நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும்...! நிங்கலோ சூரிய கிரகணம்...!!

நூற்றாண்டுக்கு ஒருமுறை வரும்...! நிங்கலோ சூரிய கிரகணம்...!!

இந்த நூற்றாண்டுகளில் முதன்முறையாக நிகழ்ந்து கொண்டிருக்கும் "நிங்கலோ" சூரிய கிரகணம் அல்லது "கலப்பின" சூரிய கிரகணம் இந்திய நேரப்படி காலை 7.27 மணிக்கு துவங்கி நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

வானில் பல அறிய நிகழ்வுகள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கிறது. இதேபோன்று சூரிய கிரகணமும் ஒரு அறிய நிகழ்வாகும். இதிலும் அரிய நிகழ்வாக பார்க்கக்கூடிய கலப்பின சூரிய கிரகணம் இன்று இந்திய நேரப்படி காலை 7.27க்கு ஆரம்பம் ஆகியது. இதனுடைய உச்சபட்ச நிலையை 8:50 க்கு பார்க்க முடிந்தது.. மேலும் சூரிய கிரகணம் மொத்தமாக மூன்று வகைகளாக உள்ளது பகுதி , முழு நேரம், வருடாந்திரம் நடக்கக்கூடிய சூரிய கிரகணங்கள் இதில் சிறப்பாக இன்று மூன்று வகையான கிரகணங்களும் ஒன்றிணைந்ததால் இதனை கலப்பின சூரிய கிரகணம் என்று அழைப்பார்கள். 

மேலும் இது போன்ற கலப்பின சூரிய கிரகணம் நூற்றாண்டுகளில் ஒரு சில வருடங்கள் மட்டுமே நிகழும் என்று விஞ்ஞானிகள் தெரிவிக்கிறார்கள்.. இதேபோன்று இந்த நூற்றாண்டின் முதன்முறையாக கலப்பின சூரிய கிரகணம் இன்று தென்பட்டது .. குறிப்பாக பெரும்பாலான கடல் பகுதிகளில் மட்டுமே தென்பட்ட இந்த கலப்பின சூரிய கிரகணம் ஒரு சில தரைத்தளங்களிலும் தென்பட்டது குறிப்பாக ஆஸ்திரேலியா, இந்தோனேசியா உள்ளிட்ட பகுதிகளில் மிகவும் தெளிவாக தென்பட்டது.. மேலும் இந்த சூரிய கிரகங்களால் பூமிக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது எனவும் சூரிய கிரகணத்தை வெறும் கண்களால் பார்க்க கூடாது எனவும் இதே போன்று அடுத்து வரக்கூடிய கலப்பின சூரிய கிரகணம் 2,172 ஆண்டு தான் நிகழும் என்று கூறப்படுகிறது. பெரும்பாலும் ஆஸ்திரேலியா நாட்டில் தென்படுவதால் ஆஸ்திரேலியாவில் உள்ள நீங்கலோ என்ற கடலின் பெயரே இதற்கு வைக்கப்பட்டுள்ளது. இன்று நிகழும் இந்த சூரிய கிரகணத்தை காண்பதற்காக  கொடைக்கானல் வான இயற்பியல் ஆராய்ச்சி நிலையத்தில் சிறப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டு உள்ளது. அதிக அளவில் மாணவர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.