ஓராண்டு விழாவைக் கொண்டாடிய தாலிபன்கள்!!!

அமெரிக்க படைகள் தங்கள் நாட்டை விட்டு வெளியேறியதை, வானவேடிக்கைகளுடன் கொண்டாடிய தாலிபன்கள்.

ஓராண்டு விழாவைக் கொண்டாடிய தாலிபன்கள்!!!

கடந்த ஆண்டு, அமெரிக்க படைகள், அஃப்கானிஸ்தான் விட்டு வெளியேறியதைக் கொண்டாடும் வகையில், இன்று தாலிபன்கள், அஃப்கானிஸ்தானில் தேசிய விடுமுறை தினமாக அறிவித்துள்ளது. மேலும், வான வேடிக்கைகள் வெடித்து ஓராண்டு விழாவை படு விமரிசையாகக் கொண்டாடியது.

கொடூர போர்!!!

கடந்த 2001ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 11ம் தேதி, நியூயார்க்கில் நடந்த 9/11 தாக்குதல்களுக்கு பதிலளிக்கும் விதமாக, அமெரிக்க படையினர் அஃப்கானிஸ்தானில் முகாமிட்டு போர் தொடுத்து வந்தனர். கடந்த 20 ஆண்டுகளாக தொடர்ந்து போர் தொடுத்து வந்த அமெரிக்க படையினர் இது வரை, 66,000 அஃப்கான் படையினரையும், 48,000 பொதுமக்களையும் கொன்று குவித்தது. ஆனால், இது பெரிதாக அமெரிக்கர்களுக்கு தெரியவில்லை. இந்த போரில் இறந்த 2461 அமெரிக்க படையினரை மட்டுமே அவர்கள் கண்களுக்கு தெரிந்தது. அதுவும் அவர்களால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதுமட்டுமின்றி, நாடோவைச் சேர்ந்த மேலும் 3500 துருப்புகள் இறந்ததும் குறிப்பிடத்தக்கது.

அடுத்த ராத்திரியில் ஓடிய அமெரிக்க படை!!!

கடந்த ஆண்டு, ஆகஸ்ட் 31ம் தேதி, நள்ளிரவு 12 மணிக்கு ஒரு நிமிடம் முன்பு அவசர அவசரமாக அமெரிக்க துருப்புகள், தங்கள் முகாம்களில் இருந்து வெளியேறினர். தொடர்ந்து இரண்டாவது வாரத்திலேயே அஃப்கானின் அரசு அதிகாரிகளை வெளியேற்றி ஆட்சி பிடித்தனர் தாலிபன்கள். உள்நாட்டு போர் மூலமாகவே தாலிபன்கள் ஆட்சியைப் பிடித்ததால், அவர்களது கைப்பற்றுதலை பல உலக நாடுகள் ஏற்கவில்லை என்பது ஒரு பக்கம் இருக்க, மறு பக்கம், அவர்கள் கையில் சிக்கித் தவிக்கின்றனர் அஃப்கானியர்கள்.

மேலும் படிக்க | தாலிபான்களுடன் அமெரிக்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை..........

அடக்குமுறை கையாளும் தாலிபன் ஆட்சி!!!

அத்துமீறி நுழைந்ததாக விமர்சிக்கப்படும் தாலிபன்கள், பல வகையான அடக்குமுறைகளை கையாண்டு வருவதாக அந்நாட்டு மக்களால் குற்ரம்சாட்டப்படுகின்றனர். பல வகையான கொடூர விதிமுறைகள் கொண்டு வந்த தாலிபன்கள், பொதுமக்கள் தினசரி வாழ்வியலையுமே கேள்விகுறியாக்கி இருப்பதாகக் கூறுவதில் தவறில்லை. ஆண்களுக்கு, ஆடை முதல் தாடி வரை பல வகையான விதிமுறைகள். மேலும் அவற்றை கடைபிடிக்காமல் விட்டாலும் வேலையில் இருந்து நீக்கம் என்றும், பல கடுமையான தண்டனைகள் விதிக்கப்படும் என்றும், இஸ்லாமிய விதிமுறைகளை கடுமையாக பின்பற்றக் கோரி கண்காணிப்பிலும் தாலிபன்கள் ஈடுபட்டு வருகின்றனராம்.

உயிர் தவிற வேறேதுமின்றி தவிக்கும் பெண்கள்!!!

ஆண்களுக்கே இப்படி என்றால், பெண்களுக்கு கேட்கவா வேண்டும்? கல்வி, வேலை எனத் தொடங்கி, சாதாரண மனித உரிமை கூட பறிக்கப்பட்ட நிலையில் சிக்கித் தவிக்கின்றனர் அஃப்கானிய பெண்கள். பெண்களை நாங்கள் பாதுகாப்போம் என்றும், பெண்களுக்கு அவர்களது உரிமைகளை அளிப்போம் என்றும் கூறி, பல வகையான அடக்குமுறைகளை தாலிபன்கள் கையாண்டு வருகின்றனர். பெண்களுக்குக் கடுமையான கட்டுபாடுகள் விதிக்கும் தாலிபன்கள், பெண்கள் வேலைக்கு செல்லக்கூடாது என்பதை கட்டாயமாக்கியுள்ளது. 

