மத்திய அமைச்சர் வாய்ப்பை இழந்த வானதி சீனிவாசன். தோற்றாலும் வெயிட்டான பதவி வாங்கிய எல். முருகன்.! 

மத்திய அமைச்சர் வாய்ப்பை இழந்த வானதி சீனிவாசன். தோற்றாலும் வெயிட்டான பதவி வாங்கிய எல். முருகன்.! 

பிரதமர் மோடி 2-வது முறையாக பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. இதுவரை அவரது ஒன்றிய அமைச்சரவையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இதன் காரணமாக ஒன்றிய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டு அதற்கான ஆலோசனைகளில் ஈடுபட்டார். அதன்படி, இன்று மாலை 6 மணிக்கு அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், ஒன்றிய அமைச்சரவை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் உட்பட 43 பேர் ஒன்றிய அமைச்சரவையில் இடம்பெறுகின்றனர்.  இதில் தமிழக பாஜக தலைவர் எல்.முருகன் பெயர் இடம் பெற்றதை தொடர்ந்து சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் பாஜக தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.

அதனை தொடர்ந்து பாஜக மாநில பொது செயலாளர் கரு. நாகராஜன் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது பேசிய அவர், மாற்றி அமைக்கப்பட்டுள்ள மத்திய  அமைச்சரவையில்  எல்.முருகன் பெயர் இடம் பெற்றிருப்பது எங்களுக்கும் தமிழக மக்களுக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தமிழகத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்த எல்.முருகன் உறுதுணையாக இருப்பார் எனவும் அவர் தெரிவித்தார்.

தமிழகத்தின் சார்பில் இதுவரை ஒன்றிய அமைச்சர்கள் இல்லாத நிலையில், எல்.முருகனுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டிருப்பது முக்கியத்துவம் பெற்றுள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் எல்.முருகன் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிவாய்ப்பை இழந்தார். இதனால் மிக மனவருத்தத்தில் இருந்த எல்.முருகனுக்கு இந்த பதவி மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ஆனால், இதுவே சிலருக்கு வருத்தத்தையும் கொடுத்துள்ளது. 

தற்போது, பாஜக சார்பில் வானதி சீனிவாசன் தேசிய மகளிரணி செயலாளராக இருக்கிறார். நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்டு வென்றார். இவர் மாணவர் பருவத்திலிருந்தே ஆர்.எஸ்.எஸ் அமைப்பில் இருந்து வருகிறார்.  ஒருவேளை இவர் கோவை தெற்கு தொகுதியில் தோற்றிருந்தால் கூட ஒன்றிய அமைச்சர் பதவி கிடைத்திருக்கும் என்றும், ஆனால் தற்போது வெற்றி பெற்றதால் வெறும் எம்.எல்.ஏ பதவியை மட்டுமே இவருக்கு இருக்கிறது. இதற்கு இவர் தோற்றே போய் இருக்கலாம் என்றும் பாஜக வட்டத்தில் பேசப்படுகிறது.