குஜராத்தில் மௌனம் காக்கும் காங்கிரஸ்..!!!தேர்தல் திட்ட வியூகமா?!!

குஜராத்தில் மௌனம் காக்கும் காங்கிரஸ்..!!!தேர்தல் திட்ட வியூகமா?!!

குஜராத்தில் தேர்தல் தேதி அறிவிக்கப்படாத நிலையில், தேர்தல் களத்தில் மூலை முடுக்கெல்லாம் தீவிர பிரச்சாரம் நடைபெற்று வருகிறது. 

காங்கிரஸின் மௌனம்:

குஜராத் தேர்தல் காலத்தில் அனைத்து அரசியல் கட்சிகளும் முழு வீச்சில் பிரச்சாரம் செய்து வருகின்றன. ஆனால் இது வரை நாட்டின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் அதற்கான எந்த முயற்சியையும் தொடங்கவில்லை.  

காங்கிரசின் இந்த மௌனத்திற்கு என்ன காரணம் என்ற விவாதம் தற்போது பரபரப்பாக நடந்து வருகிறது. காங்கிரஸின் இந்த மௌனத்தை, அரசியல் வல்லுநர்கள் அரசியல் களத்தில் எடுத்துக்கொள்வது போல், பிரதமர் மோடியும் தீவிரமாக எடுத்துக் கொள்வதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக:

பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா முதல் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், தேசியத் தலைவர் ஜேபி நட்டா வரை பாஜகவின் அனைத்து மத்திய அமைச்சர்கள், எம்பிக்கள் குஜராத் தேர்தலில் பாஜக சார்பில் தொடர்ந்து பேரணிகள் நடத்தி வருகின்றனர். 

ஆம் ஆத்மி:

ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் முதல் டெல்லியின் துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா மற்றும் கட்சியின் அனைத்து எம்.பி.க்கள் முதல் மற்ற பெரிய தலைவர்கள் வரை குஜராத் தேர்தல் களத்தில் பொதுமக்களை சந்தித்து பிரச்சாரம் செய்து வருகின்றனர். 

இதையும் தெரிந்துகொள்க:      ”குஜராத்தில் 'புதிய இன்ஜின்' அரசு வேண்டும்....” கெஜ்ரிவால் பிரச்சாரம்!!!

ஒவைசி:

குஜராத்தில் இரண்டு பெரிய கட்சிகளைத் தவிர, குஜராத்தின் அரசியல் சூழலை உணர்ந்து பேரணிகள் மூலம் அசாதுதீன் ஒவைசியின் கட்சியும் தேர்தல் களத்தில் நுழைந்துள்ளது.

என்ன செய்கிறது காங்கிரஸ்?:

குஜராத்தில் தேர்தல் சூழல் உச்சத்தில் இருந்தாலும், காங்கிரசில் இருந்து ஆக்ரோஷமான பேரணிகளோ, பெரிய தலைவர்களின் வருகையோ, கூட்டங்களோ  தொடங்கவில்லை என்பதுதான் ஆச்சரியம். இப்போது காங்கிரஸ் கட்சியின் மௌனம் அரசியல் களத்தில் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகிறது. இதை காங்கிரஸ் திட்டமிட்டே செய்கிறது என்கின்றனர் அரசியல் நிபுணர்கள். 

இதற்குப் பின்னால் வாதிடும் மூத்த பத்திரிக்கையாளரும் அரசியல் விமர்சகருமான யு.சி. படேல் கூறுகையில், ”மாநிலத்தில் சாதி சமன்பாடுகள் மற்றும் பிராந்திய சமன்பாடுகளின் அடிப்படையில் மற்ற கட்சிகள் எவ்வளவு வலுவாக களமிறங்குகின்றன என்பதை காங்கிரஸ் பொறுமையாக புரிந்து கொள்ள முயற்சிக்கிறது.” எனக் கூறியுள்ளார்.

மௌனம் பலன் தருமா?:

இந்த மௌனம் காங்கிரஸுக்கு சில சமயங்களில் ஆதாயமாக இருந்தாலும் பெருமளவில் தீமையாகவே இருக்கும் என்கிறார் அரசியல் விமர்சகர் படேல். 

உண்மையில் குஜராத் அரசியலில் ஆம் ஆத்மி கட்சியின் பலமும், அசாதுதீன் ஒவைசியின் பிரவேசமும் காங்கிரஸின் வாக்கு வங்கியை உடைத்துவிட்டது என்று மூத்த பத்திரிகையாளர் சரோஜ் தேசாய் கூறியுள்ளார்.  உடைந்த வாக்கு வங்கியை சரியாக நிர்வகித்து அதை தனது கணக்கில் சேர்க்க காங்கிரஸ் வேறு சில நிலைகளை விட வலுவாக முயற்சித்து வருவதாகவும் தேசாய் தெரிவித்துள்ளார். 
மற்ற அரசியல் கட்சிகளைப் போல அல்லாமல் இவ்வளவு பெரிய அரசியல் கட்சியின் மௌனம் நிச்சயமாக ஏதோ ஒரு பெரிய திட்டத்தின் வெளிபாடாகவே இருக்கும் எனவும் தேசாய் கூறியுள்ளார்.

எச்சரிக்கையான மோடி:

காங்கிரஸின் இந்த அரசியல் மௌனத்தில், நாட்டின் பிரதமர் நரேந்திர மோடிக்கும் சிறிது அச்சம் ஏற்பட்டுள்ளதாகவே தெரிகிறது.  பிரதமர் நரேந்திர மோடியும் குஜராத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட பேரணியில் காங்கிரஸின் இந்த மௌனம் குறித்து மிகவும் கவனமாக இருக்குமாறு  தனது தொண்டர்களை கேட்டுக் கொண்டுள்ளார். 

காங்கிரஸ் கட்சியினர் கிராமம் தோறும் சென்று வருகிறார்கள் என்று மோடி கூறியுள்ளார்.  இவ்வளவு பெரிய கட்சி ஏன் இதுவரை தேர்தல் களத்தில் இறங்கவில்லை என்று கூறிய மோடி விழிப்புடன் இருக்குமாறும் தேர்தல் களத்தில் பாஜகவை வெற்றிபெறச் செய்ய முன்வருமாறும் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதையும் படிக்க:   ”மோடி அரசு 10 நாட்கள், 10 மாதங்கள் மற்றும் 10 ஆண்டுகள்......” இளைஞர்களுடன் உரையாடிய எஸ். ஜெய்சங்கர்!!!