நாடாளுமன்றத்தில் தேசிய சின்னமும்....எதிர்கட்சிகளின் எதிர்ப்பும்....

நாடாளுமன்றத்தில் தேசிய சின்னமும்....எதிர்கட்சிகளின் எதிர்ப்பும்....

புதிய நாடாளுமன்ற கட்டடத்தில், தேசிய சின்னத்தை பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்ததற்கு எதிர்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.

தேசிய சின்னத்தின் சிற்பத்தை அமைப்பது அரசியலமைப்பு விதிமீறல் எனவும் எதிர்க்கட்சிகள் விமர்சித்துள்ளன.

நிர்வாகம், சட்டமன்றம், நீதித்துறை என மக்களாட்சி மூன்று தூண்களாக பிரிக்கப்பட்டு அதிக்காரம் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது எனவும் நாடாளுமன்றத்தில் சிலையை திறக்கும் அதிகாரம் பிரதமருக்கு வழங்கப்படவில்லை எனவும் என சிபிஎம் கட்சி விமர்சித்துள்ளது.

நரேந்திர மோடி பிரதமராக இருப்பதால் அரசியல் சின்னத்தை வெளியிடும் சிறப்பு அதிகாரம் அவருக்கு வழங்கப்படவில்லை எனவும் பிரதமர் மோடி அரசியலமைப்பின் அனைத்து விதிகளையும் மீறியுள்ளார் எனவும் ஏஐஎம்ஐஎம் கட்சியின் தலைவர் அசாதுதீன் ஓவைசி கூறியுள்ளார்.

அரசியல் சின்னம் தொடர்பான எதிக்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் அனைத்தும் அரசியல் உள்நோக்கம் கொண்டவை என பாஜகவின் தலைமை செய்தித் தொடர்பாளரும் மாநிலங்களவை எம்பியுமான அனில் பலுனி  எதிர்ப்பைத் தெரிவித்துள்ளார்.

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் தேசிய சின்னத்தை வெளியிடும் விழாவில் எதிர்க்கட்சி தலைவர்களை அரசாங்கம் ஏன் ஒதுக்கி வைத்தது என்பது வியப்பளிக்கிறது எனவும் மேலும் தேசிய சின்னத்தை பிரதமர் வெளியிடுவதில் எந்த ஆட்சேபனை இல்லை என்றும் என்சிபி தலைவர் மஜீத் மேமன் தெரிவித்துள்ளார்.

நாட்டின் மிக உயர்ந்த  தலைவர் என்பதால் சிலையை திறப்பதும் அவருடைய உரிமை என்றும் மேமன் கூறினார்.

தேசிய சின்னத்தை வெளியிடும் நிகழ்ச்சியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த மத விழாவிற்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

தேசிய சின்னம் நிறுவுவதை மத விழாக்களுடன் இணைக்கக் கூடாது என்றும் இது அனைவரின் சின்னம் எனவும் தேசிய விழாக்களில் இருந்து மதத்தை தனியாக வைத்திருங்கள் எனவும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

 கூறுகையில், நாடாளுமன்றம் அனைவருக்கும் சொந்தமானது, அங்கு எப்படி ஒரு தனிப்பட்ட நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது என்றும் சிபிஐ பொதுச் செயலாளர் டி ராஜா வியந்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அமைக்கப்பட்ட தேசிய சின்னம்:

6.5 மீட்டர் உயரம் மற்றும் 9500 கிலோகிராம் எடை கொண்ட வெண்கலத்தால் ஆன தேசிய சின்னம் புதிய பாராளுமன்ற கட்டிடத்தின் மத்திய மண்டபத்தின்  உச்சியில் அமைக்கப்பட்டுள்ளது. 6500 கிலோகிராம் எடையுள்ள எஃகு துணை அமைப்பு சின்னத்தை தாங்கும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

மோடியுடன் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, ராஜ்யசபா துணைத் தலைவர் ஹரிவன்ஷ், நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி ஆகியோர் சிலை திறப்பு விழாவில் கலந்து கொண்டனர். அதன் பிறகு நடந்த மத விழாவிலும் அவர்கள் கலந்து கொண்டனர்.

புதிய நாடாளுமன்றத்தின் மேற்கூரையில் அமைக்கப்பட்ட உலோக சிற்பம் அவுரங்காபாத், ஜெய்ப்பூர் மற்றும் டெல்லியில் சுனில் தியோர் மற்றும் லக்‌ஷ்மன் ஆகிய கலைஞர்களால் வட்வமைக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரசியலமைப்பை நிலைநிறுத்த அனைத்து தலைவர்களும் கலந்துகொள்ள வேண்டும் என்று முக்கிய கட்சிகளிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருந்தார் உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி கோகாய்