ப்ளஸ் 2 தேர்வை ரத்து செய்ததற்கு இதுதான் காரணம்- போட்டுடைத்த அமைச்சர்

ப்ளஸ் 2 தேர்வை ரத்து செய்ததற்கு இதுதான் காரணம்- போட்டுடைத்த அமைச்சர்

தமிழகத்தில் +2 தேர்வு ரத்து செய்யப்பட்டதன் காரணம் குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கமளித்துள்ளார்.

முதற்கட்டமாக தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது குறித்து பெற்றோர்கள் மற்றும் கல்வியாளர்கள், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மற்றும் கல்வியாளர்கள், சட்டமன்ற பிரதிநிதிகள், மருத்துவ நிபுணர்கள், உளவியல் நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு வல்லுநர்களின் கருத்துகள் கேட்கப்பட்டது என்றார்.

தொடர்ந்து அனைத்து கட்சி சட்டமன்ற பிரதிநிதிகளுடன் மேற்கொள்ளப்பட்ட ஆலோசனைக்கூட்டத்தின் போது மாணவர்களின் நலனை கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே அனைவரின் வலியுறுத்தல்களாக இருந்தது என்றார்.

எனவே வல்லுநர்களின் கருத்துப்படி, அனைத்து பள்ளி மாணவிகளின் நலன் கருதியே ப்ளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டதாக பள்ளி கல்விதுறை அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார். மேலும், மாணவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ள நிலையில், நிச்சயம் மாணவர்களின் எதிர்காலத்தை கைவிட மாட்டோம் என உறுதி அளித்தார்.

அதேபோல், நீட் தேர்வு நடந்தாலும், இதேபோன்ற தொற்று பாதிப்பு நிலை ஏற்படும் என்பதால், நீட் தேர்வு உள்ளிட்ட எந்தவொரு நுழைவுத் தேர்வையும் நடத்தக்கூடாது என பிரதமருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளதாக அவர் கூறினார்.