GO BACK MODI வேண்டாம்!  நிர்வாகிகளுக்கு கறாராக கட்டளை போட்ட திமுக தலைமை! 

தமிழகம் வரும் பிரதமர் மோடியை விமர்சித்து, எந்த பதிவும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என கட்சியினருக்கு திமுக தலைமை கடுமையாக ஆர்டர் போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

GO BACK MODI வேண்டாம்!  நிர்வாகிகளுக்கு கறாராக கட்டளை போட்ட திமுக தலைமை! 

தமிழகம் வரும் பிரதமர் மோடியை விமர்சித்து, எந்த பதிவும் சமூக வலைதளங்களில் பதிவிட வேண்டாம் என கட்சியினருக்கு திமுக தலைமை கடுமையாக ஆர்டர் போட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியாகி உள்ளது. 

மோடி தமிழகம் வரும் போதெல்லாம் மோடிக்கு எதிரான அலை வீசுவது வழக்கமான ஒன்றாகவே மாறிவிட்டது.ஆர்வக்கோளாறில் ஐடி விங் நிர்வாகிகளில் ஒரு சிலர், மோடியை எதிர்த்து டிவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கருத்து பதிவிடக் கூடும் என்பதால் முன் கூட்டியே இது பற்றி அறிவுறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

கடந்த காலங்களில் பிரதமர் மோடி தமிழகம் வருகை தந்த போது GO BACK MODI  என்ற ஹேஷ்டேக்கை டிரெண்ட் செய்த திமுக கருப்பு பலூன்களை பறக்கவிட்டது. அதுமட்டுமல்லாமல் சமுக வலைத்தளங்களிலும் BACK MODI  என்ற ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.அப்போது நாட்டின் பிரதமர் என்றும் பார்க்காமல் திமுக அரசியல் உள்நோக்கத்துடன் இப்படி நடந்து கொள்கிறது என்றும் பாஜக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் திமுகவை கடுமையாக விமர்சித்தன.

இந்நிலையில் தான்  பிரதமர் மோடி எங்களுக்கு எதிரியே அல்ல, இந்துத்துவா தான் எங்களுக்கு எதிரி. எனவே தமிழகம் வருகின்ற பிரதமரை நாங்கள் வரவேற்கிறோம். அவர் இப்போது எங்களுக்கு " கெஸ்ட் " எனவே அவருக்கு எதிராக கருப்புக் கொடி காட்ட வேண்டிய அவசியம் திமுகவுக்கு இல்லை என ஆர். எஸ் பாரதி அந்தர் பல்டி அடித்துள்ளார்.

தற்போது தமிழகத்தில் புதிதாக கட்டப்படுள்ள 11 மருத்துவக்கல்லூரிகளை திறந்து வைப்பதற்காக ஜனவரி 12-ம் தேதி மதுரை வருகிறார் பிரதமர் மோடி. அங்கிருந்து அவர் விருதுநகர் செல்வதற்கான முன்னேற்பாடுகளை பிரதமர் அலுவலகமும் தமிழக அரசும் செய்து வருகிறது. பொங்கல் பரிசாக தமிழகத்திற்கு 11 மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் மோடி தருவதாக பாஜகவினர் பரப்புரை செய்து வருகின்றனர். பிரச்சனை வேண்டாம் என நினைத்து  திமுகவினரும் சமூகவலைதளங்களில் பதிலடி கொடுத்து வருகின்றனர். 

 இதனால் பொங்கலுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழகம் வரும் பிரதமர் மோடிக்கு இந்தமுறை வரவேற்பு மழை மட்டுமே பொழியவிருக்கிறது என்றே கூறப்படுகிறது.மருத்துவக்கல்லூரிகளுக்கான கட்டிட கட்டுமானப்பணி அதிமுக ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது என்பதால், அவர்கள் தரப்பிலும் பிரதமர் மோடியை வரவேற்க தயாராகி வருகின்றனர் என ஒரு தகவலும் வெளியாகி உள்ளது.