பிரம்மாண்டமான புயல்கள், காற்றுச் சுழல்கள்...! வியக்கவைக்கும் வியாழன் கோளின் புகைப்படம்..!

பிரம்மாண்டமான புயல்கள், காற்றுச் சுழல்கள்...! வியக்கவைக்கும் வியாழன் கோளின் புகைப்படம்..!

வியாழன் கோளை புகைப்படம் எடுத்து அனுப்பியுள்ளது நாசாவின் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி.

ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி:

இதுவரை இல்லாத அளவிற்கு பால்வளி அண்டத்தில் சூரிய குடும்பம் அல்லாத பல கோள்களை துல்லியமாக கண்டறிய 70 ஆயிரம் கோடி செலவில் ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கியை விண்ணில் செலுத்தியுள்ளது நாசா. இந்த எடை கிட்டத்தட்ட 6000 கிலோ என கூறப்பட்டுள்ளது. இந்த ஆயுட்காலம் 10 ஆண்டும் ஆகும். 

தொலைநோக்கியின் இலக்குகள்:

ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியின் முக்கிய இலக்குகள் இரண்டு. ஒன்று, இந்தப் பேரண்டத்தின் முதல் நட்சத்திரங்களை, அதாவது 13.5 பில்லியன் ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் நட்சத்திரங்களைப் புகைப்படம் எடுப்பது. இன்னொன்று, வாழத்தகுதியான வேற்றுக்கிரகங்களைக் கண்டுபிடிப்பது.

மேலும் படிக்க: இலவசங்களும், வரலாறும்..! இது வரை தமிழக அரசின் இலவசங்கள்..!

முதல் படம்:

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு விண்ணில் செலுத்தப்பட்ட ஜேம்ஸ் வெப் ஸ்பேஸ் தொலைநோக்கி, ஜூலை மாதம் ஒரு புகைப்படத்தை அனுப்பியது. SMACS 0723 என்ற நட்சத்திரக் கொத்தின் புகைப்படம் தான் அது. பல கேலக்ஸிகள் அடங்கிய இந்த கிளஸ்ட்டர் பகுதியை ஜேம்ஸ் வெப் தொலைநோக்கிக்கு முன் உலகின் அதிநவீன தொலைநோக்கியாக இருந்த ஹப்பிள் தொலைநோக்கியும் ஏற்கெனவே புகைப்படம் எடுத்திருந்தது. ஆனால், ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி எடுத்த புகைப்படம் மிகத் தெளிவாக இருந்ததை பார்க்க முடிந்தது.

வியாழன் கோளின் படம்:

இன்று நாசா மீண்டும் ஒரு புகைப்படத்தை இன்று வெளியிட்டுள்ளது. பிரம்மாண்டமான புயல்கள், காற்றுச் சுழல்கள், துருவ ஒளிக்காட்சிகள், அதீத வெப்பம் என பலவும் நடந்துகொண்டிருக்கும் வியாழன் கோளின் புகைப்படம் தான் அது. தற்போது அந்த புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த புகைப்படத்தின் மூலம் வியாழனில் என்ன நடக்கிறது என்பதை விஞ்ஞானிகளால் கூடுதலாக அறிந்துகொள்ள முடியும் என்கிறார்கள்.

புகைப்படம் கூறுவது?:

Near Infrared கேமராக்களால் எடுக்கப்பட்ட இந்த படங்கள், வியாழன் கிரகத்தைத் துல்லியமாகக் காட்டுகின்றன. வியாழன் கிரகத்தில் மிகப் பெரிய சிவப்புப் புள்ளி எப்போதும் தெரியும். பூமியையே விழுங்கிவிடக்கூடிய அளவிலான மிகப் பெரிய சூறாவளி அது. வழக்கமாக சிவப்பில் தெரியும் அந்த சூறாவளி இந்தப் படத்தில் வெள்ளையாகத் தெரிகிறது. சூரிய ஒளியை அதிக அளவில் பிரதிபலிப்பதால் அப்படித் தெரிவதாகச் சொல்கிறது நாசா.

மேலும் படிக்க: கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்.. அடுத்தடுத்து நடைபெறும் திருப்பங்கள்.. ஒருவர் சரண்.. மாணவிகள் வாக்குமூலம்..!

அடுத்த நகர்வு:

இது இல்லாமல் பூமியிலிருந்து 1000 ஒளியாண்டுகள் தொலைவில் இருக்கும் WASP-96 b என்ற பிரமாண்ட கிரகத்தின் வளிமண்டலம் எப்படி இருக்கப்போகிறது என்பதையும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. இது மட்டுமல்லாமல் பல கிரகங்களையும் ஆராயப்போகிறது ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி. அதனால், இந்தப் புகைப்படங்கள் எல்லாம் அதற்கு ஆரம்பமாகவே பார்க்கப்படுகிறது.