தனிப்பட்ட பகை: தனியார் தொலைக்காட்சியை அடித்து நொறுக்கிய நபர்: பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!?

தனிப்பட்ட பகையின் காரணமாக தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தனிப்பட்ட பகை: தனியார் தொலைக்காட்சியை அடித்து நொறுக்கிய நபர்: பத்திரிக்கையாளர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி!?

தனிப்பட்ட பகையின் காரணமாக தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தை அடித்து நொறுக்கிய நபரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

சென்னை ராயபுரத்தில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்தில் உள்ளே புகுந்து கண்ணாடி கதவு மற்றும் லேப்டாப் கம்ப்யூட்டர்களை உடைத்து தாக்குதலில் ஈடுபட்ட நபரை  போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கோயம்புத்தூர் மாவட்டம் உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் தர்மலிங்கம் இவரது மகன் ராஜேஷ்குமார். இவர் நேற்று மாலை நேரத்தில் சென்னை ராயபுரத்தில் உள்ள காமராஜர் பூங்கா சாலையில் செயல்பட்டு வரும் தனியார் தொலைக்காட்சி அலுவலகத்திற்கு வந்துள்ளார். காரை நிறுத்திவிட்டு உள்ளே சென்ற அவர் கிட்டார் பையில் மறைத்து வைத்திருந்த 3 அடி வாள் மற்றும் தடுப்பு கேடயம் ஒன்றை வைத்து கண்ணாடிகளால் ஆன கதவு மற்றும் வரவேற்பறையில் இருந்த கம்ப்யூட்டர் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை அடித்து நொறுக்கி உள்ளார். 

உடனடியாக தகவலறிந்து வெளியே ஓடிவந்த ஊழியர்கள் மற்றும் செய்தியாளர்கள் அருகில் உள்ள காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ராயபுரம் போலீசார் தகராறில் ஈடுபட்ட ராஜேசை கைது செய்து காவல் நிலையம் அழைத்து சென்றனர்.  காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் ராஜேஷ் குமாரின் தந்தை தர்ம லிங்கத்திற்கும் தொலைக்காட்சியின் உரிமையாளர்களுக்கும் தனிப்பட்ட பகை இருந்து வருவதாகவும் அதன் காரணமாகவே இங்கு வந்து தாக்குதலில் ஈடுபட்டதாகவும் உரிமையாளர்கள் என்னிடம் நேரே வந்து பேசும் பட்சத்தில் உண்மையை காவல்துறையினரிடம் கூறுவதாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த சத்தியம் தொலைக்காட்சியில் சிஇஓ ஷாம், உள்ளே வந்த மர்மநபர் க்கும் எங்களுக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை. திடீரென உள்ளே புகுந்து அத்துமீறி மிகப்பெரிய அருவாளுடன்  பொருட்கள் அனைத்தையும் சேதப்படுத்திவிட்டு சென்றிருக்கிறார். குறிப்பாக ஊழியர்களுக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படவில்லை இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் புகார் அளித்து இருக்கிறோம் விரைவில் அவர் யார் எதற்காக இதுபோன்ற செயலில் ஈடுபட்டார் என தெரியவரும் என்றார்.