அரைகுறை ஆடையில் அந்தமாதிரி 15 பேர்.. பண்ணை வீட்டில் சிக்கிய நடிகை!! ஈசிஆர் ரோட்டில் இன்ப கொண்டாட்டம்

அரைகுறை ஆடைகளுடன் 16 பேர் கைது..!

அரைகுறை ஆடையில் அந்தமாதிரி 15 பேர்.. பண்ணை வீட்டில் சிக்கிய நடிகை!! ஈசிஆர் ரோட்டில் இன்ப கொண்டாட்டம்

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கானத்தூர் ராதாகிருஷ்ணா அவென்யூ, எல்ஆர் பார்ம்ஸ் சாலையில் உள்ளது சுகுணா கார்டன் என்ற பண்ணை வீடு. இங்கு வார இறுதிநாட்களில் மதுபான பார்ட்டிகளும், சினிமா, நாடக சூட்டிங்கும் நடைபெறுவது வழக்கம். கொரோனா ஊரடங்கால் பார்ட்டிகளுக்கு தடை விதிக்கப்பட்டதால் பண்ணை வீடும் களையிழந்து காணப்பட்டது. 

இருப்பினும், கடந்த சனிக்கிழமை இங்கு மது பார்ட்டி நடைபெறுவதாகவும், 30-க்கும் மேற்பட்ட பெண்கள், ஆண்கள் குடித்து கூத்தடிப்பதாகவும் காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. சம்பவ இடத்திற்கு சென்ற அதிகாரிகள், பண்ணை வீட்டில் விதிகளை மீறி பார்ட்டி நடப்பதை உறுதி செய்தனர். 

அதிரடியாக வீட்டினுள் நுழைந்த அதிகாரிகள், அங்கு மது போதையில் இருந்த ஆண்கள், பெண்களை எச்சரித்து அனுப்பினர். மேலும் அரைகுறை ஆடையுடன் பார்ட்டிக்காக அழைக்கப்பட்டிருந்த 10 பெண்களை காவல்நிலையம் அழைத்து சென்றனர். பிறகு இந்த பார்ட்டியை ஏற்பாடு செய்தது யார் என விசாரித்த போது, 1990-களுக்கு முன்பு சினிமாவில் துணை நடிகையாக வலம் வந்த கவிதா ஸ்ரீ என்பது தெரியவந்தது. 

தமிழில் ஜெய்ஹிந்த், காதலன், விஷ்ணு, அரண்மனைகிளி போன்ற படங்களில் கவர்ச்சி வேடங்களிலும், வில்லியாகவும் நடித்தவர் கவிதா ஸ்ரீ. தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிகளில் பல படங்களை நடித்து பிரபலமானவர். 1990-களில் திருமணத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து விலகினார் கவிதா ஸ்ரீ. 

ராமாபுரத்தை சேர்ந்த ஸ்ரீஜித்குமார் என்பவருடன் இணைந்து, ரூ.15,000க்கு பண்ணை வீட்டை வாடகைக்கு எடுத்த கவிதா ஸ்ரீ, அங்கு விதிகளை மீறி மது பார்ட்டிக்கு ஏற்பாடு செய்தது தெரியவந்தது. விருந்தில் கலந்து கொள்ள ஆண்களுக்கு தலா ரூ.5,000 முதல் ரூ.10,000 வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. பெண்கள் பார்ட்டியில் இலவசமாக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பண்ணை வீட்டில் சிக்கிய ஸ்ரீஜித்குமார், கவிதா ஸ்ரீ உட்பட 16 பேரை கைது செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.