காவல்துறை சரகங்கள் களையெடுப்பு… குற்றவாளிகளை வெச்சி செய்ய காத்திருக்கும் அரசு….  

சென்னை கிழக்கு மண்டலத்தில் உள்ள காவல்துறை சரகங்கள் மற்றும் அதன் கீழ் செயல்படும் காவல் நிலையங்கள் மாற்ற அரசுக்கு பரிந்துரைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.  

காவல்துறை சரகங்கள் களையெடுப்பு… குற்றவாளிகளை வெச்சி செய்ய காத்திருக்கும் அரசு….   

சென்னை காவல் துறை நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இதில் கிழக்கு மண்டலத்திற்கு உட்பட்டு திருவல்லிக்கேணி, கீழ்ப்பாக்கம் மற்றும் மயிலாப்பூர் ஆகிய மூன்று  காவல் மாவட்டங்கள் செயல்பட்டு வருகின்றன. இந்த 3 காவல் மாவட்டங்களுக்கு கீழ் 9 காவல் சரகங்கள் ஆக பிரிக்கப்பட்டு செயல்படுகின்றன. இந்த காவல் சரகங்கள் கீழ் செயல்படும் சில காவல் நிலையங்களை மாற்றி புதிய சரகங்கள் உருவாக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அந்த அடிப்படையில் கோட்டூர்புரம் சரகத்தை முற்றிலுமாக கலைத்து, அதன் கீழ் செயல்படும் மூன்று காவல் நிலையங்களை பிரித்து அருகிலிருக்கும் காவல் சரகங்களிடம் ஒப்படைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. அதன்படி கோட்டூர்புரம் சரகத்தின் கீழ் செயல்படும் அபிராமபுரம் காவல் நிலையம், தியாகராய நகர் காவல் மாவட்டத்திற்கு கீழ் செயல்படும் தேனாம்பேட்டை காவல் சரகத்திற்கு மாற்ற பரிந்துரைக்கப்பட்டுள்ளது. கோட்டூர்புரம் காவல் நிலையத்தை, அடையாறு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட சைதாப்பேட்டை காவல் சரகத்தில் இணைக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

நுங்கம்பாக்கம் காவல் சரகத்தில் செயல்பட்டு வந்த சூளைமேடு காவல் நிலையத்தை பிரித்து, புதிதாக சேத்துப்பட்டு காவல் சரகம் உருவாக்கவும், அதன் கீழ் சேத்துப்பட்டு, டிபி சத்திரம் மற்றும் சூளைமேடு காவல் நிலையங்கள் செயல்படவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதேபோல் அயனாவரம் காவல் சரகத்திலிருந்து, தலைமைச் செயலக காலனி காவல் நிலையம் பிரிக்கப்பட்டு, கீழ்ப்பாக்கம் காவல் நிலைய சரகம் கீழ் செயல்பட பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்தப் பரிந்துரைகளுக்கு தேவையான தலைமை நீதிமன்ற நடுவர் , மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர் பரிந்துரைக் கடிதமும், கட்டுமான வசதிகள், மற்றும் சரகங்களை  மாற்ற பரிந்துரைத்ததற்கான சிறப்பு காரணங்கள் உள்ளிட்ட விவரங்களை விரிவாக அறிக்கையாக தாக்கல் செய்யும்படி   கிழக்கு இணை ஆணையருக்கு, சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டுள்ளார். இந்த காவல் சரகங்களையும், காவல் நிலையங்களையும் மாற்றுவதற்கான விரிவான தகவல்களுடன் பரிந்துரை கடிதத்தை தயார் செய்து, அரசின் அனும்தி பெற சமர்ப்பிக்கபட உள்ளதாக தெரியவந்துள்ளது.