பாமக முக்கியப்புள்ளியை தூக்கிய எடப்பாடி... டறியலான தைலாபுரம்!! மண்டை காய்ந்த மருத்துவர்கள்...

பாமக மாநில துணை செயலாளரர் திருஞானம் அதிமுகவில் இணைந்துள்ளது பாமக-அதிமுக நட்பில் மேலும் விரிசலை ஏற்படுத்தியுள்ளது.

பாமக முக்கியப்புள்ளியை தூக்கிய எடப்பாடி... டறியலான தைலாபுரம்!! மண்டை காய்ந்த மருத்துவர்கள்...

சட்டசபை தேர்தல் லோக்சபா தேர்தல்களை ஒன்றாக எதிர்கொண்ட அதிமு- பாமக கூட்டணி 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கு முன்பாக முறிந்தது.ஊரக உள்ளாட்சி இடைத்தேர்தலுக்கு முன்பாக அதிமுக கூட்டணியில் இருந்து வெளியேறிய பாமக தனித்து போட்டியிட்டு தோல்வியை தழுவியது. கூட்டணி முறிவு குறித்து பேசிய 
 பாமக நிறுவனர் ராமதாஸ், அதிமுக தலைமை சரியில்லை என்றும் அதிமுக நிர்வாகிகளை தலைமையால் சரியாக கட்டுப்படுத்த முடியவில்லை என்று விமர்சனத்தை முன்வைத்தார்.

இந்த நிலையில்தான்  2021-ஆம் ஆண்டுக்கு விடை கொடுப்போம், 2022-ஆம் ஆண்டை வரவேற்போம் என்ற பெயரில் பாமக நடத்திய பொதுக்கூட்டத்தில் தனி அணி அமைப்பது குறித்து பேசப்பட்டது. அதாவது அதிமுக, திமுகவுடன் கூட்டணி வைக்க வேண்டாம். நாம் மூன்றாவது அணி அமைக்க வேண்டும் என்று அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேசினார்.

பாமக தலைமையில் தனி அணி உருவாக்கப்படும். வன்னியர்கள் பலர் இருந்தும் நம்மால் முதல்வர் ஆக முடியவில்லை. இனி அதை நாம் சாத்தியமாக்க வேண்டும். இனி பாமகவுக்கு மட்டுமே தேர்தலில் வேலை செய்ய வேண்டும் என்றும் 2026-ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதே லட்சியம். இதற்காக நாம் உழைக்க வேண்டும். தமிழ்நாட்டை பாட்டாளி ஆள வேண்டும். அது கடினம்தான் என்றாலும் அதற்காக நாம் உழைக்க வேண்டும் என்று குறிப்பிட்டார்.

சமீப காலமாக பாமக நிர்வாகிகள் பலர் மாற்று கட்சியில் இணைந்து வருவது அந்தகட்சிக்கு மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் பாமக நிர்வாகிகள் பெரிய அளவில் திமுகவில் சேர்ந்தார்களே ஒழிய அதிமுகவில் இணையவில்லை. உள்ளாட்சி தேர்தலுக்கு முன் தருமபுரி கிழக்கு மாவட்ட முன்னாள் செயலாளர் அ.சத்தியமூர்த்தி தலைமையில் பா.ம.க.வைச் சேர்ந்த நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் திமுகவில் இணைந்தனர். பாப்பிரெட்டிப்பட்டி வடக்கு ஒன்றியச் செயலாளரும் - ஒன்றிய கவுன்சிலருமான பெ.விஜயன், பாப்பிரெட்டிப்பட்டி கிழக்கு ஒன்றியச் செயலாளர் சி.வெங்கடேசன், பாப்பிரெட்டிப்பட்டி பேரூர் தலைவர் ராஜிகண்ணு ஆகியோர் திமுகவில் இணைந்தனர். பாமக நிர்வாகிகள் பெரிய அளவில் அதிமுகவில் இணையவில்லை. ஆளும் கட்சி என்பதால் திமுகவில்தான் இணைந்து வந்தனர். 

இப்படிப்பட்ட நிலையில்தான் பாமக - அதிமுக நட்பில் மேலும் பிளவை ஏற்படுத்தும் வகையில் பாமக மாநில துணை செயலாளரான திருஞானம் அதிமுகவில் இணைந்துள்ளது தைலாபுரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அடுத்த சட்டமன்ற தேர்தலில் ஆட்சியை பிடிக்க வேண்டும் என்ற கனவு புஜ்வானம் ஆகிவிடுமோ என்ற பயத்திலும் உள்ளதாக அந்த கட்சி நிர்வாகிகளே புலம்பி வருகின்றனர்.திருஞானத்தில் விலகல் தென்தமிழ்நாட்டில் பாமகவுக்கு இது இன்னும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது. அதிமுகவுடன் கூட்டணி கிடையாது என்று பாமக பேசி வரும் நிலையில் அக்கட்சியின் நிர்வாகியை அதிமுக தன் பக்கம் இழுத்துள்ளது. அதோடு இவர் சிவகங்கை மாவட்ட பாமக செயலாளராக இருப்பதால் பாமகவிற்கு தென் மாவட்டங்களில் இது மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் வாய்ப்புகள் உள்ளன.