கருமம் கருமம்!! ஆபாசமா பேசி பேசியே ஆடி காரு... கூட பொண்டாட்டி!! இந்த கேவலத்தை திரும்பவும் வந்து பண்ணுவாராம் மதன்

தலைமறைவாகி உள்ள யூட்யூபர் மதன், தான் ஒரு சமூக ஆர்வலர் என மோசடி செய்து அதன் மூலம் கிடைத்த பணத்தில் சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளார். 

கருமம் கருமம்!! ஆபாசமா பேசி பேசியே ஆடி காரு... கூட பொண்டாட்டி!! இந்த கேவலத்தை திரும்பவும் வந்து பண்ணுவாராம் மதன்

சேலத்தை சேர்ந்த மதன், பப்ஜி, ஃப்ரீ பயர் போன்ற விளையாட்டுகளில் அதீத ஈடுபாடு கொண்டவர். இந்த விளையாட்டுகள் இளம் பருவத்தினர் மத்தியில் அமோக வரவேற்பு பெற்றது. எதிரிகளை தேடிப்பிடித்து சுட்டு வீழ்த்தும் சாகசங்கள் நிறைந்த இந்த விளையாட்டுகளில் மூழ்கும் பதின்பருவத்தினர் பல்வேறு சிக்கல்களுக்கு ஆளாகி, சமூக விரோத செயல்களில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்படும் மனநிலைக்கு தள்ளப்படுவார்கள். 

பப்ஜி விளையாட அனுமதிக்காததால், தந்தையை கொடூரமாக கொலை செய்த சம்பவம் பெல்காமில் அரங்கேறியது. அதே போல உறவினர்களை கொலை செய்தல், தற்கொலை செய்து கொள்ளுதல் என பப்ஜியின் விளைவுகள் ஏராளம். 
இதனை அடுத்து பப்ஜி விளையாட்டு தடை செய்யப்பட்டது. அதற்கு மாற்றாக ஃப்ரீ பயர் விளையாட்டு அறிமுகமானது. அதிலும் மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை மூழ்கிக் கிடக்கின்றனர். இதனைப் பயன்படுத்திக்கொள்ள திட்டமிட்ட மதன் விபிஎன் எனப்படும் விர்ச்சுவல் பிரைவேட் நெட்ஒர்க் ஐ உருவாக்குகிறார். 

ஆரம்ப காலத்தில் பாதுகாப்பு கருதி, ஆய்வகங்கள், வங்கிகள் உள்ளிட்டவற்றில் பயன்படுத்தப்பட்டு வந்த வி.பி.என் ஐ தற்போது பொதுமக்களும் பயன்படுத்தும் வகையில் வழங்கும் நிறுவனங்கள் உருவாகி உள்ளன. அந்த அடிப்படையில் தடைசெய்யப்பட்ட இணைய தளங்களில் வி.பி.என் மூலம் நுழைந்து நாம் அவற்றை பயன்படுத்த முடியும் என்பதால் மதன் பப்ஜி விளையாட்டை நேரலை செய்ய இதனைப் பயன்படுத்திக் கொண்டார்.

இதற்கு அவரது மனைவி கிருத்திகா துணை சேர்ந்து கொள்ள இவர்களின் ஆட்டம் ஆரம்பமானது. இவர்கள் இருவரும் பப்ஜி விளையாட்டை லைவ் ஸ்ட்ரீமிங் செய்து அதில் ஆபாசமாக அருவருக்கத் தக்க வகையில் பேசி யூ ட்யூபில் வெளியிட மாணவர்கள் இளைஞர்கள் மத்தியில் அது வரவேற்பைப் பெற்றது. மேலும் தான் ஒரு சமூக சேவகர் போல காண்பித்துக்கொண்ட மதன் பலருக்கும் உதவி வருவதாகவும், அதற்கு நிதி உதவி வழங்குமாறும் வலை விரித்தார். இதன் மூலம் மதன் மற்றும் கிருத்திகா வங்கிக் கணக்குகளில் பணம் குவிந்ததாக கூறப்படுகிறது. ஆடி கார், சொகுசு வாழ்க்கை என திளைத்த மதன் தன்னுடைய முழு நேர பணியாக பப்ஜி லைவ் ஸ்ட்ரீமிங்கில் இறங்கினார்.  

இதனையடுத்து மதனின் பேச்சுகள் எல்லை மீறியது. அப்போதும் கிருத்திகா மதனுக்கு பக்கபலமாக செயல்பட்டுள்ளார். இந்நிலையில் மதன் மீதான புகார் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரணையில் இறங்க, சேலத்தில் இருந்த கிருத்திகா சென்னை வரவழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். அதனைத் தொடடந்து அவர் மீது கைது நடவடிக்கையும் தொடர்ந்தது. மதனின் தந்தையும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள நிலையில், பிட் காயின் எனப்படும் கிரிப்டோ கரன்சியில் மதன் முதலீடு செய்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து தலைமறைவாக இருந்து வரும் மதன், சென்னை உயர்நீதி மன்றத்தில் முன்ஜாமீன் மனுதாக்கல் செய்தார். ஆனால் உயர்நீதிமன்றமோ மனு தாக்கல் செய்த மதனின் வழக்கறிஞரிடமே, மதன் பேசிய ஆடியோக்களை கேட்டுவிட்டு மனுதாக்கல் செய்ய வாருங்கள் என்று அறிவுறுத்தும் நிலை ஏற்பட்டுள்ளது. இது ஒருபுறம் இருக்க காவல்துறை தன்னைக் கைது செய்ய முடியாது என்றும், ஒருவேளை அப்படி நடந்தால் மீண்டும் வெளியில் வந்து மதன் யூ ட்யூப் சேனலை மீண்டும் தொடங்குவேன் என்றும் வீர வசனம் பேசி காவல்துறையினரை சீண்டி உள்ளார்.