குஜராத் தேர்தல்....இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான போராட்டம் அல்ல....உணர்ச்சிமயமான போராட்டம்!!!

குஜராத் தேர்தல்....இது வெறும் ஆட்சி அமைப்பதற்கான போராட்டம் அல்ல....உணர்ச்சிமயமான போராட்டம்!!!

குஜராத் சட்டசபை தேர்தல் மாநிலத்தில் ஆட்சி அமைப்பதற்கான போராட்டம் மட்டுமல்ல. தற்போதைய அரசியல் சூழ்நிலையில் மிக உயரமான தலைவர் என்ற இடத்தைப் பிடித்திருக்கும் பிரதமர் நரேந்திர மோடியின் பிம்பத்தை வலுப்படுத்துவதற்கான போராட்டமும் கூட.  

குஜராத்தில் ஆட்சி:

பிற கட்சியின் தலைவர்களுக்கு  ஆட்சியை குஜராத்தில் அமைக்க வேண்டும் என்பது மட்டுமே நோக்கமாக இருக்கும் வேளையில் மோடி அவரை தேசிய தலைவராக மக்கள் தலைவராக அவரை நிரூபிக்கும் நெருக்கடியான சூழலில் இருக்கிறார்.  உலகின் முக்கிய அமைப்பான ஜி-20ன் தலைமையை இந்தியா ஏற்றுள்ள இந்த தருணத்தில் பிரதமர் மோடியின் விளக்குக்கு குஜராத் மக்கள் எவ்வளவு பிரகாசம் கொடுக்கப் போகிறார்கள் என்பதை டிசம்பர் 8 ஆம் தேர்தல் முடிவுகள் தீர்மானிக்கும்.  

மேலும், 2024 மக்களவை தேர்தலுக்கு முன், டெல்லியின் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் அரசியல் ஆசை எந்தளவுக்கு நிறைவெறும் என்பதும் தெரியவரும்.  மறுபுறம், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தேர்தலில் குறிப்பிடத்தக்க வெற்றி மூலம் கட்சியில் தன்னை நிரூபிக்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

பலிக்குமா மோடி நாமம்:  

ஒரு வலுவான உலகத் தலைவராக பிரதமர் மோடியின் பிம்பம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.  குஜராத் தேர்தலின் போது ஜி-20ன் தலைவர் பதவி வகித்தது அவரது அரசியல் பளபளப்பை மேலும் கூட்டியுள்ளது. இந்நிலையில், அரசியல் விமர்சகர்களின் கருத்துப்படி, குஜராத்தில் பா.ஜ.க.வின் இடங்கள் குறைந்தாலும், பிரதமர் மோடியின் தேசியம் மட்டுமின்றி, உலகளாவிய இமேஜும் பாதிக்கும் என்பது பாஜகவுக்கு நன்றாகவே தெரியும்.  

2024 மக்களவைத் தேர்தல் குறித்தும் பல்வேறு விளக்கங்களும் எதிர்பார்ப்புகளும் தொடங்கும். எனவே, குஜராத் தேர்தல் முழுவதும் பிரதமர் மோடியின் பெயரை முன்னிறுத்தி பாஜக போட்டியிட்டுள்ளது.  மாநிலத்தில் மீண்டும் ஆட்சிக்கு வர வேண்டும் என்பதில் மோடி தனது முழு பலத்தையும் செலுத்தியுள்ளார்.

பாஜகவின் பகடை:

குஜராத்தின் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில்,  பிரதமர் மோடியின் முகத்தை பார்த்து வாக்களியுங்கள் என்றே வாக்காளர்களுக்கு பாஜக வேண்டுகோள் வைத்தது.  முதல் கட்ட தேர்தலில் குறைந்த வாக்குப்பதிவு என்ற அச்சத்தின் மத்தியில், கட்சித் தொண்டர்களை ஊக்குவிக்கும் வகையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவுக்கு முன்னதாக பிரதமர் மோடி மீண்டும் மாநில அலுவலகத்திற்கு வந்து அவர்களை ஊக்கப்படுத்தினார்.  

