கதறிய ஓய்.ஜி.மகேந்திரா, கைவிரித்த கிரிஜா,ரஜினி... நள்ளிரவில் அனுப்பிய இமெயில்!! வாண்டடாக வந்த சு.சுவாமி

தங்கள் குடும்ப பிராபர்ட்டிகளில் ஒன்றான சேஷாத்திரி பள்ளிக்கு வந்த இப்படியொரு ஒரு சிக்கலிலிருந்து மீள முன்னாள் தலைமை செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், ரஜினிகாந்த் உதவியை நாடியுள்ளார். அனால் இவர்கள் கைவிரித்ததால், வாண்டடாக களமிறங்கியிருக்கிறார் சுப்பிரமணியன் சுவாமி.

கதறிய ஓய்.ஜி.மகேந்திரா, கைவிரித்த கிரிஜா,ரஜினி... நள்ளிரவில் அனுப்பிய இமெயில்!! வாண்டடாக வந்த சு.சுவாமி

சென்னையில் உள்ள விஐபி பிள்ளைகள் படிக்கும் முக்கிய பள்ளிகளில் ஒன்றான பத்மா சேஷாத்திரி பள்ளி ஆசிரியரான கோவிந்த வரதாச்சாரி ராஜகோபால் மீது ஒரே நாளில் அடுக்கடுக்காக எழுந்த பாலியல் சீண்டல் புகார்கள் சமூக வளைதளங்களில் பகிரப்படவும் ஓய். ஜி.எம் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக அதிர்ந்து போயிருக்கின்றனர்.

இந்த செய்தி வெளியான உடன்  தனிப்பட்ட முறையில் செய்தியை விசாரித்த ஓய். ஜி.மகேந்திரா, இது ஒரு நீண்ட நாள் சிக்கல் என்றும், ஒரு சில வாத்தியார்கள் தாங்கள் குறிவைக்கும் மாணவிகளுக்கு வசதி படைத்த மாணவர்களை லவ் லெட்டர் கொடுக்க வைத்து, ஸ்பெஷல் கிளாஸ் என்று லீவு நாட்களில் பள்ளிக்கு வரவைத்து அவர்கள் அசந்தர்ப்பமாக இருக்கும் நேரத்தில் வீடியோ எடுத்து மிரட்டி தங்கள் பாலியல் வக்கிரத்திற்க்காக தேவைகளை தணித்துக் கொண்டதையும், அப்படியான சில வீடியாேக்களையும் தங்களுக்குள் பகிர்ந்துக் கொண்டதையும் உறுதி செய்துக்கொண்டப் பின், தனக்கும் பள்ளிக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லையென்ற அறிவிப்பை வெளியிட்டார். 

அதாவது குடும்ப பாகப்பிரிவினையில் பள்ளியின் உரிமம் முழுவதும் தன் தம்பிக்கு போய்விட்டால் தான் மற்றும் தனது மகள் மதுவந்தி அதில் ஒரு ட்ரஸ்டியாக மட்டுமே இருப்பதாக ஒப்புக்கொண்டார்.

இதனைத்தொடர்ந்து குடும்ப உறவுகள் தன்னை முற்றுகையிட இந்த சமூகத்திலிருந்த மதிப்பை இந்நிகழ்வு சிதைத்துவிட்டதாக கதறியிருக்கிறார்.

இது அரசியல் பழிவாங்கல் என்று மகள் மதுவந்தி மேட்டரை திசை திரும்பியதும் அவரிடம் சீறிய மகேந்திரா, அப்படியெல்லாம் ஒன்றுமில்லை, உதலில் நீ உண்மையை பேசு, தானே விசாரித்துவிட்டதாகவும், தன்னிடம் இப்படி அப்பட்டமாக பொய் சொல்வதில் எந்த அர்த்தமில்லை என்றும் அவர் திட்டித் தீர்த்துள்ளார்.

தனக்கென இருந்த அரசியல் தொடர்பை மகளுடைய நேரடி பாஜக ஆதரவு நடவடிக்கைகள் கெடுத்துவிட்டதையும் சொல்லி கலங்கியிருக்கிறார்.

