செஸ் ஒலிம்பியாட்டில் தொடர் வெற்றிகளை குவித்தது இந்தியா...!

செஸ் ஒலிம்பியாட்டில் தொடர் வெற்றிகளை குவித்தது இந்தியா...!

44வது செஸ் ஒலிம்பியாட் போட்டியில் இந்தியா  முதல் சுற்றில் 6  வெற்றி பெற்று தலா 2 புள்ளிகளை கைப்பற்றியுள்ளது...

செஸ் ஒலிம்பியாட் போட்டி:

44 வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் முதன்முறையாக தமிழகத்தில் சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு சிறப்பாக செய்ததோடு, வீரர்களை வரவேற்பது முதற்கொண்டு அவர்களை உபசரிப்பது என அனைத்தையும் மிகச் சிறப்பாக செய்தது. 

செஸ் போட்டிக்கான தொடக்கவிழா:

செஸ் போட்டிக்கான தொடக்கவிழா நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் மற்றும் நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இந்த விழாவில் தமிழர்களின் வரலாற்றை போற்றும் விதமாக பல்வேறு நிகழ்ச்சிகள் அரங்கேறியுள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகர் கமலின் குரலில் ஆவணப்படங்கள் வெளியிடபட்டது. தொடர்ந்து பிரதமரும், முதல்வரும் இணைந்து ஒலிம்பியாட் ஜோதியை ஏற்றி வைத்து போட்டியை தொடங்கி வைத்தனர்.

செஸ் போட்டி இன்று தொடங்கியது: 

இந்தியாவில் முதல்முறையாக நடைபெறும் செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை தமிழக அரசு கோலாகலமாக நடத்தி வருகிறது. இந்த போட்டியில்  186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்து 500-க்கும் மேற்பட்ட வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். ஜூலை  29 ஆம் தேதியான இன்று முதல்  ஆகஸ்டு 10-ந்தேதி வரை நடைபெற உள்ள நிலையில், மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள போர் பாயிண்ட்ஸ் ஷெரட்டன் ரிசார்ட்டில் இன்று செஸ் போட்டிகள்  முறைப்படி தொடங்கியது. 

அமைச்சர் அனுராக் தாகூர்:

சென்னை மாமல்லபுரத்தில் நடைபெற்ற விழாவில், 44-வது சர்வதேச செஸ் ஒலிம்பியாட் போட்டிகளை மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாகூர் மற்றும் உதயநிதி ஸ்டாலின் இருவரும் ஆட்டத்தை ஆடி  தொடங்கி வைத்தார்.

இந்தியா முன்னிலை:

44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்கி முதல் சுற்று மட்டுமே இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வந்த  நிலையில், ஆடவர் பிரிவில் இந்தியா - ஐக்கிய அரபு அமீரகம்  வீரர்கள் பலபரீட்சை நடத்தினர். இதில் இந்திய அணி வீரர்கள் புள்ளி பட்டியலில் தொடர்ந்து முன்னிலை வகித்து வந்தனர்.

இந்தியாவின் தொடர் வெற்றி:

ஆண்கள் பிரிவு:

இந்தியா 1 vs ஜிம்பாவே:

1. விதித் - மக்கோடோ
வெள்ளை நிற காய்களோடு களமிறங்கியுள்ளார்.

2. அர்ஜூன் - மசாங்கோ
கருப்பு நிற காய்களோடு களமிறங்கி 38 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

3. நாராயணன் - முசோரி 
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி,, 33 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

4. சசிகிரண் - ஜெம்பா
கருப்பு நிற காய்களுடன் களமிறங்கி, 39 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய முதல் அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா 2  vs ஐக்கிய அரபு அமீரகம்:

1. குகேஷ் - அல் ஹொசானி
கருப்பு நிற காய்களுடன் களமிறங்கி, 49 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

2. ரவுநத் சத்வாணி - அப்துல் ரஹ்மான்
வெள்ளை நிற காய்களுடன்  36 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

3. அதிபன் - முகமது சையத்
கருப்பு நிற காய்களுடன்,  37 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

4. நிகில் சரின் - சுல்தான்
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கியுள்ளார்.

இப்படியாக 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய 2 அணி வெற்றி பெற்றுள்ளது.

இந்தியா 3  vs தெற்கு சூடான்: 

1. சேதுராமன்-  அஜேக்
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கியுள்ளார். 

2. கார்த்திகேயன் - ஹாங் தான்
வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கி,  39 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

3. அபிஜித் குப்தா - அஜேக்
கருப்பு நிற காய்களுடன் களமிறங்கி, 51 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

4. அபிமன்யூ புரானிக் - பீட்டர் மஜூர்
கருப்பு நிற காய்களுடன் களமிறங்கி,  48 வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

இப்படியாக 3-0 என்ற புள்ளிகள் கணக்கில் இந்திய அணி வெற்றி பெற்றுள்ளது.

மகளிர் அணியின் வெற்றி:

பெண்கள் பிரிவில் பங்கேற்ற 3 இந்திய அணிகளும் எதிரணியை வீழ்த்தி வெற்றி பெற்றுள்ளனர்.  இந்திய பெண்கள் 1வது அணி தஜிக்கிஸ்தான் அணியையும், இந்தியா 2வது அணி வேல்ஸ் அணியையும், இந்தியா 3வது அணி ஹாங்காங் அணியையும்  வீழ்த்தியது. இதில்  3 அணிகளுக்கும் முதல் சுற்றில் தலா 2 புள்ளிகள் கிடைத்துள்ளது.

மொத்தமாக இந்தியாவின் 3 பொது பிரிவு அணிகளும், 3 இந்திய பெண்களும் என இந்தியா முதல் சுற்றில் 6 சுற்றுகளில் வெற்றி பெற்று தலா 2 புள்ளிகளை கைப்பற்றியுள்ளது