நலம் நலமறிய ஆவல்...! - இன்று உலக கடிதம் எழுதும் தினமாம்!!!

இன்று உலகம் முழுவதும் கடிதம் எழுதுவதற்கான நாளாக அங்கிகரிக்கப்பட்டுள்ளது. அது குறித்து பார்க்கலாம்!!!

நலம் நலமறிய ஆவல்...! - இன்று உலக கடிதம் எழுதும் தினமாம்!!!

கடிதம் எழுதுவது ஞாபகம் இருக்கிறதா? As I am suffering from fever... எனத் தொடங்கும் அந்த கடிதத்தில் ஆயிரம் பொய்கள்... சிறு வயதில் தொடங்கியது இந்த கடிதம் எழுதும் பழக்கம். பேப்பர் வாசமும், பேனா மை அழுக்கும் சட்டை முழுவதும் நிரம்பி, நமது கிறுக்கல்களை நமது மொழிகளாக பெயர்க்கும் அந்த கடித்தையும், அந்த கடித்தை எழுதுவதற்காக நம்மையும் ஊக்குவிக்கும் நாளாக உருவானது தான் இன்றைய நாள், உலக கடிதம் எழுதும் நாள்.

எழுத்து என்பது மொழியின் வடிவம் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், கடிதத்தில் அப்படி என்ன இருக்கிறது என்ற கேள்வி பலருக்கும் இருக்கும். அது தான் இன்றைய தினமும் நமக்கு புகட்டுகிறது. கடிதம் என்பது தான் முதல் முறையாக மனிதர்களுக்கு இடையேயான தகவல் பரிமாற்றத் தளமாக இருந்தது. நமது கருத்துகளை மற்றவரிடம் நேரில் சொல்ல முடியாவிட்டால், என்ன செய்வோம்? மற்றவர்களிடம் கூற சொல்லி கேட்போம். ஆனால், அவர்கள் நமது கருத்துகளை தவறாக பதிவு செய்து விட்டால் என்ன ஆகும் என்ற பயம் வருமல்லவா? அதனை நீக்க தான், நமது சொந்த கையெழுத்தில், நமது சொந்த கருத்துகளை பகிர எழுதத் தொடங்கியது கடிதங்களை.

மேலும் படிக்க | அன்னா ஹசாரேவை பாஜக பயன்படுத்துகிறது- கெஜ்ரிவால் குற்ற்ச்சாட்டு!

World Letter Writing Day – Encouraging children & adults to write a letter  to someone

அன்புள்ள அம்மாவுக்கு, பாசமுள்ள அப்பாவுக்கு, என் இதயம் கனிந்த வணக்கங்கள் என அன்பான வார்த்தைகள் வைத்து தொடங்கும் நமது கடிதங்கள், இறுதியில், அன்புடன், என்றும் மறவா காதலுடன் என முடியும். இந்த கடிதங்களானது, இன்று அனுப்பினால், அடுத்த வாரமோ அல்லது பத்து நாள் ஆகுமோ என்ற கவலையைத் தாண்டி, அந்த கடித்தின் பதில் கடிதம் எதிர்பார்த்து, தபால்கார அண்ணனின் சைக்கிள் மணி சத்தத்திற்காக காத்திருக்கும் நாட்கள் ஏராளம். அப்படிப்பட்ட கடிதங்கள் தற்போது அதிகமாக பயன்பாட்டில் இல்லாதது வருத்தத்தை அளிக்கிறது.

நமது பள்ளித் தேர்வுகளின் ரிசல்டுகள் தபாலில் வருவதற்காக வழிநடக்க காத்திருந்த நாட்கள் சென்று, இப்போது எல்லாம், இ-மெயில், வாட்சாப், ஃபேஸ்புக் என்றாகி விட்டது. பல இடங்களில் கடிதம் எழுதும் பழக்கம் முற்றிலுமாக நின்று விட்டதை அடுத்து, பல தபால் நிலையங்கள் மூடப்பட்ட அவலம் தற்போது நமது தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில், ஏன், உலகம் முழுவதுமே உருவாகியுள்ளது.

மேலும் படிக்க | மின் கட்டணம் செலுத்தாத தெலங்கானா அரசு…யாரிடம் தெரியுமா?

Letter Writing Class - Classroom - BTN

இந்த கடிதம் எழுதும் பழக்கம் மூலம், நமது கையெழுத்தால், நமது நெருக்கம், கடிதம் பெருவோர்களுக்கு இடையேயான உறவு அனைத்தும், தற்போது டிஜிட்டல் மீடியாவின் தாக்கத்தால் உடைக்கப்பட்டுள்ளது என்பது தான் நிதர்சண உண்மை. ஆனால், அந்த நிலையை மாற்றவும், பழமையை நினைவு கோரும் வகையிலும் இந்த நாளை உலக கடிதம் எழுதும் நாளாக அங்கிகரித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு, பிரபல ஆஸ்திரேலிய எழுத்தாளர், ஓவியர் மற்றும் புகைப்பட கலைஞரான ரிச்சர்ட் சிம்ப்கின் (Richard Simpkin) என்பவரால் இந்த நாள் உருவாக்கப்பட்டது. 90களின் இறுதியில், ரிச்சர்ட் தனக்குப் பிடித்த ஆஸ்திரேலிய லெஜெண்டுகளுக்கு, கடிதம் எழுதிய ரிச்சர்டுக்கு, அவர்களிடம் இருந்து பதில் கடிதமும் வருமாம். தனது கருத்துகளை நினைவுச் சின்னமாக பாதுகாக்க உதவும் கடிதங்களை ஒன்று சேர்த்து, 2005ம் ஆண்டு. ‘Australian Legends' என்ற பெயரில் புத்தகம் ஒன்றை வெளியிட்டார். இதனைத் தொடர்ந்து, 2014ம் ஆண்டு, செப்டம்பர் 1ம் தேதியை, கைப்பட எழுதும் கடிதங்களை கௌரவிக்கவும், அப்பழக்கத்தை நினைவுக்கூறும் நாளாகவும், உலக கடிதம் எழுதும் தினமாக அறிவித்தார்.

இன்றைய தினத்தில், நமக்குப் பிடித்தவர்களுக்கு, நமது கருத்துகளை கைப்பட எழுதி, அதனை அவர்களுக்குக் கொடுத்தால், அது வாழ்நாள் முழுவதும் நினைவில் இருக்கும் படியாக அமையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. நமது குழந்தை பருவத்தை நினைவு கூரவும், பழமையை விட்டுக் கொடுக்காமல் இருக்கவும், கடிதம் எழுதுவதை தொடர்வோம்!!!

--- பூஜா ராமகிருஷ்ணன்