குட் பை சீம்ஸ்; உலகையே மகிழ்வித்த சீம்ஸ் விடைபெற்றது!!

குட் பை சீம்ஸ்; உலகையே மகிழ்வித்த சீம்ஸ் விடைபெற்றது!!

இணையத்தில் மீம்களாக உலா வந்து, யாரும் கவர முடியாத அளவில் ரசிகர்களை கவர்ந்திழுத்து, அவர்களை மகிழ்வித்து வந்த சீம்ஸ் நாய், கேன்சர் காரணமாக உயிரிழந்தது.

நமது கடினமான நேரங்களிலும், இக்கட்டான சூழ்நிலைகளிலும் இருந்து வெளி வர, சில விஷயங்கள் உதவி செய்யும். அந்த வகையில், இன்றைய காலகட்டத்தில் அனைவரின் மனநிலையையும் சமநிலையில் வைத்திருக்க சமூக வலைதளங்களில் உலா வரும் மீம்ஸ்-ம் ஒரு இடத்தை பிடித்திருக்கிறது. அதற்கு காரணம், சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை, கையில் ஸ்மார்ட் போன் வைத்திருப்பதும் அதன் மூலம் சமூக வலைதளங்களில் ஈடுபாடு கட்டுவதும் தான். 

பெரும்பாலும், சமூக வலைதளங்களில் கருத்துக்களை பகிர்வதை விட தற்பொழுதெல்லாம் மீம்ங்களை பகிர்வதே வழக்கமாகிவிட்டது. அதன் மூலம், பலரும் பிரபலமானவர்கள் உண்டு. அந்த வகையில், ஒரு சிறப்பான இடத்தை பிடித்தவர் தான் இந்த Balltze. எல்லாருக்கும் தெரியும் வகையில் இவருக்கு மற்றொரு பெயர் உண்டு. Cheems Doge (சீம்ஸ்). இது ஷிபா இனு இனத்தை சேர்ந்த நாய்.

உலகம் முழுவதும், மீம்-மாக வளம் வந்தவர் தான் இந்த சீம்ஸ். சீம்ஸை  வைத்து நெட்டிசன்கள் எண்ணிலடங்கா மீம்ஸ்களை வாரி இறைத்துள்ளனர். இணையத்தில் Balltze-வின் வீடியோக்களை அதன் உரிமையாளர்கள் பகிர்ந்து வந்தனர். இதன், மூலம் தனது பாலோவ்ர்களை மகிழ்வித்து வந்தது சீம்ஸ். 

இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு சீம்ஸிற்கு உடல் நிலை சரியில்லாமல் போனதால், மருத்துவ சிகிச்சைகள் பெற்று வந்துள்ளது. இதனால், சீம்ஸின் ரசிகர்கள் பெரிதும் கவலைக்குள்ளாகினர். ஆனாலும், என்றாவது ஒரு நாள், சீம்ஸ் பூரண குணமடைந்து திரும்பும் என எதிர்பார்த்து காத்துக் கொண்டிருந்தனர்.

ஆனால், அனைவரின் எதிர்பார்ப்புகளையும் நிறைவேற்ற தவறிய சீம்ஸ், கடந்த 18ம் தேதி சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தது. இதனை, சீம்ஸின் உரிமையாளர்கள், Balltze-வின் அதிகாரபூர்வமாக இன்ஸ்டாகிராம் கணக்கில், தெரிவித்துள்ளனர்.

View this post on Instagram

A post shared by Cheems_Balltze (@balltze)

அதில் அவர்கள் கூறியிருப்பது என்னவென்றால், " உங்களையும், என்னையும் மகிழ்வித்து வந்த சீம்ஸ் இனிமேல் கண்களை திறக்காது. சீம்ஸின் கடைசி தோராசென்டெசிஸ் அறுவை சிகிச்சையின் போது உயிரிழந்தது. இதற்காக நீங்கள் சோகமாக இருக்க வேண்டாம். அதற்கு பதிலாக, சீம்ஸ் நம்மை மகிழ்வித்த தருணங்களை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். இப்பொழுது சீம்ஸின் பணி நிறைவடைந்தது. தற்பொழுது அவர் சுதந்திரமாக வனத்தில் பறந்துகொண்டு, புதிய நண்பர்களுடன் சுவையான உணவை அனுபவித்துக்கொண்டிருக்கிறான். சீம்ஸ் எப்பொழுதுமே என் இதயத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும்" என உருக்கமான பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். 

மேலும், சீம்ஸின் மருத்துவச் செலவுகளுக்காக சேகரிக்கப்பட்ட அனைத்து பணமும், விலங்குகள் நல அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளனர். 

நம்மை மகிழ்வித்த சீம்ஸிற்கு, இது குட் பை சொல்லும் நேரம்.

- Anand Babu V

இதையும் படிக்க || லடாக் ராணுவ வாகனம் விபத்தில் 9 வீரர்கள் உயிரிழப்பு... தலைவர்கள் இரங்கல்!!