சிவசேனா விவகாரம்....சபாநாயகர்களை சாடிய சஞ்சய் ராவத்!

சிவசேனா விவகாரம்....சபாநாயகர்களை சாடிய சஞ்சய் ராவத்!

கட்சித் தலைமைக்கு எதிராக செயல்படும் நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களை கட்சியின் அதிகாரப்பூர்வ அணியாக அங்கீகரித்ததற்கு சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் மக்களவை மற்றும் சட்டமன்ற சபாநாயகர்களை சாடியுள்ளார்.

உத்தவ் தாக்கரேவுக்கு எதிராகத் திரும்பிய ஷிண்டே

சிவசேனா கட்சியின் மூத்த தலைவர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 40 சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக கலகம் செய்ததை அடுத்து மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணியின் கூட்டணி அரசாங்கம் கடந்த மாதம் கவிழ்ந்தது.

சபாநாயகர்கள் மீது குற்றச்சாட்டு

சிவசேனா நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் ராவத் மகாராஷ்டிர சட்டமன்றம் மற்றும் இந்திய நாடாளுமன்ற மக்களவையின் சபாநாயகர்கள் சிவசேனா கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்களின் போட்டிக் குழுக்களை அங்கீகரிப்பதன் மூலம் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறியதாக குற்றம் சாட்டினார். கோவில் பூசாரி அதன் உண்டியலை கொள்ளையடிப்பது மற்றும் கோவில் அறங்காவலர்கள் அதன் கோபுரத்தை துண்டிப்பது போன்ற செயல்கள் நாட்டிலுள்ள ஜனநாயகக் கோவில்களில் நடக்கின்றன என்று சஞ்சை ராவத் சிவசேனாவின் அதிகாரப்பூர்வ நாளிதழான சாம்னாவில் கூறியுள்ளார் .

தற்போதைய ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான மகாராஷ்டிர அரசாங்கத்தை காப்பாற்றுவதற்காக சிவசேனாவை "அழிக்க" மத்திய அரசு முயற்சிப்பதாக அவர் குற்றம் சாட்டினார்.சிவசேனா எம்எல்ஏ ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட 40 சட்டமன்ற உறுப்பினர்களுடன் கட்சித் தலைமைக்கு எதிராக கலகம் செய்ததை அடுத்து, மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாராஷ்டிர வளர்ச்சி முன்னணி அரசாங்கம் கடந்த மாதம் கவிழ்ந்தது.

ஏக்நாத் ஷிண்டே கடந்த ஜூன் 30 அன்று மகாராஷ்டிரா முதலமைச்சராகப் பதவியேற்றார் மற்றும் பாஜகவின் தேவேந்திர ஃபட்னாவிஸ் துணை முதலமைச்சராகப் பதவியேற்றார்.

ஷிண்டே அணிக்கு அங்கீகாரம்

மக்களவையில் உள்ள 19 சிவசேனா எம்.பி.க்களில் 12 பேர் ஷிண்டே அணிக்கு ஆதரவு அளித்து வருகின்றனர். மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, நாடாளுமன்றத்தில் மக்களவையின் சிவசேனா தலைவராக ராகுல் ஷெவாலேவை அங்கீகரித்துள்ளதாக முதல்வர் ஷிண்டே செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

சாமனாவில் தனது பத்தியில் ராவத், "மகாராஷ்டிராவில் புதிய அரசாங்கம் அமைந்த பிறகு, சட்டப் பேரவைத் தலைவர் அரசியலமைப்பு விதிமுறைகளை மீறினார். மக்களவையிலும் காட்சி வேறுபட்டதாக இல்லை" என்று கூறினார். பிரிந்து சென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களின் மத்திய புலனாய்வு அமைப்புகளின் விசாரணையில் இருந்து இப்போது விடுபட்டுள்ளனர் என்று சாமனா பத்திரிகையின் நிர்வாக ஆசிரியரான ராவத் கூறினார் .தாங்கள்தான் உண்மையான சிவசேனா என்றும், கட்சியை விட்டு விலகவில்லை என்றும்சஞ்சை ராவத் கூறியுள்ளார். அரசியலமைப்பின் 10வது அட்டவணையின்படி, முதல்வர் ஏக்நாத் ஷிண்டே உட்பட 16 சட்டமன்ற உறுப்பினர்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று அவர் கூறினார்.

"சிவசேனாவை நிரந்தரமாக ஒழிக்க, மாநில அரசு மற்றும் 16 கலகக்கார சட்டமன்ற உறுப்பினர்களைக் காப்பாற்ற மத்திய அரசு முயற்சிக்கிறது" என்று ராவத் குற்றம் சாட்டினார்.நாட்டின் எதிர்காலமும் அதன் ஜனநாயகமும் உச்ச நீதிமன்றத்தின் அரசியலமைப்பு அமர்வு எடுக்கும் முடிவைப் பொறுத்தது (இந்த கலகக்காரர்களை தகுதி நீக்கம் செய்யக் கோரி உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா தாக்கல் செய்த மனு மீது), அவர் கூறினார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, சிவசேனா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விநாயக் ராவத் தனக்கு கொடுத்த கடிதத்தை ஏற்காமல், பிரிந்து சென்ற சேனா நாடாளுமன்ற உறுப்பினர்களை அங்கீகரித்தார் என்று சிவசேனாவின் தலைமை செய்தித் தொடர்பாளர் கூறினார். மக்களவை சபாநாயகரிடம் விநாயக் ராவத் சமர்ப்பித்த கடிதத்தில், சிவசேனா நாடாளுமன்றக் கட்சியின் "முறைப்படி நியமிக்கப்பட்ட" தலைவர் தாம் என்றும், ராஜன் விச்சாரே தலைமைக் கொறடா என்றும் கூறியிருந்தார்.

மேலும், சபாநாயகரிடம், போட்டிப் அணியினரின் பிரதிநிதித்துவத்தை ஏற்க வேண்டாம் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.