தனது குடும்பத்தின் பிராபர்ட்டி மீது ஏற்பட்டுள்ள களங்கத்தை இப்போதைக்கு சரிசெய்ய முடியாது, ஆனால் இப்போதைக்கு இதை சரி செய்ய நேரடியாக தான் தலையிடாமல் யார் மூலம் பேசலாம் என்று தவித்தவருக்கு, முதலில் நியாபககத்துக்கு வந்தவர் முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்.

இரவோடு இரவாக அவரை தொடர்புக்கொண்டு பேசிய அவர், தனக்கும் புதிய அரசுக்கும் தொடர்பே இல்லை அதனால் தன்னால் இப்போதைக்கு ஆகப்போவது ஏதுமில்லை என்று பட்டும்படாமல் பேசி சைலண்ட்டாகியிருக்கிறார் கிரிஜா.

அடுத்ததாக இருக்கவே இருக்கிறார் தனது சகலை ர ஜினி,   அவரை அழைத்ததற்கு இப்போது தான் நிம்மதியாக இருப்பதாகவும், இனி எதற்காகவும் யாருக்காகவும் எந்த அரசியல் கட்சி தலைவரையும் தொடர்புக்கொள்ளும் சூழ்நிலையில் இல்லை, அதிலும் ஆட்சியமைத்து இன்னும் ஒரு மாதம் கூட ஆகாத நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் பேசுவது சரியாக இருக்காது என்றும் கைவிரித்திருக்கிறார்.

இதன் பின்னரே தன்னை தற்காத்துக்கொள்ளும் பொருட்டு, பள்ளியின் நிர்வாகத் தலைமையிலிருப்பவர்களுக்கு சம்மந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை  தன்னுடைய கோரிக்கையாக்கி ராவோடு ராவாக இ-மெயில் அனுப்பியிருக்கிறார் ஒய். ஜி.மகேந்திரன்.

இதற்குள் தன்னுடைய பாஜக வட்டாரத்தை தொடர்புக்கொண்ட மதுவந்தி பாதிக்கப்பட்ட மாணவிகளில் பெரும்பான்மையானோர் பிராமணர்கள், குறிப்பாக மிடில் கிளாஸ் மாணவிகள் தான் என்பதை மேற்கோள்காட்டி அவர்களை தங்கள் சமூகத்து முக்கியப் பிரமுகர்கள் மூலம் சமாதானப்படுத்தும் முயற்சியை முடுக்கிவிட்டிருக்கிறார். இதற்காக எவ்வளவு வேண்டுமென்றாலும் செலவு செய்யவும் தயாராக இருப்பதாகவும் தெரிவித்திருக்கிறாராம்.

ஏற்கனவே கொரோனா விவகாரத்தில் சர்வதேச சிக்கலில் தவித்துக் கொண்டிருப்பதால் தமிழ்நாட்டு விவகாரங்களை எடுத்துப் போக முடியாமல் தவிக்கும் தமிழக பாஜக, அடுத்து என்ன பூகம்பம் கிளம்புமோ என்ற பீதியில் தவித்துக்கொண்டிருக்கிறதாம்.

இந்த சூழலில் தான் 10,000 மாணவர்கள் பயிலும் சென்னையில் உள்ள மரியாதைக்குரிய பத்ம சேஷாத்ரி  பள்ளியை கியானி என்ற சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும், பிராமண சமூகத்தைச் சேர்ந்த ஒருவரும் நிர்வகித்து வருகின்றனர். அப்பள்ளியில் ஒரு ஆசிரியர் மாணவிகளிடம் தவறாக நடந்துகொண்டார் என்பதற்காக திமுக, தி.கவைச் சேர்ந்தவர்கள் அப்பள்ளியைத் தாக்கி வருகின்றனர். இந்த குண்டர்களை தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தடுத்து நிறுத்தவில்லை என்றால், நான் அப்பள்ளிக்கு அரணாக இருப்பேன் என்றும், இந்த விவகாரம் தொடர்பாக என்னைத் தொடர்பு கொண்டவர்களிடம் தமிழ்நாடு பாஜக என்ன செய்துகொண்டிருக்கிறது எனக் கேட்டேன். கட்சி செயலற்ற நிலையில் இருப்பதாக சிலர் தன்னிடம் தெரிவித்தாக அதனையும் மற்றொரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார்.