இறையன்பு..சைலேந்திரபாபு.. அசத்தும் முதல்வர்!! காலரை தூக்கி விடும் தமிழர்கள்..

உயர்பதவிகளில் தமிழர்களுக்கு முன்னுரிமை..!

இறையன்பு..சைலேந்திரபாபு.. அசத்தும் முதல்வர்!! காலரை தூக்கி விடும் தமிழர்கள்..

பானிபூரி கடை தொடங்கி இரயில்வே நிலையம் வரை வட மாநிலத்தவர்களின் ஆதிக்கம் தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தமிழ் தெரியாமல் வட மாநில அதிகாரிகள் அதிகாரத்தில் இருப்பதால், சாமானிய மக்களின் பிரச்னைகளை அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில் சிக்கல்கள் இருந்தன. 

உதராணமாக, ஒரு காவல்நிலையத்தில் உயர் அதிகாரியாக ஒரு வடமாநிலத்தவர் இருக்கிறார் என்றால், ஒரு சாமானிய மக்கள் தங்களது புகார்களை கொண்டு செல்கையில், அவர்களுக்கு இடையில் ஒரு மொழிப்பெயர்ப்பாளர் தேவைப்படுகிறார். இவ்வாறு உயர் அதிகாரிகள் பலர் வட மாநிலத்தவர்களாக இருப்பதால், தமிழகத்தில் படித்த இளைஞர்களுக்கும் வேலை வாய்ப்பு இல்லாமல் போய் விடுகிறது. 

கடந்த சில ஆண்டுகளில் ஹிந்தியை திணிக்க மத்திய அரசு பல்வேறு வழிகளில் பல நடைமுறைகளை வழக்கத்திற்கு கொண்டு வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதன் உச்சகட்டம் தான் மும்மொழி கல்விக் கொள்கை, சில மத்திய அரசு பணிகளுக்காக வைக்கப்படும் தேர்வுகளில் ஹிந்தி கட்டாயம் என பல வகைகளில் இன்றளவும் ஹிந்தியை நம்முள் திணிக்க முயற்சிகள் நடந்து கொண்டு தான் இருக்கின்றன.. நாமும் அதனை எதிர்த்து கொண்டு தான் வருகிறோம்..

இந்த வலிகளை உணர்ந்த முதலமைச்சர் ஸ்டாலின், தேர்தல் வாக்குறுதிகளில், வேலைவாய்ப்பில் தமிழில் படித்தவர்களுக்கு முன்னுரிமை, தமிழகத்திலுள்ள தொழில் நிறுவனங்களில் 75 சதவீத வேலைவாய்ப்பு, தமிழை சென்னை உயர் நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக ஏற்க நடவடிக்கை, மிகச் சிறந்த தமிழ் நூல்கள் உலக மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு வெளியிடப்படும் என்று பல்வேறு வாக்குறுதிகளை அளித்தார்.

 

வாக்குறுதிகள் என்னவோ கேட்க அருமையாகத் தான் இருக்கின்றன.. ஆனால் இது நடைமுறைக்கு வருமா என்பதில் மக்களுக்கு சிறு தயக்கம் இருந்து வந்த நிலையில், தலைமைச் செயலாளராக இறையன்புவை நியமித்தது முதல், சட்டம் ஒழுங்கு டிஜிபியாக சைலேந்திர பாபுவை நியமித்தது வரை தமிழர்களுக்கு முன்னுரிமை அளித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். 

ஏற்கனவே டிஜிபியாக இருந்த திரிபாதியின் பதவிக்காலம் முடிவடைந்த நிலையில், புதிய டிஜிபி யார் என்பதில் அனைவரின் கவனமும் திரும்பியது. அதற்கென 7 பேர் கொண்ட பட்டியல் தயார் செய்யப்பட்டு இறுதியில் சைலேந்திர பாபு, சஞ்சய் அரோரா, கரன் சின்ஹா ஆகியோரின் பெயர்ப் பட்டியல் அரசுக்கு அனுப்பப்பட்டது. இறுதியில் தமிழரும், மக்களுக்கு மிகவும் பரிட்சயமாய் இருந்த சைலேந்திர பாபுவை சட்டம் ஒழுங்கு டிஜிபியாக அறிவித்தது அரசு. 

தனது வாக்குறுதிகளை தலைவன் பின்பற்றினால் தான் அடிமட்டத் தொண்டன் வரை அனைவரும் பின்பற்றுவார்கள் என்பதை முதலமைச்சர் ஸ்டாலின் உணர்ந்திருக்கிறார். தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வண்ணம் தமிழகத்தின் இரு பெறும் உயர் பதவிகளை தமிழர்களுக்கே கொடுத்து அசத்தியுள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின்..