லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை...செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி!

லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை...செய்தியாளர்களை சந்தித்த எஸ்.பி.வேலுமணி!

இன்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில் தொடர்ச்சியாக பொய் வழக்கு போட்டு மூன்றாவது முறையாக இன்று எனது வீட்டிலும் நமது அம்மா நாளிதழ் வெளியீட்டாளர் வீட்டிலும் சோதனை நடத்தியுள்ளனர் என முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

பழிவாங்கும் நடவடிக்கை

தொடர்ந்து பழிவாங்கும் நடவடிக்கையை செய்துள்ளார். பழிவாங்கும் நடவடிக்கையை இது போல் எந்த தலைவரும் செய்யவில்லை.எந்த ஆதாரமும் இல்லாமல் சோதனை செய்துள்ளனர். 7 ஆயிரம் ரூபாயை தவிர எந்த ஆவனங்களும் கைப்பற்றவில்லை. கடந்த முறையும் எதுவும் கைப்பற்றவில்லை இப்போதும் இல்லை. வழக்கு வரும் முன்பாக திமுக ஊடகங்கள் முந்தைய நாள் ஆரம்பிப்பார்கள். இது ஒரு மோசமான செயல்.நீதியரசர்கள் தெளிவாக உள்ளனர். இரு வழக்குகளும் பொய் வழக்குகள்.ஊடகத்தில் சென்னையில் யார் வீட்டிலோ சோதனை நடைபெற்றாலும் நெருங்கிய நண்பர் என தொலைக்காட்சியில் போடுகின்றனர்.

மேலும் படிக்க : முன்னாள் அமைச்சர் வீடுகளில் சோதனை... எடப்பாடி பழனிச்சாமி கண்டனம்!

லஞ்ச ஒழிப்பு துறை ஒன்றும் இல்லை என  எழுதி கொடுத்துள்ளனர். என் வீட்டிற்கு வந்தவர்களை கைது செய்து மிகப் பெரிய அத்துமீறலில் ஈடுபட்டுள்ளனர். சட்டையை கிழித்து வழக்கறிஞர்கள், சட்டமன்ற உறுப்பினர்களை கைது செய்துள்ளனர்.மீண்டும் அதிமும ஆட்சிக்கு வரும். மின் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தை திசை திருப்பவே இந்த லஞ்ச ஒழிப்பு சோதனை நடைபெற்றுள்ளது. இன்றைய ரெய்டில் 7500 ரூபாய் பணம் கைப்பற்றப்பட்டு திருப்பி கொடுத்து விட்டனர். ஆட்சி மாற்றத்தைக் கொண்டு வரும் சக்தி பத்திரிகைளுக்கு உண்டு. இந்த மாவட்டத்திற்கு அவர்கள் ஒன்றும் செய்யவில்லை.எந்த சாலையிலும் செல்ல முடியவில்லை. இதை வைத்து என்னை மிரட்டி பார்க்கலாம் என்றால் நடக்காது.

பழனிச்சாமி முதலமைச்சராவார்

எடப்பாடி பழனிச்சாமி மீண்டும் முதலமைச்சராக வருவார்.மக்களுக்கு எதுவுன் செய்யாத அராஜக ஆட்சி முடிவுக்கு வரும். எல்லா ஒப்பந்தமும் விதிப்படி நடந்துள்ளது.கட்சி சம்பந்தமாக யாருக்கும் செய்யவில்லை.என்னை பழிவாங்க முக்கிய காரணம் ஜெயலலிதா மறைவுக்கு பின்னால் இந்த வழக்கு போடுகிறார்கள்.ஆட்சியை காப்பாற்றியவர்களில் நானும் ஒருவன். ஸ்டாலின் குறுக்கு வழியில் ஆட்சியை பிடிக்க பார்த்தார்.அதை நாங்கள் தடுத்தோம்