மேலும் படிக்க | பாடிபில்டர்கள் இடுப்புக்கு கீழே முழங்கால் வரை துணி அணிய வேண்டுமாம்..! தாலிபன்களின் புதிய விதிமுறை..!

எதற்கும் அனுமதியில்லை:

அது மட்டுமின்றி, 7 முதல் 12ம் வகுப்பு படிக்கும் பெண்கள் பள்ளிகளில் அனுமதி இல்லை, தொடக்க பள்ளிகளில் மாணவ-மாணவிகளுக்கு தனித்தனியாக வகுப்புகள், விமானங்களில் ஆண் துணை இல்லாமல் பெண்கள் தனியாக அனுமதி இல்லை, விளம்பரங்களில் நடிக்க, ஏன், கலந்து கொள்ள கூட அனுமதி இல்லை, பெண்களுக்கு டிரவிங் லைசன்ஸ் வழங்க அனுமதி இல்லை, தலை முதல் கால் வரை துளி சதை கூட தெரியாத அளவிற்கு பர்தா அணியாமல் வெளியே வர அனுமதியில்லை, ஏன், வீடுகளில் கூட, ஆண்கள் இருக்கும் போது பர்தா இல்லாமல் இருப்பதற்கும் அனுமதி இல்லை என மனதை பதற வைக்கும் பல கொடூரமான, பிற்போக்கான உத்தரவுகளைப் போட்டு வருகிறது தாலிபன் ஆட்சி. இதில் தற்போது மேலும் ஒரு புதிய மோசமான உத்தரவு போட்டுள்ளது. அதையும் விட கொடூரமானது, இந்த உத்தரவுகளை கடைபிடிக்கின்றனரா என கண்கானிக்க, துப்பாக்கியுடன் தாலிபன்கள் சாலைகளில் ரோந்து வரும் வீடியோக்கள் வெளியாகி அனைவரது நிம்மதியையும் குலைத்து வருகிறது.
முகம் காட்டக் கூட அனுமதியில்லை!!!
இப்படி இருக்க, அரசு பணிகளில் இருக்கும் பெண்கள் பர்தா அணியாவிட்டால் பணி நீக்கம் செய்யப்படுவார்கள். மற்றும், அரசு பணிகளில் இருக்கும் ஆண்களின் குடும்ப பெண்கள் பர்தா விதிமுறைகளை மீறினாலும் அவர்கள் பணி நீக்கம் செய்யப்படுவார்களாம். இத்தனை கட்டுபாடுகள் இருக்க, தற்போது, பெண் செய்தி வாசிப்பாளர்களுக்கு ஒரு உத்தரவு அறிவிக்கப்பட்டிருக்கிறது. தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண்கள், தங்களது முகங்களை மூடிக் கொள்ள வேண்டுமாம். 
அவசர உத்தரவு:
 
இந்த நிலையில், செய்தி வாசிக்கும் பெண்கள் முகத்தை காட்ட அனுமதியும் மறுக்கப்பட்டு மாபெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. கடந்த மே மாதம் 20ம் தேதி,  போடப்பட்ட அவசர உத்தரவான இதனை, மே மாதம் 22ம் தேதியே கடை பிடிக்க வேண்டும் என அனைத்து அஃப்கான் பத்திரிக்கை நிறுவனங்களுக்கும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
Taliban celebrate first anniversary of US withdrawal from Afghanistan |  South China Morning Post
அஃப்கானில் மேலும் பொது மக்கள் உண்ண உணவு கூட இல்லாமல் வறுமையில் வாடி வருகின்றனர். இவற்றையெல்லாம் மதிக்காமல், பல கொடூர சட்டங்களும், கட்டுப்பாடுகளும் கொண்டு வந்த தாலிபன்கள், தற்போது, இன்று விடுதலை நாளாக வானவேடிக்கைகளுடனும், துப்பாக்கிகளுடனும் கொண்டாடி வருகின்றனர்.
இது குறித்து பேசிய தாலிபன் அரசின் செய்தி தொடர்பாளர் சபிஹுல்லா முஜாகித் (Zabihullah Mujahid), தாலிபன் ஆட்சிக்கு வந்ததில் இருந்து அஃப்கான் பல வகையில் முன்னேறி இருப்பதாக பெருமிதம் கொள்கிறார். இதை நகைச்சுவையாக் நினைத்து சிரிப்பதா, அல்லது கொடூர ஆட்சியாக பார்த்து அஞ்சுவதா என்ற குழப்பம் உலக மக்கள் மத்தியில் உருவாகி இருப்பது குறிப்பிடத்தக்கது.