பள்ளி மாணவிகளை பாபாவுக்கு அனுப்பிய விவகாரம்... தப்பிக்கும் ஆசிரியைகள்,.மாணவிகள் ஆவேசம்!

பள்ளி மாணவிகளை பாபாவுக்கு அனுப்பிய விவகாரம்... தப்பிக்கும் ஆசிரியைகள்,.மாணவிகள் ஆவேசம்!

ஆன்மிக சொற்பொழிவாளர் சிவசங்கர் பாபா கேளம்பாக்கத்தில் சுமார் 64 ஏக்கரில் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியை நடத்திவருகிறார். கடந்த 20 ஆண்டுகளாக இயங்கி வரும் சுஷில் ஹரி இண்டர்நேஷனல் ரெசிடென்சியல் பள்ளியின் ராமராஜியம். மகாஜோதி காலனி, கல்கி கார்டன், பழனி கார்டன் மூன்று பகுதியிலும் பக்தர்கள் என்று சுமார் முன்னூறு குடும்பங்கள் வசித்து வருகின்றனர். மாணவ, மாணவியர்களுக்கென தனி ஹாஸ்டல் வசதியும் உள்ளது.

இந்நிலையில் அங்கு பயிலும் மாணவிகளை அவர் பாலியல் ரீதியாக பயன்படுத்தினார் என்றும், அதற்கு அங்கு பயிலும் ஆசிரியர்களே உறுதுணையாக இருந்தார்கள் என்றும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் அந்த பள்ளியில் பயின்ற முன்னாள், இன்னாள் மாணவிகள் சிலரும் இந்த சம்பவம் தொடர்பாக புகார் அளித்து வருகிறார்கள். இந்த தொடர்களைத் தொடர்ந்து சிவசங்கர் பாபா கைது செய்யப்பட்டார். 


அதோடு பாலியல் சம்பவங்களுக்கு மாணவிகளை அழைத்து வந்த அப்பள்ளியின் முன்னாள் மாணவியும் பாபாவின் சிஷ்யையுமான சுஷ்மிதா, பள்ளியின் கம்ப்யூட்டர் ஆசிரியர் கருணா, ஹாஸ்டல் வார்டன் நீரஜா ஆகியோர் மேல் காவல்துறையின் விசாரணை இறுகியது. இந்த மூன்று ஆசிரியர்கள் மேலும் மாணவிகள் சரமாரி புகார்களை தொடர்ந்து அடுக்கி வருகிறார்கள். 

இதில் சுஷில் ஹரி பள்ளியின் முன்னாள் மாணவியும் தற்போதைய ஆசிரியருமான சுஷ்மிதாவை பள்ளியில் இருந்தே படிக்கவைத்தது பாபா தான் என்றும், அவர் கல்லூரி படித்தது முதல் அவருக்கு திருமணம் செய்து வைத்தது வரை அனைத்தையும் செய்தது பாபா தான் என்றும்  இந்த நன்றிக்கடனுக்காக தான் மாணவிகளை பாபாவுக்கு அனுப்பி அவருக்கு சேவை செய்துள்ளார் என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது. மேலும் பாபாவிடம் எப்படி பேசவேண்டும், எப்படி நடக்கவேண்டும் என்றும் மாணவிகளை மூளைச் சலவை செய்தவரும் இந்த ஆசிரியை தான் என்று அப்பள்ளியின் முன்னாள் மாணவிகள் கூறியுள்ளனர். 

இந்த குற்றசாட்டுகளைத் தொடர்ந்து சுஷ்மிதா ஆசிரியையை காவல்துறையினர் கைது செய்தனர். இவருக்கு 6 மாத கைக்குழந்தை இருப்பதால் அந்த குழந்தையையும் தாயோடு அழைத்து புழல் சிறையில் அடைந்துள்ளார்கள்.  

இரண்டாவதாக சுஷில் ஹரி பள்ளியின் கம்ப்யூட்டர் ஆசிரியர் கருணா பற்றியும் முன்னாள் மாணவிகள் புகார் கூறியுள்ளனர். இவர் தான் பாபாவுக்கு நெருக்கமானவராக இருந்துள்ளார் என்றும், பகல் நேரங்களில் பாபாவுக்கு மாணவிகள் தேவைப்பட்டால் அந்த மாணவிகளை அவருக்கு அனுப்பும் பொறுப்பில் இருந்தவர் இந்த அருணா தான் என்றும். கம்ப்யூட்டர் வகுப்பில் கூட பாபாவை பற்றியே மாணவிகளிடம் பேசிக்கொண்டிருப்பார் என்றும் மாணவிகள் கடும் குற்றச்சாட்டை கூறுகிறார்கள். 

ஆனால் காவல்துறை விசாரணையில் தன் மீதான குற்றச்சாட்டுகளை மறுத்துள்ள ஆசிரியை கருணா,தான் எந்த குற்றமும் செய்யவில்லை என்று காவல்துறையினரிடம் கூறி அழுதுள்ளார். 

பாபாவுக்காக பகலில் கருணா செய்த வேலையை இரவு நேரத்தில் ஹாஸ்டல் வார்டன் நீரஜா செய்துள்ளார். இரவு நேரத்தில் பாபா மாணவிகளை கேட்டால் மாணவிகள் உறக்கத்தில் இருந்தாலும் மாணவிகளை எழுப்பிவிட்டு, அவர்களை குளிக்க வைத்து பாபாவின் சொகுசு பங்களாவுக்கு அழைத்து போய் விடுவார் நீரஜா என முன்னாள் மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மாணவிகளின் இந்த குற்றச்சாட்டையும் நீரஜா  மறுத்துள்ளார். 

இந்த வழக்கில் ஆசிரியை சுஷ்மிதாவை கைது செய்து சிறையில் அடைத்த காவல்துறையினர் கருணா, நீரஜா ஆகிய இருவரிடமும் எழுதி வாங்கிக்கொண்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். மேலும் விசாரணையின்போது வந்தால் மட்டும் போதும் என்று கூறியுள்ளனர். இது புகார் கொடுத்துள்ள மாணவிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. 

ஆசிரியை சுஷ்மிதாவை சிறையில் அடைத்தது போல இவர்களையும் சிறையில் அடைக்கவேண்டும் என்றும், அவர்கள் மேல் கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் புகார் அளித்துள்ள மாணவிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.