”ஆப்ரேஷன் ஆகஸ்ட்” வேலுமணிக்கு கந்தசாமி போட்ட பக்கா ஸ்கெட்ச்...

”ஆப்ரேஷன் ஆகஸ்ட்” என்ற திட்டத்தின் மூலம் அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான் ஊழல் குற்றச்சாட்டுகளை ஆதாரங்களுடன் திரட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி திட்டமிட்டுள்ளார்.

”ஆப்ரேஷன் ஆகஸ்ட்” வேலுமணிக்கு கந்தசாமி  போட்ட  பக்கா ஸ்கெட்ச்...
ஆட்சி மாறும் அன்று காட்சியும் மாறும் என சட்டமன்ற தேர்தல்  பிரச்சாரத்தில் அப்போதைய எதிர்கட்சி தலைவரும் இன்றைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கூறிய வார்த்தை இவை, எஸ்.பி.வேலுமணிக்கும் சில நிறுவனங்களில் அவருடைய தொடர்பு குறித்த வலுவான ஆதரங்கள் இருப்பதாகவும் திமுக ஆட்சி அமைந்தவுடன் எஸ்.பி.வேலுமணி மீது கடும் நடவடிக்கை பாயும் என மூன்று முறை அழுத்தி சொன்னார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவர் சொன்னதுபோல் தான் இப்போழுது அரங்கேறி கொண்டிருக்கிறது.
 
ஆம் திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுவது லஞ்ச ஒழிப்புத்துறைக்கு  கந்தசாமியை நியமனம் செய்தது. அது மட்டும் இல்லாமல் நேர்மைக்கு பெயர்போன லட்சுமி ஐபிஎஸ்-ஐ இணை இயக்குநராக நியமனம் செய்ததுதான். லஞ்ச ஒழிப்புத்துறைக்கு தலைமை முதல் அடிமட்டம் வரை நேர்மையான காவலர்களை நியமனம் செய்து அதிரடி காட்டி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
 
இந்த நிலையில் தான் லஞ்ச ஒழிப்புத்துறைக்கு கொடுக்கப்பட்ட முதல் பணியே அதிமுக ஆட்சியில் இருந்த முன்னாள் அமைச்சர்கள் மீதான ஊழல் மற்றும் வழக்குகளை விசாரிப்பதும் அதற்கு அலுவல் ரீதியாக ஆப்ரேஷன் ஆகஸ்ட் என பெயரிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதில் முழு நேர கவனம் செலுத்திய கந்தசாமி ஐபிஎஸ் முதல் இரண்டு மாதங்களுக்கு ஆவணங்களை திரட்டவும் மூன்றாவது  மாதத்தில் நடவடிக்கை என்பதும் தான் ஆப்ரேஷன் ஆகஸ்ட் திட்டமாம்.
 
அதன்படி முதல் நடவடிக்கை முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணியாக தான் இருப்பார் என பெரிதும் பேசப்பட்டது.அதிலும் டிவிஸ்ட் வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முதல் இலக்காக முன்னாள் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மீது பாய்ந்தது லஞ்ச ஒழிப்புத்துறையின் சோதனையும் வழக்கும். இந்த நிலையில் தான் முதலில் என்னிடம் தான் வருவார்கள் என நினைத்தேன் ஆனால் விஜயபாஸ்கரிடம் சென்றுவிட்டதாக வாய்விட்டு மாட்டிகொண்டார் முன்னாள் அமைச்சர் வேலுமணி.
 
இடையில் திடீரேன டெல்லி சென்ற அதிமுக முக்கிய புள்ளிகளில் வேலுமணியும் சென்று இருந்தார். பிரதமர் மோடியை சந்தித்து பேசியதால் தன் மீதான நடவடிக்கையின் காலதாமதம் ஆகலாம் என்று தெம்பாக இருந்துள்ளார். மேலும் அதிமுக கொறாடவாக இருப்பதால் தன்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் நெருங்க முடியாது என வேலுமணி இருந்துள்ளார். ஆனால் கடந்த வாரம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்த லஞ்ச ஒழிப்புத்துறை டிஜிபி கந்தசாமி, எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஆதரங்களை காட்டி முறையாக  அனுமதி பெற்று இருக்கிறார் டிஜிபி கந்தசாமி.
 
ஆப்ரேஷன் ஆகஸ்ட் இரண்டாவது அதிரடி விஜயபாஸ்கர் வீட்டில் தொடங்கி சரியாக இருபது நாட்களாகி எஸ்.பி.வேலுமணி வீட்டிற்கு வந்திருக்கிறது. அதிரடியாக 60 இடங்களில் சோதனை நடத்திய லஞ்ச ஒழிப்புத்துறையினர், முன் எப்பொழுதும் இல்லாத அளவுக்கு இரண்டு நாட்களுக்கு முன்னரே 120பி,420,109 ஐபிசி உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துவிட்டு அதிரடி சோதனை செய்துள்ளனர் லஞ்ச ஒழிப்புத்துறையினர்.
 
அந்த முதல் தகவல் அறிக்கையில் எந்த எந்த நிறுவனங்களில் வேலுமணி முதலீடு செய்துள்ளார்.அதிலும் முக்கியமாக அந்த நிறுவனங்கள் எத்தனை சதவீத வளர்ச்சியடைந்துள்ளது என்பதை அதில் குறிப்பிட்டுள்ளதை அதிரடியாக பார்க்கப்படுகிறது. எம்.ஆர்.விஜயபாஸ்கரை தொடர்ந்து, அடுத்த ரவுண்டில் இன்னும் சில முன்னாள் அமைச்சர்களும் ரெய்டு பயத்தில் தவிர்த்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், அடுத்த இலக்கு முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியாக கூட இருக்கலாம் என லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.