நிரூபிக்க தவறிய காங்கிரஸ்...ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்...மக்களவை தேர்தல்2024??!!

நிரூபிக்க தவறிய காங்கிரஸ்...ஒன்றிணையுமா எதிர்க்கட்சிகள்...மக்களவை தேர்தல்2024??!!

குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெற்றாலும், டெல்லி மாநகராட்சியிலும், இப்போது இமாச்சலப் பிரதேச சட்டமன்றத் தேர்தலிலும் பாஜக தோல்வியடைந்தது, மிஷன் 2024க்கான எதிர்க்கட்சிகளின் நம்பிக்கையை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது.  

முட்கள் நிறைந்த பாதை:

ஆனால், தற்போது எதிர்க்கட்சிகளின் ஒற்றுமைப் பாதையில் முட்கள் மட்டுமே உள்ளன. எதிர்க்கட்சிகளின் தலைமைப் பிரச்சினை இன்றளவும் ஒரு கேள்வியாகவே உள்ளது மேலும் குஜராத்தில் ஆம் ஆத்மி கட்சியின் செயல்பாடு இந்த பிரச்சினையை மேலும் சிக்கலாக்கியுள்ளது.

சமநிலையான பாஜக:

இரு மாநில சட்டசபை தேர்தல் மற்றும் இடைத்தேர்தல் முடிவுகள் எதிர்க்கட்சிகளுக்கு பெரிய பின்னடைவை ஏற்படுத்தவில்லை.  குஜராத், ஹிமாச்சல பிரதேசங்களில் பாஜக பெற்ற அமோக வெற்றியும், டெல்லியில் தோல்வியும் அரசியல் சமநிலையை உருவாக்கியுள்ளது.  ஒவ்வொரு தேர்தலிலும் ஆட்சியை மாற்றும் மரபு ஹிமாச்சலில் இருந்து வருகிறது என்று கூறி ஹிமாச்சலில் பாஜகவின் தோல்வியை குறைத்து மதிப்பிட முடியாது.  

எதிர்க்கட்சிகள் ஒற்றுமை:

கடந்த 8 ஆண்டுகளாக பாஜகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைய முயற்சித்து தொடர்ந்து தோல்வியடைந்தே வருகின்றன.  இம்முறையும் அதற்கான வலுவான வாய்ப்புகள் தென்படவில்லை. தொடர்ந்து வலுவிழந்து வரும் காங்கிரசும், எதிர்க்கட்சியை வழிநடத்தும் உரிமையை கைவிட விரும்பவில்லை.  மற்றொரு புறம், மமதா பானர்ஜி, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் கே சந்திரசேகர் ராவ் ஆகியோர் காங்கிரஸ்-பாஜக அல்லாத கட்சிகளை இணைத்து தலைமை வகிக்கவே விரும்புகிறார்கள். 

மேலும் தெரிந்துகொள்க:  எதிர்க்கட்சிகளுடன் ஒன்றிணையாத ஜெகன்மோகன், நவீன், மாயாவதி!!! காரணம் என்ன??

பாஜகவுக்கு எதிராக ஒன்றுபடுவதற்குப் பதிலாக எதிர்க்கட்சிகள் பல்வேறு நாடகங்களை நடத்தி வருகின்றன.  இந்த நாடகங்களுக்கு பின்னால், மைய அரசியலை வழிநடத்தும் அனைவரது லட்சியமும் உள்ளது.  எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் முயற்சியில் கெஜ்ரிவால் தொடர்ந்து விலகியே இருக்கிறார். மம்தா, கேசிஆர், சரத் பவார் ஆகியோர் மாநிலங்களில் கட்சித் தலைவர் தலைமையில் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்றே விரும்புகிறார்கள். 

சாத்தியமாகுமா?:

குஜராத்தில் நடந்த மோசமான தோல்வி,  நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததன் வெற்றியைக் கெடுத்துவிட்டது.  ஹிமாச்சலில் வெற்றியுடன் குஜராத்திலும் காங்கிரஸ் சிறப்பாக செயல்பட்டிருந்தால், அது ஒரு நேர்மறையான எண்ணத்தை உருவாக்கியிருக்கும். குறிப்பாக ஆம் ஆத்மியின் பெருகிவரும் ஊடுருவல் அதன் கவலையை அதிகரிப்பது மட்டுமன்றி, எதிர்காலத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணியை காங்கிரஸ் வழிநடத்தும் என்ற கூற்றையும் பலவீனப்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செயல்பாடுகள் 2024 மக்களவை தேர்தலில் கேள்வியை எழுப்பியுள்ளது.  பாஜகவிற்கான நிலைப்பாட்டை இது மேலும் வலுப்படுத்துவதாகவே அமைந்துள்ளது.  எதிர்க்கட்சிகள் ஒன்றாக இணைந்து ஒரே தலைமையில் போட்டியிட்டால் மட்டுமே பாஜகவை தோற்கடிக்க முடியும் என்ற உண்மையை குஜராத் தேர்தல் காட்டியுள்ளது என அரசியல் விமர்சகர்கள் தெரிவித்துள்ளனர்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:  காங்கிரசின் படுதோல்வியும் தொடர் அவமானங்களும்...விமர்சனங்களை துடைக்குமா!!!