தமிழக அமைச்சர்களுக்கு ஸ்டாலினால் வந்த ஆப்பு., அந்த 22 பேரில் தப்புவது யார்.?  

தமிழக அமைச்சர்களுக்கு ஸ்டாலினால் வந்த ஆப்பு., அந்த  22 பேரில் தப்புவது யார்.?  

திமுகவில் தற்போது 77 மாவட்ட செயலாளர்கள் உள்ளனர். அதில், பெரும்பாலானோர் மாவட்டச் செயலர்களாகவும், அமைச்சர்களாகவும் உள்ளனர். இப்படி ஒரே ஒருவர் இரண்டு பதவிகளை வைத்திருப்பது சரியல்ல என்றும், இது கட்சியிலும், ஆட்சியிலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று மு.க.ஸ்டாலின் கருதுவதால் இப்படி இரட்டை பதவிகளில் இருப்பவர்கள் ஒன்றை துறக்க வேண்டும் என்று ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. 

திமுகவில் தற்போது பி. கே.சேகர்பாபு, மா.சுப்ரமணியன், ஆவடி நாசர், தா.மோ.அன்பரசன், ஆர்.காந்தி, எ.வ.வேலு, செஞ்சி மஸ்தான், எம்.ஆர். கே.பன்னீர்செல்வம், அன்பில் ம கேஷ், சிவசங்கர், செந்தில்பாலாஜி, ரகுபதி, சாமிநாதன், முத்துசாமி, மூர்த்தி, சக்கரபாணி, பெரியகருப்பன், தங்கம் தென்னரசு, கே. கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன், கீதாஜீவன், அனிதா ராதாகிருஷ்ணன், மனோதங்கராஜ் ஆகிய 22 பேர் அமைச்சர்களாகவும், மாவட்ட பொறுப்பிலும் இருக்கிறார்கள். 

இப்படி இரட்டை பதவியில் இருப்பதன் மூலம் சில அமைச்சர்கள், தங்கள் துறையில் வருமானம் வரும் பணிகளுக்கு மாமனார், மைத்துனர், மருமகன், மகன் போன்றவர்களை நியமித்து அதன் மூலம் மோசடி செய்வதாகவும், நெருங்கிய உறவினர்களை தங்களின் பினாமியாக வைத்து கொண்டு, சொத்துக்களை சேர்க்கிறார்கள் என்றும் திமுக தலைமைக்கு புகார் சென்றுள்ளது. 

அதோடு இப்படி இரட்டை பதவியில் இவர்கள் இருப்பதால் கட்சி வேலைகளில் முழுமையாக கவனம் செலுத்த முடியவில்லை, இதற்கு முதன்மையான காரணம் அமைச்சர்கள் பெரும்பாலும் சென்னையிலே இருப்பதால் தான். இதனால் மாவட்ட கட்சி விவகாரங்களில் உடனடியாக எந்த முடிவும் எடுக்கமுடியவில்லை என்று ஸ்டாலின் கருதுவதாகவும் கூறப்படுகிறது. 

இதனால் அந்த 22 அமைச்சர்களில் சிலரின் அமைச்சர் பதவிகளும், சிலரின் மாவட்ட செயலாளர் பதவியும் பறிக்கப்படலாம் என்றும் அறிவாலய வட்டாரத்தில் பரபரப்பாகப் பேசப்படுகிறது. அதோடு எந்த பதவியை தேர்ந்தெடுக்கப்போகிறார்கள் என்பதை சம்மந்தப்பட்ட அமைச்சர்களிடமே விட்டுவிட்டதாகவும் கூறப்படுகிறது. 

இதன் காரணமாக சில வாரங்களில் அமைச்சரவையில் முக்கிய மாற்றங்கள் நடக்கலாம் என்றும், கட்சி வட்டாரத்திலும் அதிரடி மாற்றங்களை எதிர்பார்க்கலாம் என்றும் திமுக தரப்பில் கூறப்படுகிறது.