சிவகார்த்திகேயன் உடனான சந்தானத்தின் சண்டைக்கான காரணம் இது தானா..?

சிவகார்த்திகேயன் உடனான சந்தானத்தின் சண்டைக்கான காரணம் இது தானா..?

சின்னத்திரையில் பயணத்தை தொடங்கி வெள்ளித்திரையில் கோலோச்சி இருப்பவர்களில் மிக முக்கியமானவர்கள் சந்தானம் மற்றும் சிவகார்த்திகேயன். இருவரும் ஒரே தொலைக்காட்சியில் இருந்து தொடங்கியிருந்தாலும் இருவரின் பாதைகளும் வெவ்வேறு. 

சென்னை பல்லாவரத்திற்கு அருகிலுள்ள பொழிச்சலுரில் பிறந்த சந்தனம் தனது இளமை பருவத்தில் counter மணி, செந்தில் ஆகியோரின் நகைச்சுவையை தான் முன்மாதிரியாக கொண்டு வளர்த்துள்ளார். கல்லூரி காலத்தில் stand-up காமெடியில் பங்கேற்று பலரின் பாராட்டுகளை பெற்ற சந்தானம் நண்பர்களின் ஊக்குவிப்பின் பெயரில் தொலைக்காட்சிகளில் வாய்ப்பு தேடி அலைந்தார்.

அதன்பெயரில் வின் டீவியில் டீக்கடை பெஞ்ச் என்ற நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது. அதிலிருந்து அடுத்தபடியாக லொள்ளு சபா பாலாஜியின் பரிந்துரையின் பெயரில் இவருக்கு லொள்ளுசபாவில் முன்னணி பாத்திரத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அந்த நிகழ்ச்சியின் மூலம் தமிழக குடும்பங்களின் மத்தியில் மிகவும் பிரபலமான சந்தானத்திற்கு திரைப்படங்களில் துணைநடிகராக கூட்டத்தில் நிற்கும் வாய்ப்பு கிடைத்தது.

அதன் பின் அவரின் திறமையை அறிந்த சிம்பு மன்மதன் படத்தின் மூலம் அவருக்கு ஒரு நீண்ட கதாபாத்திரத்தை கொடுத்து நகைச்சுவை நாயகனாக அறிமுகம் செய்துவைத்தார். அதை தொடர்ந்து சம்திங் சம்திங், சந்தோஷ் சுப்ரமணியம், சிவா மனசுல சக்தி என்று பல படங்களில் தொடர்ச்சியாக தனது காமெடி மூலம் கலக்கிய சந்தானத்தின் மார்க்கெட் உயர ஆரம்பித்தது.

அப்போது முன்னனி நகைச்சுவை நாயகர்களாக இருந்து வந்த விவேக்கும் வடிவேலும் ஹீரோவுக்கு நண்பனாக நடிக்கும் வயதை தாண்டி விட்டிருந்தனர் counter மணியை போல் பிறரை கலாய்த்து காமெடி செய்வதற்கும் ஆள் இல்லாத நிலையில் அந்த வாய்ப்பை சரியாக பயன்படுத்திக்கொண்ட சந்தானம் நடிகர்களை விட அதிகம் சம்பளம் வாங்கும் நட்சத்திரமாக மாறிவிட்டார்.

இந்த நிலையில் தான் மெதுவாக தனது சின்னத்திரை பயணத்தை தொடங்கி வெற்றிபடிக்கட்டில் வேகமாக ஏறிக்கொண்டு வந்தார் சிவகார்த்திகேயன். கலக்கப்போவது யாரு சீசன் 3ல் அறிமுகமாகி டான்ஸ் ஜோடி, அது இது எது, விருது விழா, என அனைத்தையும் தொகுத்து வழங்கி ஆல் இன் ஆல் அழகுராஜாவாக வலம் வந்துகொண்டிருந்த சிவகார்த்திகேயனை சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார் பாண்டிராஜ் அதன் பிறகு தனுஷுடன் இணைந்து 3 படத்தில் சிறு நகைச்சுவை வேடத்தில் நடித்து அதை தொடர்ந்து எதிர்நீச்சல், கேடி பில்லா கில்லாடி ரங்கா, போன்ற படங்களின் மூலம் முழு நீல நகைச்சுவை நாயகனாக உயர்ந்தார் சிவகார்த்திகேயன். 

