சீமான் மாதிரியே உடான்ஸ் வுடும் சசிகலா!! பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!!

சசிகலா எம்.ஜி.ஆருக்கு ஆலோசனை வழங்கினாரா?

சீமான் மாதிரியே உடான்ஸ் வுடும் சசிகலா!! பங்கம் பண்ணும் நெட்டிசன்ஸ்!!

அரசிலை விட்டு விலகுகிறேன் என்று கூறி ஓய்வெடுத்து வந்த சசிகலா தற்போதைய அதிமுகவின் பரிதாப நிலையை கண்டு வருந்தி, மீண்டும் அரசியலுக்கு வருவேன் கட்சியை கைப்பற்றுவேன் என அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களுடன் அவ்வப்போது செல்போனில் உரையாடி ஆடியோவை வெளியிட்டு வருகிறார் சசிகலா. 

அதானே எலியாவது, பொந்தை விட்டு செல்வதாவது? இதில் என்ன விசேஷம் என்றால், அவ்வாறு தொண்டர்களுடன் தினமும் பேசி வரும் சசிகலா, யாரும் அறியாத பல உண்மைகளையும், ரகசியங்களையும் கொட்டியுள்ளார். ஜெயலலிதாவுடன் மட்டுமல்லாது எம்.ஜி.ஆருடனும் சேர்ந்து பயணித்திருப்பதாகவும், கட்சி குறித்து நிறைய கருத்துகளை தன்னிடம் அவர் கேட்டிருப்பதாகவும் போட்டாரே ஒரு போடு..அதிமுக தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் டோட்டல் க்ளோஸ்..

இது உண்மையா பொய்யா என தெரியாமல் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் சசிகலாவை துவம்சம் செய்யத் துவங்கிவிட்டனர். ”அடிச்சு விடுங்க செத்தவங்க எழுந்து வந்தா கேட்கப்போறாங்க என்ற நினைப்பு?” ”மேடம் பெரியார் மற்றும் அண்ணாவலாம் மறந்துட்டிங்க, குறிப்பா பெரியார் உங்கள கேட்டு தானே திராவிட கட்சியயே தொடங்கினாரு” ”Small mom சீமானை  சந்தித்த பின் மனநிலை பாதிக்கப்பட்டார்”. இப்படி பங்கமாக சசிகலாவை கிழித்தெடுத்து வருகின்றனர் நெட்டிசன்கள்.

நமக்கெல்லாம் ஒரு குணமுண்டு. நம்மை சுற்றியிருப்பவர்கள் என்ன சொல்கிறார்களோ? நாம் என்ன நமது காதுகளால் கேட்கிறோமோ அது தான் உண்மை என்று கண்மூடித்தனமாக நம்பிவிடுவது. இதை தவிர்த்து வேறு யாரேனும் ஏன் பேசப்படும் நபரே வந்து உண்மையை சொன்னால் கூட நாம் நம்புவது இல்லை. அப்படிப்பட்ட உண்மை தான் இது. 

அப்படியென்றால் சசிகலா, எம்.ஜி.ஆருடன் பயணித்திருக்கிறாரா? என்ற கேள்வி எழுகிறதா? ஆம் என்பது தான் உண்மையான பதில். எப்படி என்பதை பார்ப்போம். எம் ஜி ஆரோடு நெருக்கமான நட்பு கொண்டிருந்த வலம்புரி ஜான். ஜெயலலிதா எம்.பி.யான போது அவருக்கு உதவியாக இருக்கும்படி எம்.ஜி.ஆர் வலம்புரி ஜானை தான் அனுப்பினார் என்பது நாம் அறிந்தது. 

அவர் எழுதிய ”வணக்கம்” என்ற புத்தகத்தில், போயஸ் தோட்டத்தில் நான் பார்த்த சசிகலாவை, தியாராய நகர் அலுவலகத்திலும் சிலவேளை எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டத்திலும் நான் பார்த்திருப்பதாக தெரிவித்திருக்கிறார். வி.என்.ஜானகி, ஜெயலலிதா என்கிற இரண்டு வலிமை வாய்ந்த பெண்களுக்கு மத்தியில் ஒரு பத்திரிகை ஆசிரியராக பன்னிரண்டு ஆண்டுகள் காலம் தள்ளிய எனது சாதனையே உலக மகாசாதனை என்று நான் நினைத்துக்கொண்டிருந்த வேளையில், எம்.ஜி.ஆருக்குத் தெரியாமல் ஜெயலலிதாவையும், ஜெயலலிதாவிற்குத் தெரியாமல் எம்.ஜி.ஆரையும் கண்காணித்த சசிகலா வரலாற்றின் வணக்கத்திற்கே உரியவர் என தெரிவித்துள்ளார். 

