இமாச்சலின் புதிய முதலமைச்சரானார் சுக்விந்தர் சிங் சுகு...!

இமாச்சலின் புதிய முதலமைச்சரானார் சுக்விந்தர் சிங் சுகு...!

இமாச்சலப்பிரதேச முதலமைச்சரானார் காங்கிரசைச் சேர்ந்த சுக்விந்தர் சிங் சுகு...!

இமாச்சலை கைப்பற்றிய காங்கிரஸ்:

இமாசலப்பிரதேசத்தில் மொத்தமுள்ள 68 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ் மற்றும் ஆம் ஆத்மி இடையே கடுமையான மும்முனை போட்டி நிலவியது. தொடர்ந்து மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 8ம் தேதி வாக்குஎண்ணும் பணி தொடங்கிய நிலையில், மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 இடங்களை காங்கிரஸ் கைப்பற்றி ஆட்சியை பிடித்தது. இதையடுத்து இமாச்சலப்பிரதேசத்தின் புதிய முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகுவை காங்கிரஸ் கட்சி தேர்வு செய்தது. 

இதையும் படிக்க: நம்பர் 1 முதலமைச்சர் பெருமையல்ல...தமிழ்நாடு நம்பர் 1 ஆகும்போதுதான்...முகஸ்டாலின் பேச்சு!

முதலமைச்சர் பதவியேற்கும் விழா:

இந்நிலையில் இமாச்சலப்பிரதேச தேர்தலில் முதலமைச்சராக தேர்வு செய்யப்பட்ட சுக்விந்தர் சிங் சுகு வருகிற டிசம்பர் 11 ஆம் தேதி பதவியேற்பார் என்று கூறப்பட்ட நிலையில்,  சிம்லாவில் இன்று பதவியேற்கும் விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.  இந்த விழாவில் மூத்த தலைவர்கள் மல்லிகார்ஜுன கார்கே, ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

முதலமைச்சரானார் சுக்விந்தர் சிங் சுகு:

இதைத்தொடர்ந்து அம்மாநிலத்தின் ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் ஆர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைக்க, முதலமைச்சராக சுக்விந்தர் சிங் சுகு பதவியேற்றார். தொடர்ந்து துணை முதலமைச்சராக காங்கிரஸ் தலைவர் முகேஷ் அக்னிஹோத்ரியும் பதவியேற்றுக்கொண்டார்.