மாநிலத்தில் தொடர்ச்சியான ஏழாவது வெற்றியைப் பெறவும் மோடியின் அந்தஸ்தைத் தக்கவைக்கவும் கடைசிக் கணம் வரை போராடிக் கொண்டிருப்பதாகவே தோன்றியது.

கௌரவ பிரச்சினை:

குஜராத் தேர்தலை காங்கிரஸ் எப்படி கவுரவப் பிரச்சினையாக்கியது என்பதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.  இந்திய ஒற்றுமை பயணத்தை மேற்கொள்ளும் ராகுல் காந்தி, ஹிமாச்சல் தேர்தலில் பங்கேற்கவில்லை.  ஆனால் குஜராத் வந்து தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொண்டார்.  மல்லிகார்ஜுன் கார்கேவும் தேர்தலுக்கு முன்னர் காங்கிரஸின் புதிய தேசியத் தலைவராக அதிரடியாகப் பதவியேற்றார்.

வலுவான தலைவர்கள் காங்கிரசை விட்டு வெளியேறினாலும், குஜராத் மாநில காங்கிரஸ் முழு பலத்துடன் போராடியது.  முந்தைய செயல்பாடுகளை மீண்டும் செய்தாலும் அல்லது அதிக இடங்களைப் பெற்றாலும் கூட, காங்கிரஸ் தலைமையின் அந்தஸ்து அதிகரிக்கும்.

உயரம் இருக்கையின் எண்களால்:

மூன்றாவது முக்கிய போட்டியாளர் ஆம் ஆத்மி.  மாநிலத்தில் உள்ள ஆட்சிக்கு எதிரான உணர்வுகளை காங்கிரஸே சரியாக பயன்படுத்த தவறிய வேளையில் ஆம் ஆத்மி அதற்கு சாதகமாகப் பயன்படுத்த முயன்ற விதம் அனைவரையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்தது.  பாஜகவே கலங்கியது என்பதில் எவ்வித சந்தேகமுமில்லை.  

குஜராத்தின் வெற்றியின் மூலம் ஆம் ஆத்மிக்கு தேசிய அந்தஸ்து கிடைத்தாலும், அது பெரிய சாதனையாக இருக்காது.  2024 மக்களவை தேர்தலில் பெரிய சவாலாக மாற, கெஜ்ரிவால் முயற்சி செய்வார்.  சூரத் நகர தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி முக்கிய எதிர்க்கட்சி அந்தஸ்தை பெறுவதில் வெற்றி பெற்றது என்பது கவனிக்கத்தக்கது.

மூன்று உணர்வுகள்:

மும்முனை போட்டியை சந்தித்துள்ள குஜராத் தேர்தல் மூன்று விதமான உணர்வுகளை வெளிப்படுத்தும் விதமாகவே உள்ளது.  பாஜக தாங்கள் மக்களுக்கான கட்சி தான் என்பதை நிரூபிக்கும் கட்டாயத்தில் உள்ளது.  அதோடு மோடி அவரது உலகளாவிய பிம்பத்தை காப்பாற்ற வேண்டிய சூழலில் இருக்கிறார்.  காங்கிரஸ் மிகப்பெரிய வீழ்ச்சியில் இருந்து எழுந்து அதை நிரூபிக்கும் நிலையில் உள்ளது.  

ஆம் ஆத்மி தன்னை தேசிய கட்சியாக நிலைநிறுத்தும் இக்கட்டான தருணத்தில் உள்ளது. குஜராத் தேர்தலில் ஆம் ஆத்மி வெற்றி பெற்றாலும் எதிர்க்கட்சியாக மாறினாலும் காங்கிரஸின் எதிர்காலம் மிகப்பெரிய கேள்விக்குறியாகி விடும் என்பதில் எந்த சந்தேகமுமில்லை எனக் கூறுகின்றனர் அரசியல் விமர்சகர்கள்.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   சீனாவில் உருவாக்கப்பட்ட கொரோனா வைரஸ்...நிதியுதவி செய்த அமெரிக்கா...உண்மையில் நடந்தது என்ன?!!