நொய்டா சூப்பர் டெக் இரட்டை கோபுரம்...! இடிப்பதற்கு இவ்வளவு கோடி செலவா ..?

நொய்டாவின் சூப்பர் டெக் இரட்டை கோபுரங்கள் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு தகர்க்கப்பட்டது.

நொய்டா சூப்பர் டெக் இரட்டை கோபுரம்...! இடிப்பதற்கு இவ்வளவு கோடி செலவா ..?

நொய்டாவின் சூப்பர் டெக் இரட்டை கோபுரங்கள் இன்று பிற்பகல் 2:30 மணிக்கு  தகர்க்கப்பட்டது. இந்தியாவின் மிக உயரமான கட்டிடமாக நோய்டாவின் இரட்டை கோபுரங்கள், உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் இன்று தரைமட்டமாக்கப்பட்டது. 

நொய்டா இரட்டை கோபுரம் :

இந்த இரட்டை கோபுரம், சூப்பர்டெக்கின் எமரால்டு கோர்ட் திட்டத்தின் பகுதியாக, நொய்டா-கிரேட்டர் நொய்டா எக்ஸ்பிரஸ்வேயில் அமைந்துள்ளது. ஒவ்வொரு கோபுரமும் 40 அடுக்குகள் கொண்டது. சுமார் 7.5 லட்சம் சதுர அடி பரப்பளவில் 900க்கும் மேற்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளையும் கொண்டுள்ளன. 

இடிக்கப்பட காரணம் :

இந்த இரட்டை கோபுரங்கள், கட்டிட விதிகளை மீறியதால் இடிக்கப்படுகின்றன. நொய்டா ஆணையத்தின் வழிகாட்டுதலின் படி, அதன் சொந்த செலவில் கட்டிடங்களை இடிக்க நிறுவனத்திற்கு உத்தரவிட்டது. 

நோய்டாவின் செக்டார் 93ஏ பகுதியில், கடந்த 2004 ம் ஆண்டு, சூப்பர் டெக் எமரால்டு கோர்ட் என்ற ஹவுசிங் சொசைட்டி கட்ட முன்மொழியப்பட்டது. பின்னர் அடுத்த ஆண்டு,14 கோபுரங்கள் மற்றும் ஒன்பது தளங்களை கட்டும் கட்டிட திட்டத்திற்கு அனுமதி அளித்தது.ஆனால் இந்த திட்டம் பின்னர் திருத்தப்பட்டு, 2012ம் ஆண்டில், புதிய திட்டத்தை மதிப்பாய்வு செய்து, அதில் இரட்டை கோபுரங்களின் உயரம், 40 மாடிகளாக நிர்ணயிக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து குடியிருப்போர் நல சங்கம் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கட்டுமானம் சட்டவிரோதமானது என கூறியது. அதன்படி 2014 ம் ஆண்டு, உத்தரவை தாக்கல் செய்த நாளிலிருந்து, நான்கு மாதங்களுக்குள் இடிக்க நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் ஆகஸ்ட் 2021 ல் கட்டுமான விதிமுறைகளை மீறி கட்டமைப்புகள் இருப்பதை குறிப்பிட்டு இடிக்க உத்தரவிட்டது. அதன் படி, ஆகஸ்ட் 28 ம் தேதி, இரட்டை கோபுரத்தை இடிக்க உத்தரவிட்டது. 


   
சுற்றுசூழல் பாதுகாப்பு :

இரட்டை கோபுரங்கள் இடிப்புக்கு பிறகு, சுற்றுசூழல் பாதுகாப்பை உறுதி செய்ய, சாலைகள், நடைபாதைகள், மைய விளிம்புகள், மரம் செடிகளை சுத்தம் செய்ய, தண்ணீர் டேங்கர்கள், துப்புரவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. மேலும் மாசு அளவை மதிப்பிடுவதற்கு,  இரட்டை கோபுரத்தை சுற்றி, தூசி மாதிரி இயந்திரங்களை சுற்றுசூழல் துறை நிறுவியுள்ளது. மேலும் கட்டிடம் இடிக்கப்பட்ட பிறகு, குடியிருப்பாளர்களுக்கு சுகாதார ஆலோசனையான செய்ய வேண்டியவை மற்றும் செய்ய கூடாதவை பற்றி நொய்டா நிர்வாகம் அறிவுரையும் வழங்கியுள்ளது. 


செய்ய வேண்டியவை :

1. கட்டிடம் இடித்த பிறகு கதவுகள் மற்றும் ஜன்னல்களை மூடி வைக்கவும்.

2. தரைகளை துடைத்து சுத்தம் செய்யப்பட வேண்டும்

3. படுக்கை விரிப்புகள் மற்றும் தலையணை கவர்களை சுத்த படுத்திக்கொள்ள வேண்டும்

4. மாசுபாட்டில் இருந்து பாதுகாத்து கொள்ள முகமூடி மற்றும் கண்ணாடிகளை பயன்படுத்தவும்.

செய்யக்கூடாதவை :

1. இடுப்பிற்கு பிறகு சில தினங்களுக்கு கதவு மற்றும் ஜன்னல்களை திறப்பதை தவிர்க்க வேண்டும்.

2. கைகளை கழுவாமல் உணவு உண்பதை தவிர்க்கவும்.

3. தேவையின்றி வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும்.    

இடிப்பிற்கான செலவுகள் :

நொய்டா சூப்பர்டெக் இரட்டைக் கோபுரங்களை இடிக்கும் செலவு ரூ. 20 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இரண்டு கட்டிடங்கள் கட்ட கிட்டத்தட்ட ரூ.70 கோடி தேவைப்பட்டது. சூப்பர்டெக் இடிப்பதற்கு சுமார் ரூ.5 கோடி செலுத்து உள்ளது. மேலும், மீதமுள்ள ₹15 கோடி தொகையை 80,000 டன் எடையுள்ள குப்பைகளை விற்பனை செய்வதன் மூலம் பெறப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கட்டிடங்களில், 915 குடியிருப்புகள் உள்ளன. அதில் 633 குடியிருப்புகள் பதிவு செய்யப்பட்டன. இந்த குடியிருப்புகள் முழுவதுமாக விற்பனை செய்யப்பட்டிருந்தால், அந்த நிறுவனத்திற்கு ரூ. 1200 கோடி கிடைத்திருக்கும். இந்நிலையில் குடியிருப்பை வாங்கியவர்களுக்கு வட்டியுடன் முழு தொகையையும் அந்த நிறுவனம் வழங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  

பிற்பகல் 2.30 மணி :

இந்நிலையில், ஆகஸ்ட் 28 ம் தேதியான இன்று பிற்பகல் 2. 30 மணியளவில், இந்த இரட்டை கோபுரங்கள் வெடி பொருட்கள் வைத்து தகர்க்கப்பட்டது. இதனை அழிக்க 3700 கிலோ வெடி பொருட்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வாரங்களாக, இரட்டை கோபுரத்தில் வெடி பொருட்களை புதைக்கப்பட்டன. பின்னர் இன்று பிற்பகல் 2.30 மணியளவில், அருவி உள்வெடிப்பு முறையில் 9 நொடிகளில்  முழுவதுமாக தகர்க்கப்பட்டது.  அதனை தொடர்ந்து அந்த பகுதியில், 55 ஆயிரம் டன் கட்டிட கழிவுகள் அந்த பகுதியில் குவிந்துள்ளது. இதனை அகற்ற 3 மாதங்களுக்கும் மேல் ஆகும் என கூறப்படுகிறது.