கள்ளக்குறிச்சி மாணவியின் ஊரில் காவலர்கள் குவிப்பு!

கள்ளக்குறிச்சி மாணவியின் ஊரில் காவலர்கள் குவிப்பு!

மர்ம்மான முறையில் இறந்த கள்ளக்குறிச்சியில் பள்ளி மாணவியின்  உடற்கூறு ஆய்வு முடிந்து அவரது உடல் இன்று சொந்த ஊருக்கு கொண்டு வரப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மர்ம மரணம்

தனியார் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார் கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தைச் சேர்ந்த மாணவி ஒருவர். கடந்த ஜூலை 13 அன்று உயிரிழந்தார். இறந்த மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாகக் கூறி அவரின் பெற்றோர் மறு உடற்கூராய்வு கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

மறு உடற்கூராய்வு

உயர் நீதிமன்ற உத்தரவின்படி  கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் மறு உடற்கூறு ஆய்வு முடிந்து,  ஸ்ரீமதியின் உடல்  சொந்த ஊருக்கு கொண்டு வர வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

மாணவி ஊரில் காவலர்கள் குவிப்பு

கள்ளக்குறிச்சியில் ஏற்பட்ட்து போல சம்பவம் நிகழ்ந்துவிடக்கூடாது என தமிழ்நாடு அரசு விழிப்பாக உள்ளதாக கூறப்படுகிறது. கடலூர் மாவட்டம் பெரிய நெசலூர் கிராமத்தின் முன்னெச்சரிக்கையாக அங்கு காவல்துறையினர் அதிக அளவில் குவிக்கப்பட்டுள்ளனர். நுழைவாயிலில் 200-க்கும் மேற்பட்ட காவலர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.