ஈபிஎஸ் மிரட்டலுக்கு திமுக பயப்படாது – ஆர். எஸ். பாரதி சவால்

ஈபிஎஸ் மிரட்டலுக்கு திமுக பயப்படாது – ஆர். எஸ். பாரதி சவால்

நீதிமன்றத்தின் தீர்ப்பு வரும் நேரத்தில் ஓபிஎஸ் அதிமுக அலுவலகத்திற்கு வருவார் என தெரியாமல் ஈபிஎஸ் ஏமாந்துவிட்டார் எனவும் அதிமுக உடைந்த கண்ணாடி இனி ஒட்டவைக்க முடியாது எனவும் கூறினார். தேவையில்லாமல் திமுகவை அழித்துவிடுவேன் என ஈபிஎஸ்  கூறக்கூடாது எனக் கேட்டுக்கொண்டார். 73 வருடமாக திமுகவை யாராலும் அழிக்க முடியவில்லை ஈபிஎஸ்-ஆ அழிக்கப்போகிறார் என விமர்சித்தார். மகராஷ்டிராவில் நடக்கும் அரசியல் தமிழ்நாட்டில் நடக்கவில்லையே என்ற ஆதங்கத்தில் திமுக மீது எதிர்க்கட்சிகள் கலங்கம் கற்பிப்பதாக திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி குற்றம்சாட்டியுள்ளார்.

1957லிருந்து திமுக மட்டும் தான் ஒரே சின்னத்தில் போட்டியிடுகிறது எனவும் அதிமுகவில் கட்சி என்ன ஆகும் என்றே தெரியவில்லை எனவும் ஆதிக்க போட்டியில் தான் ஈபிஎஸ் – ஓபிஎஸ் மோதிக்கொள்கின்றனர்எனவும் ஆர். எஸ். பாரதி கூறியுள்ளார்.  மேலும்,  சொந்த கட்சி அலுவலகத்தையே அடித்து நொறுக்குகிறார்கள் என்றும் இதை அரசு வேடிக்கை பார்க்க முடியுமா? அதனால், தான் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளார்.  அதிமுகவில் மூன்று பேர் இடையே நடக்கும் அரசியல் போட்டில் திமுக தலையிடவில்லை எனவும் அது அவர்களின் உட்கட்சி விவகாரம் அதில் தலையிட திமுக விரும்பவில்லை எனவும் கூறினார். நீதிக்கு தலைவணங்கும் கட்சி திமுக அதனால் திமுக சட்டத்தின்படி தான் நடந்து கொண்டு உள்ளதாகவும் ஆர்.எஸ். பாரதி கூறினார். பழைய பழனிசாமி மீண்டும் கொலை காரனாகிவிடுவேன் என மிரட்டுகிறாரா என ஆர்.எஸ். பாரதி கேள்வி எழுப்பினார். ஓபிஎஸ் பின்னாடி  திமுக செல்ல வேண்டிய அவசியம் இல்லை எனக் கூறிய அவர் மேலும் கோடநாடு கொலை – கொள்ளை விவகாரத்தில் அதிர்ச்சிகரமான தகவல்கள் வருகின்றன எனவும் அடுத்தடுத்த நாட்களில் பரபரப்பான செய்திகள் கோடநாடு விவகாரத்தில் கிடைக்கும் என்றும் கூறினார்.
  
அதிமுக எப்போதும் எங்களுக்கு பங்காளி தான், ஜெயலலிதா மரணத்திற்கு பிறகு பலர் திமுகவிற்கு  வர வேண்டும் என்ற பக்குவத்திற்கு வந்துவிட்டார்கள். இனி வரும் காலங்களில் மேலும் சிலர் வருவார்கள் எனவும் கூறினார் ஆர். எஸ். பாரதி