ஜெயலலிதாவைப் பொறுத்தமட்டில் இதுதான் நடந்திருக்கும் என்று எம்.ஜி.ஆர். நம்புகிறவைகளை ஓங்கிக் சொல்லுகிற வேலையைக் கனகச்சிதமாகச் செய்து வந்தார் சசிகலா எனவும், அந்த நாளில் அமைச்சர்களாக இருந்த திருநாவுக்கரசு, கே.கே.எஸ்.எஸ்.ஆர்., திருச்சி சௌந்தர்ராஜன் போன்றோர்களிடம் ஜெயலலிதாவின் தூதுவராக சசிகலா செல்வதுண்டு. காரணம் இவர்கள் மூவரும்தான் ஜெயலலிதா சொன்னவைகளையும், ஜெயலலிதா சொன்னதாக சசிகலா சொன்னவற்றையும் செய்து கொடுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். 

சசிகலா, நடராசன் இரண்டு பேர்களது உடம்பிலும் மொகலாய இரத்தமே ஓடிக்கொண்டிருக்கிறது. இவர்கள் மொகலாயர்கள் ஆட்சிக்காலத்தில் வாழ்ந்திருந்தால், ஆங்கிலேய ஆட்சியையே வரவிடாமல் செய்திருப்பார்கள். அவ்வளவு சாமர்த்தியசாலிகள் என வியப்புடன் தெரிவித்திருக்கிறார் வலம்புரி ஜான். 

தனது மனைவியின் மூலமாக நடராசன் தமிழ்நாட்டையே ஆண்டு பரிபாலித்து வருவதாகவும், இந்த சசிகலா, எம்.ஜி.ஆர். ஆளா? ஜெயலலிதா ஆளா? என்று கேட்டதற்கு, சசிகலா எம்.ஜி.ஆர். ஆளுமல்ல; ஜெயலலிதாவின் ஆளுமல்ல. சசிகலா சசிகலாவின் ஆள் என்ற பதிலை பெற்றதாக தெரிவித்துள்ளார். நான் கீழே அவருக்காகக் காத்திருந்தபோது வில்லிவாக்கம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ. பிரபாகரன் ஏற்கனவே அங்கே இருந்தார். அவர் ஏதோ ஜெபம் பண்ணிக்கொண்டிருந்தார். என்னவென்று கேட்டபோது தலைவரிடம் ஏதோ கேட்க வந்திருப்பதாகவும், அந்த வெற்றிக்காக பிரார்த்திப்பதகாவும் சொன்னார். கொஞ்ச நேரத்தில் மஞ்சள் புடவையில் சசிகலா இறங்கினார். எதிர்பாராமல் சசிகலாவை எம்.ஜி.ஆர். தோட்டத்தில் பார்த்தது எனக்கு ஆச்சரியமாக இருந்தது.

எம்.ஜி.ஆரிடத்திலே சென்று சசிகலாவால் உங்களுக்கும் ஜெயலலிதாவுக்கும் சரிவு வரவே வரும் என்று எடுத்துச் சொன்னேன். அவரோ நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இது அவர் பொதுவாக சொல்லுவது என்றுதான் முதலில் நினைத்தேன்.ஜெயலலதா முதலமைச்சராகி ஏறத்தாழ 4 ஆண்டுகளுக்கும் மேலாக முதல்வராகவே தொடர்ந்துவிட்ட பிறகு, நடராசனோ, சசிகலாவோ தமிழ்நாட்டின் முதல்வர்களாக ஆகிவிடமாட்டார்கள் என்று சொல்லுவதற்கு இல்லை. இதை எழுதுகிறவன் விரக்தியால் எழுதவில்லை. விபரத்தோடுதான் எழுதுகிறேன். திருமதி. சசிகலாவின் பரம எதிரியான வலம்புரி ஜானே இவரது ஆளுமையை பற்றி புகழ்ந்து எழுதி இருப்பதெல்லாம் முதுகு கூனியவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை என தனது நூலில் குறிப்பிட்டுள்ளார். 

ஆக சசிகலா கூறி வாக்குமூலம் தற்போது உண்மை என நிரூபனமாகிறது. வலம்புரி ஜான் கூறியுள்ளதை வைத்து பார்த்தால், ஜெயலலிதா மற்றும் எம்.ஜி.ஆரை வைத்து பல வேலைகளை சசிகலாவும், அவரது கணவர் நடராஜனும் செய்தது தெரியவருகிறது. இருபெரும் தலைவர்களையே சமாளித்த சசிகலாவிற்கு இப்போது இருக்கும் நபர்களை சமாளிப்பது கஷ்டமில்லாத ஒன்று என்பதும் நமக்கு தெரியவருகிறது. கொரோனா காலகட்டம் ஓய்த பிறகு சசிகலா காலகட்டம் எப்படி இருக்கப் போகிறது? என்பதை எதிர்நோக்கி இருப்போம்!!