வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் - எஸ் ராக்கெட்...!

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது விக்ரம் - எஸ் ராக்கெட்...!

விக்ரம் - எஸ் ராக்கெட் இந்தியாவின் முதலாவது தனியார் ராக்கெட் என்ற பெருமையை பெற்றுள்ளது. இந்த ராக்கெட் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள இஸ்ரோ ஏவுதளத்தில் இருந்து காலை 11.30 மணிக்கு விண்ணில் ஏவப்பட்டது. 

விக்ரம் என பெயர் வைக்க காரணம் : 

இஸ்ரோ நிறுவனரான மறைந்த விஞ்ஞானி ’விக்ரம் சாரா பாய்’-யின் நினைவாக தான் ‘விக்ரம்’ என பெயர் வைக்கப்பட்டுள்ளது.  

ராக்கெட்டின் நோக்கம் : 

விண்வெளி ஆராய்ச்சியில் தனியார் நிறுவனங்களின் பங்களிப்பை ஊக்குவிக்கும் முயற்சியில் இந்த ராக்கெட் ஏவப்படுள்ளது.  

தயாரிப்பு நிறுவனம் : 

கடந்த 2020 ஆம் ஆண்டு ‘இன்ஸ்பேஸ்’ (இந்திய தேசிய விண்வெளி ஊக்குவிப்பு ம்ற்றும் அங்கீகார மையம்) என்ற மத்திய அரசின் விண்வெளி துறையின் கீழ் இயங்கும் தன்னாட்சி முகமை நிறுவப்பட்டது. இதன் வாயிலாக ராக்கெட், செயற்கைகோள் ஆகியவற்றை தயாரிக்க சில தனியார் நிறுவனங்களும் அனுமதிக்கபட்டன. அதன்படி ஹைதராபாத்தை சேர்ந்த ‘ஸ்கைரூட்’ என்ற ஏரொஸ்பேஸ் நிறுவனம் தங்களது ராக்கெட்டை விண்ணில் செலுத்த இஸ்ரோவுடன் ஒப்பந்தம் செய்துகொண்டது. 

ராக்கெட்டின் சிறப்பம்சம் :

இந்த ராக்கெட் 83 கிலோ எடை கொண்ட 3 விதமான பேலோடுகளை சுமந்து சென்றுள்ளன. அவை ஆந்திராவின் என் ஸ்பேஸ் டெக் இந்தியா, சென்னையின் ஸ்டார்ட் அப் ஸ்பேஸ் கிட்ஸ், அர்மேனியாவின் பசூம்கியூ ஸ்பேஸ் ரிசர்ச் லேப் ஆகியவற்றின் பேலோடுகள் ஆகும்.  இந்த விண்வெளி பயணத்திற்கு 'பிராரம்ப்' என பெயரிடப்படுள்ளது. ஒரே நிலையை கொண்ட இந்த ராக்கெட் 545 கிலோ எடையும், 6மீ உயரமும், 0.375மீ விட்டமும் கொண்டது. செயற்கைகோள்கள் பூமியின் மேற்பரப்பிலிருந்து 120கி.மீ உயரத்தில் 300 விநாடிகளில் கொண்டு நிலை நிறுத்தப்படுகிறது.

மேலும் இந்த ராக்கெட்டானது 81கி.மீ அட்சரேகையில் ஏவப்பட்டது. ராக்கெட் ஏவப்பட்டு 17.9 கி.மீ தொலைவை அடைந்தவுடன் ராக்கெட்டின் எரிபொருள் எரியத் தொடங்கும், 81.5 கி.மீ தொலைவை அடைந்தவுடன் ராக்கெட் தன்னுடைய சுமையை புவியின் நீள்வட்டப்பாதையில் தளர்த்தும்.

திட்டத்திற்கான செலவு : 

இந்த ராக்கெட் ஏவும் திட்டத்திற்காக ஸ்கைரூட் நிறுவனம் ரூ.526 கோடி முதலீடு செய்துள்ளது. இதன் மூலம், விண்வெளி ஆராய்ச்சியில் எதிர்காலத்துக்காக பணியாற்றுகிறோம் என்பதை வலியுறுத்தியுள்ளது குறிப்பிடதக்கது. 

--சுஜிதா ஜோதி

இதையும் படிக்க : வெளியானது "கலகத்தலைவன்" ; ரசிகர்கள்,பிரபலங்கள் மத்தியில் குவியும் பாராட்டு மழை!!!