திடீர் ஆதிபராசக்தி அவதாரப் பெண்ணின் போஸ்டரால் தெறிக்கும் இணையம்..!

”அவ தான்யா இவ” அவதாரப் பெண்ணை கலாய்த்து தள்ளும் இணையவாசிகள்..!

திடீர் ஆதிபராசக்தி அவதாரப் பெண்ணின் போஸ்டரால் தெறிக்கும் இணையம்..!

ஆதிபராசக்தியின் அவதாரம் என்ற பெயரில் ஒரு பெண்ணைப் பற்றின செய்திகள் இணையத்தில் உலா வந்துக்கொண்டிருக்கிறது. யார் அந்தப் பெண்? அவர் எப்படி ஆதிபராசக்தியின் அவதாரமானார் என்பது குறித்து பார்ப்போம்...தமிழ்நாட்டில் வீதிக்கு வீதி ஒரு கடவுளும், அந்த கடவுளின் அவதாரமும் அதிகரித்து கொண்டே தான் செல்கின்றன. தங்களது கஷ்டங்களையும், நஷ்டங்களையும் இந்த புதிய கடவுளாவது நிறைவேற்றுமா என்ற ஏக்கத்துடன், இந்த மக்களும் அவர்களை நம்பி, கடவுள்களின் அவதாரமாக நினைத்து மனிதர்களை கடவுளை பாவிக்கும் வகையில் பாவித்து வழிபடுகின்றனர். ஏற்கனவே நித்யானந்தா தான் ஒரு சிவனின் அவதாரம் எனக் கூறி, கைலாசா என்ற தனி நாட்டையே உருவாக்கி இளைஞர்களை கவர்ந்து வரும்  வேளையில், இந்த திடீர் ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறிகொள்ளும் பெண்ணால் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. சென்னையை அடுத்த செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மேல்மருவத்தூரில் உள்ளது புகழ்பெற்ற ஆதிரபாரசக்தி கோயில்.

இங்கு ஆண்டு தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு நடத்தி செல்வதும், ஆண்டு தோறும் பக்தர்கள் விரதமிருந்து பாதயாத்திரை செல்வதும் வழக்கம். இத்தளத்தின் மூலவரான ஆதிபராசக்தி சித்தர்களின் தலைவி எனவும், இத்தளத்தில் எண்ணற்ற சித்தர்கள் உரைந்துள்ளதாகவும் நம்பிக்கை. எனவே இக்கோயிலை ஆதிபராசக்தி சித்தர் பீடம் என்றும் அழைக்கின்றனர்.இக்கோயிலில் மூலவர் இருக்கும் கருவறைக்கு பெண்கள் செல்லவும், வழிபடவும் உரிமை வழங்கப்பட்டுள்ளது. பெண்கள் தங்களின் மாதவிடாய் காலங்களில் கூட இங்குள்ள கருவறைக்கு சென்று வழிபடுகின்றனர். இந்தக் கோவிலை பங்காரு அடிகளார் என்பவரும், அவரது மனைவி லட்சுமி பங்காடு அடிகளார் ஆகியோர் நிர்வகித்து வருகின்றனர். இங்கு கடவுளுக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறதோ அதே அளவு பங்காரு அடிகளாருக்கும், அவரது மனைவிக்கும் கொடுக்கப்படும். இவர்களின் வாக்குக்காக காத்துக்கிடக்கும் பக்தர்களும் உள்ளனர். பங்காரு அடிகளாரின் மகன்கள் மீது பல்வேறு வழக்குகளும் நிலுவையில் உள்ளது. இந்த நிலையில், தான் தான் ஆதிபராசக்தியின் அவதாரம் எனக் கூறி ஒரு பெண்ணிற்கு நடத்தப்படும் பூஜைகளும், போஸ்டர்களும் இணையத்தில் வைரலாகி வருகிறது. ஆதிபராசக்தி அம்மா என்று பக்தர்களால் அழைக்கப்படும் அந்த பெண்மணி அலங்கார இருக்கை ஒன்றில் அமர்ந்து அருள் வழங்கும் வீடியோவும் வைரலாகி வருகிறது. பல மாலைகளை அணிந்து, கடவுள் அலங்காரத்தோடு, பின்னணியில் பாடல்கள் ஒலிக்க அங்கு வந்த பக்தர்களுக்கு அந்த பெண்மணி அருள் வழங்கி வருகிறார். 

அண்ணப்பூரணி என்ற இயற்பெயரை கொண்ட அந்தப் பெண்மணி, பல வருடங்களாகவே இவ்வாறு பொதுமக்களுக்கு அருள் வழங்கி வருவதாக கூறப்படுகிறது. இவரிடம் ஏதோ ஒரு பவர் இருப்பதாகவும், அதன் மூலம் மக்களின் கஷ்டங்களையும், நோய்களையும் அவர் குணப்படுத்தி வருவதாகவும் கூறப்படுகிறது. அவரது தனிப்பட்ட விவரங்கள் எதுவும் இதுவரை வெளிவராத நிலையில், ஜனவரி ஒன்றாம் தேதி அவர் அருள் தருவதாகவும், அவரை வந்து வழிபடுங்கள் எனவும் போஸ்டர்கள் வெளியாகியுள்ளன. ஆனால் இவர் பல வருடங்களாக அருள் வழங்கிட்டு வருவதாகவும், இப்போது தான் வெளியே இது தெரிய வருவதாகவும் கூறப்படுகிறது. இப்பொழுது அவர் டிரெண்டாக காரணமும், அம்மா மனது வைத்ததால்தான் என அவரது பக்தர்கள் கூறுகின்றனர். ஆனால் அவர் எப்படி ஆதிபராசக்தியின் அவதாரம் ஆனார், அவரது விவரம் என்பதை மட்டும் ரகசியமாக காத்து வருகின்றனர். ஒரு நிமிடம் இந்த பெண்ணை உற்றுப்பாருங்கள். இந்த அண்ணப்பூரணி தனியார் தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான சொல்வதெல்லாம் உண்மை என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்கிறார். கடந்தாண்டு அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர், இந்தாண்டு ஆதிபராசக்தியாக அவதாரம் எடுத்ததை வைத்து பார்த்தால், பல சிலுமிஷங்கள் செய்திருப்பார் என கூறப்படுகிறது.