காங்கிரஸ் ஒருபோதும் இந்தியை ஆதரித்தது இல்லை...!

காங்கிரஸ் ஒருபோதும் இந்தியை ஆதரித்தது இல்லை...!

காங்கிரஸ் கட்சி ஒரு காலத்திலும் இந்தி திணிப்பை ஆதரித்தது கிடையாது என தமிழக் காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

ஸ்டாலினை சந்தித்த கே. எஸ்.அழகிரி:

திமுக தலைவராக இரண்டாவது முறை தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை, காங்கிரஸ் கட்சி சார்பில் தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே. எஸ்.அழகிரி, முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, திருநாவுக்கரசர், ஈ.வி.கே. எஸ்.இளங்கோவன், தங்கபாலு உள்ளிட்டோர் சென்னை அண்ணா அறிவாலயத்தில் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர். அதன்பின்னர் செய்தியாளர்களை சந்தித்த கே. எஸ்.அழகிரி, இரண்டாவது முறையாக திமுக தலைவரான மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து தெரிவித்தாக கூறிய அவர், ஸ்டாலின் சிறந்த இடத்தை அடைந்திருப்பதாக தெரிவித்தார். 

இதையும் படிக்க: அரியலூரில் எழுச்சி நடைப்பயணம்...ஏன் தெரியுமா?அன்புமணி ராமதாஸ் அறிக்கை!

இந்தியை எதிர்ப்பது வெறும் நாடகம்:

தொடர்ந்து பேசிய அவர், இந்தியை திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்ப்பது வெறும் நாடகம் எனவும்,  அப்படி என்றால் காங்கிரஸ் உடன் எப்படி கூட்டணி வைக்கலாம் எனவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார். ஆனால், காங்கிரஸ் கட்சி ஒரு காலத்திலும் இந்தி திணைப்பை ஆதரித்தது கிடையாது என்றும், பிரதமர் மோடி மற்றும் மத்திய அமைச்சர் அமித்ஷா- வை போன்று  இந்தி அனைத்து இடங்களிலும் இருக்க வேண்டும் என ராஜீவ் காந்தி கூறியதில்லை என்றும் தெரிவித்தார். 

முன்னுக்கு பின் முரணாக பேசும் பாஜக:

அதேபோன்று, ஐபி எஸ் முடிக்கிற வரை இந்தி தெரியாது என அண்ணாமலை சொன்னார். அதுதான் நேருவின் பெருமை  எனவும், அமித்ஷா சொல்வது போல் இருந்தால் அண்ணாமலையால் உயர்க்கல்வி கற்றிருக்க முடியாது எனவும் கூறிய கே. எஸ்.அழகிரி, இந்தி விவகாரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் முன்னுக்கு பின் முரண்பாடாக பேசி வருவதாகவும், அவர்கள் வரலாற்றை பின்னோக்கி பார்க்க வேண்டும் எனவும் குற்றம் சாட்டி பேசினார்.