பாண்டி முதல்வரை படுஜோராக.. பேனரில் சித்தரித்து அசத்தியுள்ள ஆதரவாளர்கள்…..

புதுவை முதல்வர் ரங்கசாமியின் பிறந்தநாளையொட்டி அவரது ஆதரவாளர்கள் அனைவரும் ஆங்காங்கே ரங்கசாமியின் புகைப்படத்தை சினிமா மற்றும் அரசியல் பிரபலங்களின் புகைப்படத்துடன் ஒப்பிட்டும், அதேபோன்று சித்தரித்தும் ஓட்டி அமர்க்களப்படுத்தியுள்ளனர்……  

பாண்டி முதல்வரை படுஜோராக.. பேனரில் சித்தரித்து அசத்தியுள்ள ஆதரவாளர்கள்…..

ஆகஸ்ட் மாதம் 4 ஆம் தேதி ஆயிரத்தி950 ஆம் ஆண்டு நடேசக் கவுண்டர் - பாஞ்சாலி ஆகியோருக்கு மகனாகப் பிறந்தவர் தான் ரங்கசாமி..மிகவும் எளிமையானவரான இவர், புதுச்சேரியில் உள்ள தாகூர் கலைக் கல்லூரியில் இளங்கலை படித்து முடித்துவிட்டு பின்னர்  டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் சட்டப் படிப்பும் படித்தவர். 

கடந்த ஆண்டு 2001 முதல் 2008 வரை புதுச்சேரியின் முதல்வராக இருமுறை பதவி வகித்தவர் ரங்கசாமி . அதன்பிறகு காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்ட உட்கட்சி குழப்பத்தினால் 2008 ஆம் ஆண்டு அவரிடம் இருந்த முதல்வர் பதவி பறிக்கப்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய ரங்கசாமி, 2011ஆம் ஆண்டு என்.ஆர்.காங்கிரஸ் என்ற கட்சியை நிறுவினார்.

 கட்சி தொடங்கிய இரண்டு மாதங்களுக்குள் 2011 சட்டமன்ற தேர்தலில் 15 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தார். முதலமைச்சரான பின்னரும் சட்டசபைக்கும், தொகுதிக்கும் இருசக்கர வாகனத்தில் வந்த முதல்வர் என்ற பெயரை பெற்றார் ரங்கசாமி. 

 இதற்கிடையில் இவரது எளிமையான வாழ்க்கை முறை மக்களை அதீதமாக ஈர்த்தது. இதனிடையே புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ரங்கசாமியை தலைவராக கொண்டு தேர்தலைச் சந்திந்து 16 இடங்களில் வெற்றி பெற்றது. இதில் என்.ஆர்.காங்கிரஸ் 10, பாஜக 6 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைக் கைப்பற்றின. 

கூட்டணிக்குத் தலைவராக இருந்த ரங்கசாமி சட்டமன்றக் குழுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மூலம் புதுச்சேரியில் நான்காவது முறையாக முதல்வராக பதவியேற்கும் முதல் நபர் என்ற தனிச் சிறப்பை ரங்கசாமி பெற்றுள்ளார். இந்த நிலையில் அவரது பிறந்தநாளையொட்டி புதுவை யூனியன் பிரதேசத்தில் ஆங்காங்கே பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.

அதில் சார்பட்டா பரம்பரை' திரைப்பட பாணியில் முதலமைச்சர் ரங்கசாமியின் படங்களைப் பேனர்களாக வைத்துள்ளனர். அதுமட்டுமல்லாது பாகுபலி வீரனை போன்றும் சித்தரித்து ஆங்காங்கே பேனர்களை வைத்து அசத்தியுள்ளனர் முதலமைச்சர் ரங்கசாமியின் ஆதரவாளர்கள்...

மேலும்  காமராஜருடன் ரங்கசாமி உணவு அருந்துவது போன்ற புகைப்படமும் இடம்பெற்றுள்ளது. அதுமட்டுமல்லாமல் இவரை கல்வித் தந்தையே என்று அழைத்தும் பேனர்களை வெளியிட்டுள்ளார்கள் இவரது ஆதரவாளர்கள். அதேபோல் புதுவையின் குலதெய்வமே, வழிக்காட்டியே, நம்பிக்கையே, மக்கள் முதல்வரே, ஆன்மீக செம்மலே, வெற்றி முகமே உள்ளிட்ட அடைமொழிகளால் குறிப்பிட்டும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன.