அன்புமணியின் சர்ச்சை பேச்சு...ஏறி வந்த பாதையை மறக்க கூடாது...பாமகவை எச்சரித்த ஜெயக்குமார்!

அன்புமணியின் சர்ச்சை பேச்சு...ஏறி வந்த பாதையை மறக்க கூடாது...பாமகவை எச்சரித்த ஜெயக்குமார்!

அதிமுக குறித்து விமர்சனம் செய்த அன்புமணி ராமதாஸுக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்து தக்க பதிலடி கொடுத்துள்ளார்.

சர்ச்சையாக பேசிய அன்புமணி ராமதாஸ்:

கடந்த டிசம்பர் 30 ஆம் தேதி, 2022-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம் 2023-ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற தலைப்பில் பா.ம.க.வின் மாநில பொதுக்குழு கூட்டம் பா.ம.க. நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தலைமையில் விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே நாவற்குளம் சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய அன்புமணி ராமதாஸ், அதிமுக 4 துண்டாகி விட்டதாக சர்ச்சையாக பேசியிருந்தார்.

ஏறி வந்த பாதையை மறந்த பாமக:

இந்நிலையில் சென்னை ராயபுரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் அதிமுக வாக்குச்சாவடி முகவர்களுடன் ஆலோசனை மேற்கொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார்.  அப்போது பேசிய அவர்,  பா.ம.க.வின் மாநில பொதுக்குழு கூட்டத்தில் அதிமுக குறித்து  விமர்சனம் செய்த அன்புமணி ராமதாஸூக்கு கடும் கண்டனம் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், ஏறி வந்த ஏணியை பாமகவினர் மறந்து விட்டதாகவும், அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகு தான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது என்றும், அதிமுகவின் தயவால் தான் பாமக சட்டமன்றத்திலும் நாடாளுமன்றத்திலும் நுழைய முடிந்தது என்றும் ஜெயக்குமார் சுட்டிக்காட்டி பேசினார். 

எச்சரிக்கை விடுத்த ஜெயக்குமார்:

அதிமுகவை எவராலும் சிறுமைப்படுத்த முடியாது என்று தெரிவித்த ஜெயக்குமார், அதிமுகவை பாமக வீணாக சீண்டினால் அதற்கு தக்க பதிலடி கிடைக்கும் என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் எச்சரிக்கை விடுத்தார்.