உருகி வரும் பனிப்பாறைகள்...உயரும் கடல் மட்டம்...மக்கள் எதிர்காலம் என்ன?!!

உருகி வரும் பனிப்பாறைகள்...உயரும் கடல் மட்டம்...மக்கள் எதிர்காலம் என்ன?!!

உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு ஆபத்தில் உள்ளதாக ஐநா அமைப்பான யுனெஸ்கோ ஆய்வில் கண்டறிந்துள்ளது.   அதிகரித்து வரும் வெப்பநிலையை கட்டுப்படுத்தும் முயற்சிகள் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை.

உருகும் பனிப்பாறைகள்:

உலக பாரம்பரிய பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ள பனிப்பாறைகளில் மூன்றில் ஒரு பங்கு ஆபத்தில் இருப்பதாகவும், 2050 ஆம் ஆண்டுக்குள் இந்த பனிப்பாறைகள் முற்றிலும் உருகும் என்றும் ஐ.நா அமைப்பான யுனெஸ்கோ தனது ஆய்வில் கண்டறிந்துள்ளது.

அதிகரித்து வரும் வெப்பநிலையை கட்டுப்படுத்த முயற்சிகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 

இயக்குநர் ஜெனரலின் கணிப்பு:

இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்தின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் புருனோ ஓபரல், பனிப்பாறைகள் வேகமாக உருகும்போது, ​​மில்லியன் கணக்கான மக்கள் தண்ணீர் பற்றாக்குறையால் அவதியுறுவர் எனவும் வெள்ளம் போன்ற இயற்கை பேரழிவுகளின் அபாயத்தை எதிர்கொள்வர் எனவும் தெரிவித்துள்ளார்.  

கடல் மட்டம் உயர்வதால் மில்லியன் கணக்கான மக்கள் இடம்பெயருவதற்கான வாய்ப்பும் அதிகம் எனக் கூறியுள்ளார். 

பாரம்பரிய பட்டியலின் பனிப்பாறைகள்:

யுனெஸ்கோ உலக பாரம்பரிய பட்டியலில் ஐம்பது பனிப்பாறைகள் உள்ளன.  அவை பூமியின் மொத்த பனிப்பாறைப் பகுதிகளில் பத்து சதவீதத்தைக் கொண்டுள்ளன. எவரெஸ்ட் சிகரத்திற்கு அருகில் உள்ள மிக உயரமான பனிப்பாறை, அலாஸ்காவின் மிக நீளமான பனிப்பாறை மற்றும் ஆப்பிரிக்காவில் மீதமுள்ள பனிப்பாறை ஆகியவை இதில் அடங்கும். 

வெளியேறும் கார்பன் டை ஆக்சைடு:

யுனெஸ்கோ, 'இயற்கை பாதுகாப்புக்கான சர்வதேச ஒன்றியத்துடன்' இணைந்து இந்த ஆய்வை மேற்கொண்டுள்ளது. கார்பன் டை ஆக்சைடு வெளியேற்றத்தால் சுற்றுசூழல் வேகமாக வெப்பமடைந்து பனிப்பாறைகள் 2000 ஆம் ஆண்டு முதல் வேகமாக உருகி வருவதாக ஆய்வில் தெரிய வந்துள்ளது.

-நப்பசலையார்

இதையும் படிக்க:   ஜமேஷா முபீன் வீட்டில் கண்டெடுக்கப்பட்ட முக்கிய ஆவணங்கள்...ஐஎஸ்ஐஎஸ் அமைப்புடன் தொடர்பா?!!