச்சமயம் மருத்துவ கட்டமைப்பை பன்மடங்கு அதிகரிக்க வேண்டியிருந்ததால் முதல்வர் பொது நிவாரண நிதிக்கு நிதி உதவி வழங்குமாறு முதல்வர் மு.க ஸ்டாலின் கோரிக்கை விடுத்தார் அவரது கோரிக்கைக்கு இணங்க பலர் நிதியுதவி வழங்கி வருகின்றனர்.

முதல்வர் பொது நிவாரண நிதிக்கு கிடைக்கப்பெற்ற நிதி விவரங்கள் பொதுவெளியில் வெளியிடப்படும் என முதல்வர் உறுதியளித்ததன் படி, இதுவரை ரூ. 480 கோடி நிதி திரண்டு உள்ளதாக அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அண்மையில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையில் நகைச்சுவை நடிகர் வடிவேலு முதல்வர் நிவாரண நிதிக்கு 5 லட்சம் வழங்கியுள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து நிதியுதவி வழங்கிய பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் வடிவேலு, ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே உலகம் உற்றுப் பார்க்கும் அளவுக்கு கொரோனாவை முதல்வர் மு.க ஸ்டாலின் கட்டுப்படுத்தியுள்ளார் என்றார். மேலும் கொங்குநாடு விவகாரம் குறித்து கேள்வி கேட்டதற்கு பதிலளித்த அவர், நல்லா இருக்க தமிழ்நாட்டை எதுக்கு பிரிச்சிகிட்டு. நான் அரசியல் பேசல. இதெல்லாம் கேட்கும்போது தலை சுத்துது என்றும் கூறினார்.