புதிய அப்டேட்: எலான் மஸ்க் கையில் சிக்கிய ட்விட்டர்...! இனி என்னவெல்லாம் நடக்க காத்திருக்கோ...புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்!

புதிய அப்டேட்: எலான் மஸ்க் கையில் சிக்கிய ட்விட்டர்...! இனி என்னவெல்லாம் நடக்க காத்திருக்கோ...புலம்பி தள்ளும் நெட்டிசன்கள்!

ட்விட்டரில் அடுத்தடுத்து புதிய அப்டேட்களை கொடுத்து வரும் எலான் மஸ்க், தற்போதும் ஒரு புதிய அப்டேட்டை தந்து பயனாளர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறார்...


பிரபல சமூக வலைதளமான ட்விட்டரை எலன்மஸ்க் வாங்கியதில் இருந்து பல்வேறு அதிரடி முடிவுகளை எடுத்து வருகிறார். அதன்படி, ஊழியர்களை  அதிரடியாக பணிநீக்கம் செய்தது, கட்டாயம் 12 மணி நேரம் வேலை பார்க்க வேண்டும், ட்விட்டர் இலச்சினையை (Logo) குருவியிலிருந்து நாய் குட்டியாக மாற்றியது, மீண்டும் நாயை அகற்றி பழைய இலச்சினையான குருவியை மாற்றியது உள்ளிட்ட பல்வேறு அதிரடி முடிவுகளை மேற்கொண்டார்.

தொடர்ந்து, ட்விட்டர் தளத்தில் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள் போன்றோருக்கு மட்டும் இது அதிகாரப்பூர்வ, உறுதிசெய்யப்பட்ட கணக்கு என்பதை குறிக்கும் வகையில் ப்ளூ டிக் குறியீடு பயன்பட்டு வந்தது. ஆனால், எலான் மஸ்க் ட்விட்டரை கைப்பற்றிய பிறகு, கட்டண முறையில் யார் வேண்டுமானாலும் ப்ளூ டிக் பெறலாம் என்ற அம்சத்தை கொண்டு வந்தார். இதனால் ட்விட்டர் சந்தா செலுத்தாதவர்களின் ப்ளூ டிக் நீக்கம் செய்யப்பட்டு வந்தது.

இதையும் படிக்க : அரசியலமைப்புச் சட்டம் : ஆளுநருக்கு வானளாவிய அதிகாரம் வழங்கி உள்ளதா?

இப்படியாக அடுத்தடுத்து பல அதிரடி மாற்றங்களை கொடுத்து பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தி வந்த எலான் மஸ்க், தற்போதும் ஒரு புதிய அப்டேட்டை விடுத்து பயனாளர்களை மீண்டும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளார். ட்விட்டரை பொறுத்தவரையில் பயனாளர்கள், ட்விட்டர் LOGIN செய்யாமல் கூட ஒருவருடைய ஐடி -யை பார்க்க முடியும். ஆனால், இனி ட்விட்டர் LOGIN செய்யாமல் வேறு ஒருவருடைய ID -யை பார்க்க முடியாதவாறு அடுத்த புதிய அப்டேட்டை எலான் மஸ்க் கொண்டு வந்து, பயனாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.  

இந்நிலையில் ”குரங்கு கையில் கிடைத்த பூமாலை” போல், எலான் மஸ்க் கையில் சிக்கிய ட்விட்டரில் இனி என்னவெல்லாம் மாற்றம் வரும் என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும் என்று நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்.