இவரை நினைவிருக்கிறதா...?

இவரை நினைவிருக்கிறதா...?

5 ஆண்டுகளுக்கு முன்னர் தீடீரென ஒரு நாள் இவர் தமிழ்நாடெங்கும் பிரபலமானார். செய்தி தொலைக்காட்சிகளிலும் சமூக வலைதளங்களிலும் இவரது முழக்கம் ஓங்கி ஒலித்து. தமிழ் ஊடகங்கள் மட்டுமின்றி இந்திய அளவிலான ஊடகங்களும் இவரை உற்று நோக்கின. 

இதற்கெல்லாம் காரணம் அவர் முழங்கிய ஒரு வாக்கியம். ஆம் பாசிச பாஜக ஒழிக என்ற ஒற்றை வாக்கியம் தான் இவரை அப்போதைய ஊடகங்களும் சமூக வலைதளங்களும் திரும்பிப் பார்க்க காரணமாக இருந்தன. 2018 ஆம் ஆண்டு மே மாதம் 22 ஆம் நாள் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் 15 போராட்டக்காரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பலர் படுகாயமடைந்தனர். காவல் துறையின் காட்டு மிராண்டி தனமான இந்த தாக்குதலுக்கு உலகெங்கும் பல கண்டனக் குரல்கள் எழுந்தன. தமிழ்நாடு முழுவதும் இச்சம்பவத்தை கண்டித்து போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. பின்னர் தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையை மூடி உத்தரவிட்டது. Sterlite protest in Thoothukudi: 34 still named as history-sheeters- The  New Indian Express

அந்த சமயத்தில் தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சியில் இருந்தது. அதிமுகவுடன் பாஜகவும் கூட்டணியில் இருந்ததுடன் மத்தியில் ஆட்சியிலும் இருந்தது. இதனால், அதிமுக பாஜக கூட்டணி தமிழ்நாட்டு மக்களிடையே கடுமையான எதிர்ப்பை சந்தித்தது.

அதன் ஒரு பகுதியாகத்தான் சோபியாவின் குரல் அப்போது ஒலித்தது. 2018 ஆம் ஆண்டு சென்னையில் இருந்து தூத்துக்குடி சென்ற விமானத்தில் அப்போதைய பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் பயணம் செய்து கொண்டிருந்தார். அப்போது அதே விமானத்தில் பயணித்த லூயிஸ் சோபியா என்ற மாணவி பாஜகவை விமர்சிக்கும் விதமாக "பாசிச பாஜக ஒழிக" என முழக்கமிட்டார். இது அங்கிருந்த தமிழிசை சௌந்தரராஜனுக்கு கோபத்தை மூட்டியது. சோஃபியா:'பாசிச பாஜக ஒழிக' என கோஷம் எழுப்பிய பெண் கைது - BBC News தமிழ்

பின்னர் தூத்துக்குடி விமான நிலையம் வந்ததும் அவர் மீது தமிழிசை சௌந்தரராஜன் விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகளிடம் புகாரளித்தார். இது தொடர்பாக அவரை தூத்துக்குடி போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். இந்நிலையில் இவர் பாசிச பாஜக ஒழிக என அவர் எழுப்பிய முழக்கம் சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து அவர் மிகவும் அறியப்பட்ட நபராக மாறினார்.

இந்நிலையில் இவர் தன் மீதான வழக்கில் இருந்து விடுவிக்குமாறு உயர்நீதி மன்ற மதுரைக்கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இவ்வழக்கை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதியரசர் தனபால் இவ்வழக்கிலிருந்து சோபியாவை விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளார். இந்த வழக்கில் தூத்துக்குடி காவல்துறை சென்னை பெருநகர காவல்துறை பயன்படுத்தக்கூடிய சட்ட பிரிவினை பயன்படுத்தி உள்ளதாக அரசு தரப்பு வழக்குரைஞர் முன் வைத்த வாதத்தை ஏற்று இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

-ச.பிரபாகரன்

இதையும் படிக்க:சுங்கச்சாவடி ஊழியர்களின் அராஜகங்கள்...லாரி ஓட்டுனரை வெறிகொண்டு தாக்கிய ஊழியர்!!