இதற்கிடையில் தான் சந்தானத்திற்கும் சிவகார்த்திகேயனுக்கும் இடையிலான சண்டைகள் அதிகரித்து. விஜய் awards நிகழ்சியில் சந்தானத்தை செமயாக கலாய்த்த சிவகார்த்திகேயனுக்கு பதில் counter அளிக்க முடியமால் சந்தானம் மொக்கை வாங்கியதில் இருந்து இவர்களுக்கிடையேயான விரிசல் அதிகரிக்க துவங்கியது.

இதன் விளைவாக 2013 M. ராஜேஷின் உதவி இயக்குனரான I. ராஜசேகரன் இயக்கவிருந்த படமான யாயா படத்திற்கு சிவகார்த்திகேயன் தான் தேர்வு செய்யப்பட்டார் ஆனால் அவர் நடித்தால் நான் நடிக்கமாட்டேன் என்று சந்தானம் கூறியதால் சிவகார்த்திகேயன் அதிலிருந்து நீக்கப்பட்டு மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருந்தார் அதே போல அட்லீயின் ராஜா ராணி படத்திலும் ஜெய் நடிக்கவிருந்த பாத்திரத்தில் சிவகார்த்திகேயன் பெயர் அடிபட்டதாகவும் ஆனால் சந்தானத்தின் பரிந்துரையின் பெயரில் அவரை நீக்கிவிட்டு ஜெய்யை commit செய்ததாகவும் தெரிகிறது.

இப்படி சென்றுகொண்டிருந்த நேரத்தில் சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம் பெரும் வெற்றியை சம்பாதித்து சிவகார்த்திகேயனை உச்ச நட்சத்திரமாக உயர்த்தியது. அடுத்தடுத்து வெளிவந்த மான் கராத்தே, குறிப்பாக காக்கி சட்டை போன்ற படங்கள் இவரை ஒரு மாஸ் ஹீரோவாக மாற்றியது.

இந்நிலையில் காமெடியனாக இருந்த சந்தானம் திரைத்துறையில் நிறைய அவமானங்களை சந்தித்து வந்துள்ளார் உதாரணத்திற்க்கு என்றென்றும் புன்னகை படத்தில் அவர் நடித்துவந்த போது அவருக்கு வழங்கப்பட்ட கேரவன் மிகவும் தொலைவில் இருந்ததாம் இவரை விட குறைந்த சம்பளம் வாங்கிய வினையின் கேரவன் கூட மிகவும் அருகில் இருந்தது இவருக்கு காமெடியனை விட ஹீரோ தான் முக்கியத்துவம் வாய்ந்தவர் என்ற உண்மையை இவருக்கு உறைக்கும்படி உணரவைத்துள்ளது.

இதன் கூடவே இவரின் மனைவியும் தந்தையும் எப்படியாவது இவரை ஒரு கதாநாயகனாக பார்க்கவேண்டு என்ற ஆசையை இவரிடம் தெரியப்படுத்த அதை நிறைவேற்றி தீருகிறேன் என்று உறுதிமொழி ஏற்று அதன் படி இனி காமெடியனாக நடிக்கப்போவதில்லை என்று திடம்பட கூறிவிட்டார்.

அதிலிருந்து வல்லவனுக்கு புல்லும் ஆயுதம் படத்தில் தொடங்கி தற்போது வெளிவந்த டிக்கிலான வரை தொடர்ந்து கதாநாயகனாக நடித்துவருகிறார் சந்தானம். இது நமக்கு பிறகு வந்த சின்ன பையன் இப்போது கதாநாயகனாக மாறி இப்படி வளந்துவிட்டான் நம்மால் ஏன் முடியாது என்ற எண்ணி சிவகார்த்திகேயன் மீதுள்ள பொறாமையில் தான் இப்படி ஒரு முடிவை எடுத்துள்ளார் என்று பரவலாக பேசப்பட்டாலும் அதை மறுத்த சந்தானம், சிவகார்த்திகேயன் என் எதிரி இல்லை போட்டியாளர்தான் என்று கூறியுள்ளார். ஆனால் இப்போதுள்ள நிலையில் சந்தனம் ஒரு முழுநீள நகைச்சுவை நாயகனாக மட்டுமே நடித்துவரும் நிலையில் சிவகார்த்திகேயன் நூறு கோடி வசூலை ஈட்டி சூப்பர்ஸ்டாருக்கே போட்டியாகிவிட்டார். சந்தானம் இன்னும் மாஸ் ஹீரோ ஆகும் முயற்சியில் ஈடுபட்டு கொண்டுதான் இருக்கிறார்.