ஆம் ஆத்மி ஏற்படுத்திய... சாதகங்களும்...பாதகங்களும்....

ஆம் ஆத்மி ஏற்படுத்திய... சாதகங்களும்...பாதகங்களும்....

குஜராத்தில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் பாஜக, இந்தத் தேர்தலில் மிகப்பெரிய வெற்றியைப் பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  பிரதமர் நரேந்திர மோடியின் முகம், சிறந்த வாக்குசாவடி நிர்வாகம் மற்றும் சமூக ஊடகங்களின் பயன்பாடு ஆகியவை கட்சியின் மிகப்பெரிய வெற்றியை அடைய உதவும். 

தேர்தல் யுக்தி:

எப்போதும் போல இம்முறையும் குஜராத்தையே தனது ஆயுதமாக மாற்றியுள்ளது பாஜக.  மாநிலத் தலைமையை விட்டுவிட்டு, பிரதமர் மோடியின் முகம் பார்த்து வாக்களிக்குமாறு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது.  இது தவிர, சாவடி நிர்வாகத்தை விரிவுபடுத்துவதுடன், சமூக ஊடக தளங்களைப் பயன்படுத்துவதற்கான விரிவான உத்தியையும் உருவாக்கியது பாஜக.  

கண்காணிப்பு:

இதன் காரணமாக , முதல்முறையாக களமிறங்கிய ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாட்டை பா.ஜ.க தொடர்ந்து கண்காணித்து வருகிறது என்ற கருத்து அரசியல் விமர்சகர்களிடையே உள்ளது . 

சாதகமும் பாதகமும்:

உள்ளாட்சித் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி  எதிர்க்கட்சி வாக்குகளைப் பிரித்து பாஜகவுக்கு சாதகமாக மகத்தான வெற்றியை ஏற்படுத்தி கொடுத்தது.  ஆம் ஆத்மிக்கு செல்வாக்கு உள்ள நகர்ப்புறங்களிலும் இம்முறையும் போட்டி மும்முனையாகி, பாஜகவை விட காங்கிரஸுக்குத்தான் ஆம் ஆத்மி அதிக பாதகத்தை ஏற்படுத்தியுள்ளது.

குஜராத்தில் எப்போதும் இருமுனை போட்டி நடைபெறும் வேளயில் தற்போது அது மும்முனை போட்டியாகியுள்ளது.  பாஜகவிற்கான வாக்கு எப்போதும் பாஜகவிற்கு கிடைக்கும் நேரத்தில் பாஜகவின் அதிருப்தி வாக்காளர்களுக்கான வாக்கு இப்போது இரண்டாக உடையும் சூழல் ஏற்பட்டுள்ளது.  

இதனால் ஆம் ஆத்மியும் காங்கிரஸ்ஸும் வெற்றி பெற இயலாத நிலை உருவாகியுள்ளது. தற்போது மூன்றாவது அணியாக களமிறங்கியுள்ள ஆம் ஆத்மி பாஜகவிற்கு சாதகமான சூழலையும் காங்கிரஸ்ஸிற்கு பாதகமான சூழலையுமே உருவாக்கியுள்ளது எனக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:     குஜராத் தேர்தலும்...மூன்று கட்சிகளும்...மூன்று விதமான உணர்வுகளும்....