பொய்களைப் பரப்புகிறதா பீட்டா? ஜோய்மாலாவுக்கு என்ன தான் நடந்தது?

ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள ஜோய்மாலாவை கொடுமை செய்யும் வீடியோக்கள் வைரலானது, பீட்டாவின் சதி செயல் எனவும், அவை அனைத்தும் பொய் என்றும் கோவில் நிர்வாகம் கூறியுள்ளது.

பொய்களைப் பரப்புகிறதா பீட்டா? ஜோய்மாலாவுக்கு என்ன தான் நடந்தது?

தமிழ்நாட்டில், மிருகங்கள் மீது பல வகையான கொடுமைகள் நடந்து வருவதாக சமீப ஆண்டுகளில் பல முறை, பீட்டா நிறுவனம் குரல் எழுப்பி வருகிறது. மனிதர்கள் போல தான் மிருகங்கள் என்றும், அவற்றிற்கு தேவையான அனைத்து நியாயங்களும் பெறப்படும் என்பது தான் பீட்டாவின் ‘மோட்டோ’வாக இருக்கிறது. ஆனால், இந்த நிறுவனம் எந்த அளவிற்கு உண்மை செய்திகளைப் பரப்புகிறது என்று கேட்டால் அது இன்று வரை புலப்படாத விஷயமாகவே இருக்கிறது.

சர்வதேச நிறுவனமான பீட்டா, வீகன், அதாவது பால் கூட மிருகங்களைத் துன்புறுத்தி பெறப்படும் பொருள் என்பதால், அது கூட உண்ண கூடாது என்ற கருத்துகளைப் பரப்பி வருகிறது. ஆனால், நம் தமிழ்நாட்டில், இந்த தசாப்தம் முதல் பீட்டா மீதான நம்பிக்கை மக்கள் மனதில் குறைந்து விட்டதற்கு ஒரு காரணமும் இருக்கிறது. அது தான் ஜல்லிக்கட்டு பிரச்சனை.

மேலும் படிக்க | மனித எல்லை பிரச்சனைக்கு பலியாக இருந்த யானை!

Tamil Nadu's jallikattu protests to intensify: Here's what will be shut  down | The News Minute

தமிழர்களின் பண்பாட்டைக், காரணமும், சரியான ஆதாரமும் இன்றி கொடூர செயல் செய்யும் விளையாட்டு என்றும், காளைகளைத் துன்புறுத்தும் செயல் எனவும் கூறி, மக்கள் மத்தியில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக புரட்சியைக் கிளப்பியது. ஆனால், மாணவர்கள் நடத்திய போராட்டத்தைத் தொடர்ந்து, அந்த தகவல் பொய் என்றும், பீட்டா மீதான நம்பிக்கையும் தமிழ்நாட்டு மக்கள் மனதில் குறைந்து விட்டது.

இதனைத் தொடர்ந்து, தற்போது மேலும் ஒரு சர்ச்சையில் சிக்கி, மக்கள் மத்தியில் கேள்விக்குறியாக நிற்கிறது அந்நிறுவனம். விருதுநகர் ஸ்ரீவில்லிப்புத்தூரில் உள்ள நாச்சியார் திருக்கோவிலில், ஜோய்மாலா என்ற யானை உள்ளது. அசாமில் இருந்து கொண்டு வரப்பட்ட இந்த பெண் டஸ்கர் யானை, கடந்த 2008ம் ஆண்டு கோவிலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது. கிருஷ்ணரின் கருவறைக்கு அருகில் நிறுத்தப்பட்டிருக்கும் ஜோய்மாலா, சில பாகன்களால், மிகக் கொடூரமான முறையில் தாக்கப்படும் வீடியோக்கள் பீட்டா நிறுவனத்தால் பகிரப்பட்டது.

மேலும் படிக்க | “அதிகாரிகளின் அலட்சியம் வருத்தமளிக்கிறது”- சமூக ஆர்வலர்கள் கவலை!!!

