TMB வங்கியில் முறைகேடு? சரியாக கணக்கு காட்டபடவில்லை...வருமான வரித்துறை அதிரடி!

TMB வங்கியில் முறைகேடு? சரியாக கணக்கு காட்டபடவில்லை...வருமான வரித்துறை அதிரடி!

தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சுமார் 4 ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடியை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சுமார் 4 ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. 

இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் செயல்பட்டு வரும் தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியின் தலைமை அலுவலகம் தூத்துக்குடியில் செயல்பட்டு வருகிறது. தனியார் வங்கியான இதில் லட்சக்கணக்கானோர் வாடிக்கையாளராக இருக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில், கடந்த 27-ந் தேதி தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி தலைமையகத்தில்  வருமான வரித்துறை நுண்ணறிவுப் பிரிவு அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். 

இது பெரும் பரபரப்பாக பேசப்பட்ட நிலையில், முக்கிய அதிகாரிகள் உள்ளிட்டோரிடம் சுமார் 20 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணை மற்றும் சோதனையின் இறுதியில், முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச் சென்றனர். 

தொடர்ந்து, தமிழ்நாடு மெர்கண்டைல் வங்கி, சுமார் 4 ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை எனவும், நிதி பரிவர்த்தனை அறிக்கையில் முறையாக கணக்கு காட்டப்படாததால் சோதனை மேற்கொள்ளப்பட்டதாகவும் வருமான வரித்துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையும் படிக்க : ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு முதலமைச்சர் பதில் கடிதம்...!

பின்னர் இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் வெளியிட்ட அறிக்கையில், ரொக்க முதலீட்டில் 10 ஆயிரம் பேரின் கணக்குகளில் 2 ஆயிரத்து 700 கோடி ரூபாய் அளவுக்கு நடைபெற்ற பண பரிவர்த்தனை குறித்த ஆதாரங்கள் சமர்ப்பிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும், கிரிடிட் கார்டு எனப்படும் கடன் அட்டைகள் மூலம் நடைபெற்ற 110 கோடி ரூபாய் அளவுக்கான பரிவர்த்தனைகளும், பொதுமக்களுக்கு அளிக்கப்பட வேண்டிய வட்டி தொகையில் 500 கோடி ரூபாய் அளவிற்கும் கணக்கில் இடம்பெறவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதோடு, 200 கோடி ரூபாய் ஈவுத்தொகையை பிரித்து அளித்ததில் முறைகேடு மற்றும் 600 கோடி ரூபாய் அளவுக்கு பங்குத் தொகையிலும் முறைகேடு நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மெர்க்கன்டைல் வங்கி சார்பில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்ட குறிப்பிட்ட நிதி பரிவர்த்தனை அறிக்கையில் பல முக்கிய விவரங்கள் இடம்பெறவில்லை என்றும் வருமான வரித்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியா முழுவதும் 17 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கிளைகளை கொண்ட தனியார் வங்கியில்,  சுமார் 4 ஆயிரத்து 410 கோடி ரூபாய் அளவிற்கு முறையாக கணக்கு காட்டவில்லை என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது வாடிக்கையாளர்களிடம் பெரும் அதிர்ச்சியையும், விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.