தலைமையை இழக்கிறாரா உத்தவ் தாக்கரே...

தலைமையை இழக்கிறாரா உத்தவ் தாக்கரே...

சிவசேனாவின் 19 எம்.பிக்களில் 12 எம்.பிக்கள் ஷிண்டே அணியில் இணைந்தனர்.  அதிருப்தி எம்.எல்.ஏக்கள் சேனாவை பிரிக்கவில்லை எனவும் பாஜக பிரிக்க முயல்கிறது எனவும் உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.

உத்தவ் தாக்கரே - ஷிண்டே மோதல்

மகராஷ்ட்ராவில் சிவசேனா – தேசியவாத காங்கிரஸ் – காங்கிரஸ் தலைமையிலான மெகா கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்தது. மகாராஷ்டிராவில் சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக அக்கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே கலகத்தில் ஈடுபட்டார். முதலில் தன்னுடன் 12 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கலகத்தை தொடங்கிய அவர், பிறகு சிவசேனாவில் உள்ள 55 சட்டமன்ற உறுப்பினர்களில் 40 உறுப்பினர்களை தன் பக்கம் கொண்டு வந்து விட்டார். இதனையடுத்து நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பிலும் வெற்றி பெற்று மகாராஷ்டிரா மாநிலத்தின் முதலமைச்சராக பொறுப்பேற்றுள்ளார். இதனால் மகாராஷ்டிர சட்டமன்றத்தில் சிவசேனாவின் சட்டமன்றக் குழுத் தலைவராகவும் ஷிண்டே அங்கீகரிக்கப்பட்டார்.

உண்மையான சிவசேனா?

யாருடைய தலைமையிலான அணி உண்மையான சிவசேனா கட்சி என்ற போட்டி ஷிண்டே மற்றும் உத்தவ் தாக்கரே இடையே நிலவி வந்தது.  மகாராஷ்டிரா சபாநாயகர் ஏற்கனவே ஷிண்டே தலைமையிலான அணியையே சிவசேனா கட்சியாக அங்கீகரித்துள்ள நிலையில் மீண்டும் உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவிற்கு நெருக்கடி ஏற்பட்டிருந்தது.  

எம்.பிக்கள் ஆதரவு:

 சிவசேனாவின் உத்தவ் தாக்கரே அணியின் 12 எம்.பி.க்கள் ஏக்நாத் ஷிண்டே அணியுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சர் தான்வே கூறியிருந்தார்.

உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனாவின் 12 எம்.பி.க்கள் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே அணியுடன் தொடர்பில் இருப்பதாக மத்திய அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான ராவ்சாகேப் தான்வே கூறியதாக செய்தி வெளியாகியிருந்தது.

சட்டமன்றத்தில் நெருக்கடி ஏற்பட்ட நிலையில்  நாடாளுமன்றத்திலும் உத்தவ் தாக்கரே கட்சிக்கு நெருக்கடி ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் மக்களவையில் 19 உறுப்பினர்களும் மாநிலங்களவையில் 3 உறுப்பினர்களும் சிவசேனா கட்சி எம்.பிக்கள் உள்ளனர்.  இவர்களில் மக்களவை உறுப்பினர்களில் 12 பேர் ஷிண்டேவிற்கு ஆதரவு அளிப்பதாக தெரிந்தது.

ஷிண்டே அணிக்கு12 எம்.பிக்கள் ஆதரவு:

சிவசேனாவின் 12 எம்.பிக்கள் ஷிண்டே அணியில் தற்போது இணைந்துள்ளனர். இதனால் நாடாளுமன்றத்திலும் பால் தாக்கரே அணி செல்வாக்கு இழந்துள்ளது.

உத்தவ் தாக்கரே பதில்:

பிரிந்து சென்ற எம்.பிக்களை துரோகிகள் என்று குறிப்பிட்டுள்ளார் தாக்கரே.  மேலும் பாஜக கட்சியை பிரிக்க முயல்கிறது எனக் குற்றஞ்சாட்டியுள்ளார்.  அம்பை மட்டுமே அவர்களால் எடுத்து செல்ல முடியும்.  ஆனால் அதை எய்யும் வில் என்களிடமே உள்ளது எனவும் பால் தாக்கரே பேசியுள்ளார்.

மேலும் உத்தவ் தாக்கரே இரண்டு சேவல்களுக்கு சண்டை வரும் போது ஒரு சேவல் இறந்து விடும் வெற்றி பெற்ற சேவலை கூண்டில் அடைத்து விடுவர் என்று கூறி தற்போது இதைதான் பாஜக செய்கிறது.  இறுதியில் பாஜகவின் விருப்பம் முழுமையாக நிறைவேற்றப்படும் என்றும் அறிவுறுத்தியுள்ளார்.

எம்பி ராகுல் ஷெவாலே குற்றச்சாட்டும் பதிலும்:

பால் தாக்கரே பாஜகவுடன் கூட்டணி அமைக்க விரும்பியதாகவும் அதற்காக பிரதமர் நரேந்திர மோடியுடன் ஒரு மணிநேரம் பேச்சுவார்த்தை நடத்தினார் எனவும் ஷிண்டே அணி சிவசேனா எம்பி ராகுல் ஷெவாலே கூறியதற்கு மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்துவதற்காக பொய்கள் பரப்பப்படுவதாக தாக்கரே அணி சிவசேனா எம்பி அரவிந்த் சாவந்த் பதிலளித்துள்ளார்.

சபாநாயகர் ஆதரவு:

12 எம்.பிக்கள் ஷிண்டே அணியில் இணைந்ததை அடுத்து மகாராஷ்டிர முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனாவின் ராகுல் ஷெவாலேவை மக்களவைத் தலைவராக மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அங்கீகரித்துள்ளார்.   மக்களவையில் உள்ள 19 சேனா உறுப்பினர்களில் 12 பேர் கையொப்பமிட்ட பிரதிநிதித்துவத்தின் அடிப்படையில், சபாநாயகர் பிர்லா பாவ்னா கவ்லியை கட்சியின் தலைமை கொறடாவாகவும் அங்கீகரித்துள்ளார். 

அணி சின்னம் உரிமை:

குழுத் தலைவர் மற்றும் தலைமைக் கொறடா குறித்த லோக்சபா சபாநாயகரின் முடிவின் முறையான அறிவிப்பு வெளிவந்த நிலையில் உத்தவ் தாக்கரே 'வில் மற்றும் அம்பு' சின்னத்தை வைத்திருப்பாரா என்பது குறித்து இன்று தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது

சிவசேனாவின் சின்னத்தை திருட முயற்சிக்கும் அதிருப்தியாளர்களை "திருடர்கள்" என்று கூறியுள்ளார் உத்தவ் தாக்கரே.  ”எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பி.க்களை அவர்களும் அறையில் அடைத்திருக்கலாம் ஆனால் அடை அவர்கள் செய்ய விரும்பவில்லை எனவும் அது ஜனநாயகம் அல்ல" என்றும் அவர் கூறியுள்ளார்.  ”இப்போது அதிருப்தியாளர்கள் அதிகாரத்தின் பலனை அனுபவிப்பார்கள்.  ஆனால் இவர்களால் எந்தப் பயனும் இல்லை என்பதை பாஜக உணரும் நாளில் பாஜக அவர்களைத் தூக்கி எறிந்துவிடும். மக்கள் எங்களுடன் இருக்கிறார்கள். கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக வெறுப்பு இருக்கிறது. சிவசேனாவை புத்துயிர் பெற இது எங்களுக்கு ஒரு வாய்ப்பு,"  என்றும் உத்தவ் கூறியுள்ளார்.