ஜேய்மால்யதா என்ற ஜோய்மாலா, அசாமில் இருந்து, கிரின் மொரன் என்ற இடைத்தரகர் உதவியுடன் தமிழ்நாட்டில் வாங்கியதாக ஒரு தகவல் கூறுகிறது. மற்றொரு தகவல், அசாமில் இருந்து 2011ம் ஆண்டு வெறும் லீசிற்கு ஜோய்மாலா வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் எது உண்மை தகவல் என சரியாக புலப்படாத நிலையில், சுமார் 10 வருடங்களுக்கும் மேலாக ஜோய்மாலா நாச்சியார் திருக்கோவிலில் வசித்து வருகிறாள்.

இதனைத் தொடர்ந்து, பீட்டாவால் பகிரப்பட்ட வீடியோவில், பாகன்கள், குச்சியால் அவளது கால்களை மாறி மாறி அடிப்பது, மரத்தில் கட்டி வைத்து இரண்டு பாகன்கள் தொடர்ச்சியாக தாக்குவது, கட்டிங் ப்ளையர்களால், துன்புறுத்துவது மற்றும், தனது கழிவுகள் மேலேயே 16 மணி நேரம் வரை சங்கிலி போட்டுக் கட்டி வைத்து நிற்க வைப்பது போன்ற காட்சிகள் இருந்தன.

அது மட்டுமின்றி, வடகிழக்கு பகுதியான அசாம் என்ன கூறுகிறது என்றால், லீஸ் காலம் முடிவடைந்து விட்டதாகவும், ஜோய்மாலா சட்டவிரோதமாக அங்கு வைக்கப்பட்டிருப்பதாகவும் கூறியது பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. இது, 1972 வனவிலங்கு பாதுகாப்புச் சட்டத்திற்கு புரம்பானது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால், பலரும் கொந்தளித்து, கோவிலில் இருந்து யானையை மீட்க வேண்டும் என புகார் எழுப்பியதைத் தொடர்ந்து, அசாமில் இருந்து அதிகாரிகள் ஜோய்மாலாவை நேரில் சென்று ஆய்வு செய்துள்ளனர்.

மேலும் படிக்க | இவன் குட்டியானவன் அல்ல.. குள்ளமானவன்.. வெறும் 1.5மீட்டர் தான் உயரம்..!

Tortured jumbo: Assam to move court against TN- The New Indian Express

அப்போது, யானை துறு துறுவென கொஞ்சி விளையாடுவதையும், ஆரோகியமாக இருப்பதையும் பார்த்துள்ளனர். மேலும், அந்த வீடியோ, 2021ம் ஆண்டு எடுக்கப்பட்டதாகவும், அந்த வீடியோ ஆதாரத்தை வைத்து தான், அந்த மோசமான பாகன்கள் வேலையில் இருந்து நீக்கப்பட்டதாகவும் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, ஜோய்மாலா, பத்திரமாகப் பாதுகாக்கப்படுகிறார் எனக் கூறிய நிர்வாகம், அவளுக்காக, தனி குளியல் குளமும், விளையாட்டு நேரமும் ஒதுக்கி, பாகன்கள் பார்த்துக் கொள்வதாகத் தெரிவித்தனர்.

இதனைத் தொடர்ந்து, சரியான ஆதாரம் இல்லாமல் பீட்டா நிறுவனம், பொய் புகார் தங்கள் மீது சுமத்துவதாகவும், குறிப்பிட்டு சில சமூகத்தை மட்டும் தாக்குவதாகவும், கோவில் நிர்வாகம் குற்றம் சாட்டியுள்ளது. அது மட்டுமின்றி, இன்று, செப்டம்பர் ஐந்து அன்று, ஜோய்மாலா துள்ளி குதித்து விளையாடும் வீடியோ எடுக்கப்பட்டு சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.

மேலும் படிக்க | மைசூரு சாலைகளில் கஜபடை!!! தசரா கொண்டாட்டங்கள் தொடக்கம்!!!

--- பூஜா ராமகிருஷ்ணன்