“கட்டாய மௌனத்தால் இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது...” சோனியா காந்தி!!

“கட்டாய மௌனத்தால் இந்தியாவின் பிரச்சனைகளை தீர்க்க முடியாது...” சோனியா காந்தி!!

மத்தியில் ஆட்சியில் இரு க் கும் பிரதமர் மோடி தலைமையிலான அரசு, இந்திய ஜனநாய கத்தின் மூன்று தூண் களையும் திட்டமிட்டு சிதைத்துள்ளது. 

தலையங் கம்:

காங் கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ஆங் கில நாளிதழு க் கு எழுதிய தலையங் கத்தில் பிரதமர் நரேந்திர மோடியையும், மத்திய அரசையும் குறி வைத்து விமர்சித்துள்ளார்.  ' கட்டாய மௌனத்தால் இந்தியாவின் பிரச்சனை களை தீர் க் க முடியாது' என்ற தலைப்பில் அவர் எழுதியுள்ள கட்டுரையில், பிரதமர் நரேந்திர மோடியின் அறி க் கை கள் அன்றைய மி க மு க் கியமான பிரச்சினை களை புற க் கணி க் கவோ அல்லது திசை திருப்பவோ முனை கின்றன என எழுதியுள்ளார்.

திட்டமிட்டு:

இந்திய ஜனநாய கத்தின் மூன்று தூண் களையும் அரசாங் கம் திட்டமிட்டு சிதைத்துள்ளது எனவும் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நடந்த சம்பவங் களையும் சோனியா குறிப்பிட்டு இவை அனைத்தும் அமர்வு களை சீர் குலை க் கும் அரசாங் கத்தின் உத்தியே என க் கூறியுள்ளார்.  மேலும் வேலையில்லாத் திண்டாட்டம், பணவீ க் கம், பட்ஜெட், அதானி ஊழல், சமூ கப் பிளவு போன்ற பிரச்னை களை எழுப்புவதில் இருந்து எதிர் க் கட்சி கள் தடு க் கப்பட்டனர் எனவும் தெரிவித்துள்ளார்.

திசைதிருப்பும் செயல்:

அரசாங் கம் தனித்துவமான நடவடி க் கை களை மேற் கொள் கிறது என க் கூறி த குதி நீ க் கம் மற்றும் அவரது உரையின் சில ப குதி களை நாடாளுமன்ற பதிவேட்டில் இருந்து நீ க் கியது ஆ கியவற்றை க் குறிப்பிட்டு எழுதியுள்ளார்.  மேலும் வலுவான எதிர்ப்பை எதிர் கொள்ள மத்திய அரசு தனித்துவமான நடவடி க் கை களை மேற் கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பட்ஜெட்டில் இருந்து ம க் களின் கவனத்தைத் திசைதிருப்பவே இதுபோன்ற பல பிரச்சினை களை இந்திய பிரதமர் எழுப்பினார் என க் கூறிய சோனியா காந்தி பட்ஜெட்டில் சுமார் 45 லட்சம் கோடி ரூபாய் செலவு திட்டமிடப்பட்டதா கவும் கவனத்தை திசை திருப்பியதன் மூலமா க ம க் களின் பணத்தில் ரூ.45 லட்சம் கோடி பட்ஜெட் விவாதம் ஏதுமின்றி நிறைவேற்றப்பட்டது எனவும் சோனியா காந்தி எழுதியுள்ளார். 

தவறான பயன்பாடு:

மேலும், 'விசாரணை நிறுவனங் களை தவறா க பயன்படுத்துவது' குறித்தும் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார் சோனியா காந்தி. அதில் 95 சதவீதத்து க் கும் அதி கமான அரசியல் வழ க் கு கள் எதிர் க் கட்சி கள் மீது மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளன எனவும் அதே நேரத்தில் பா.ஜ. க.வில் இணைந்தவர் கள் மீதான குற்றச்சாட்டு கள் அனைத்தும் திடீரென காணாமல் போனதா கவும் அதேவேளை ஊட கங் களு க் கு அச்சுறுத்தல் விடுத்து ஊட க சுதந்திரத்தை அரசாங் கம் பறித்துள்ளதா கவும் தெரிவித்துள்ளார்.

கை கோர்த்து:

சீனாவுடனான எல்லைப் பிரச்சனையில் கூட அவர் கள் உண்மையைப் பேசுவதில்லை எனவும் வரும் நாட் கள் மி க மு க் கியமானவை என்றும் ஒருமித்த கருத்துள்ள கட்சி களுடன் கை கோர்த்து இந்திய அரசியலமைப்பு சட்டத்தை பாது கா க் காங் கிரஸ் கட்சி அனைத்து முயற்சி களையும் எடு க் கும் எனவும் சோனியா எழுதியுள்ளார். 

-நப்பசலையார்

இதையும் படி க் க:   “தலைவர் என்பவர் பாரபட்சமற்றவரா க இரு க் க வேண்டும்......” காங் கிரஸ் கண்டனம்!!