வலிக்காமல் செய்வதில் தான் நான் ஃபேமஸ்.. யூடியூபில் அந்தரங்கள் வீடியோக்கள்.. மதனை மிஞ்சிய டாட்டூ ராஜேஷ்

டாட்டூ ஸ்டுடியோவில் இளம்பெண்களின் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ குத்துவதை படம் பிடித்து, அதனை யூடியூபில் பதிவேற்றி அதன்மூலம் காசு பார்த்து வரும் கயவனை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

வலிக்காமல் செய்வதில் தான் நான் ஃபேமஸ்.. யூடியூபில்  அந்தரங்கள் வீடியோக்கள்..  மதனை மிஞ்சிய டாட்டூ  ராஜேஷ்

வலிக்காமல் செய்வதில் தான் நான் ஃபேமஸ்’ எனக் கூறிக் கொண்டு, டாட்டூ போட வரும் பெண்களை ஆபாசமாக படம் பிடித்து அதனை யூடியூபில் பதிவேற்றி காசு பார்த்து வரும் இவன் தான் சேட்டை ராஜேஷ்...

செய்யும் தொழிலே தெய்வம் என்பார்கள். அந்த தொழிலை மேம்படுத்தும் நோக்கில் தனது தொழில் நேர்த்தியை வெளிப்படுத்துவதை குறை சொல்ல முடியாது. ஆனால், தன்னிடம் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் வந்தாலும், பெண்களுக்கு டாட்டூ போடுவதை மட்டுமே யூடியூபில் பதிவேற்றுவதை தொழிலாக வைத்துள்ளான் இந்த சேட்டை ராஜேஷ். அதிலும் ஆபாச வலைத்தளங்களையே மிஞ்சும் அளவுக்கு, இளம்பெண்களின் அந்தரங்கப் பகுதிகளில் டாட்டூ போடும் வீடியோக்களை பதிவிட்டு அதன்மூலம் பணம் பார்க்கிறான். 

பச்சைக்குத்துதல் எனும் கலாச்சாரம் காலச்சுழற்சியில் பல மாற்றங்களைத் தாங்கி, அதுவே தற்போது டாட்டூவாக மாறி நிற்கிறது. விதவிதமான டிசைன்கள், கண்ணைக் கவரும் வண்ணங்கள், பிரமிப்பூட்டும் துல்லியம் என இன்றைய இளம் தலைமுறையினரின் உடலில் ஒரு அங்கமாகவே மாறியுள்ள இந்த டாட்டூ மூலம் யுவதிகள் தங்களை மேலும் மெருகேற்றி அழகாக காட்டி கொள்ள ஆர்வம் காட்டுகிறார்கள்.  

இந்த நிலையில், சென்னை முகப்பேரில் H2O டாட்டூ ஸ்டுடியோ வைத்துள்ள ராஜேஷ், ஆரம்பத்தில் தனது தொழிலுக்கு விளம்பரம் தேடும் முயற்சியில், டாட்டூ போடுவதை வீடியோ பதிவு செய்து யூடியூபில் பதிவேற்றி வந்த நிலையில், பிற்காலத்தில் அதிக வியூவ்ஸ் மற்றும் பணத்திற்காக இளம்பெண்களின் அந்தரங்கப் பகுதிகளை, யூடியூபில் வெளிச்சம் போட்டு காட்டி அதன்மூலம் காசு பார்த்து வருகிறான். 

மேலும், டாட்டூ போட வரும் பெண்களிடம் ஆபாசமாக பேசுவது, இரட்டை அர்த்த காமெடிகள் செய்வது என தனது சேட்டையை தொடர்ந்து வரும் ராஜேஷுக்கு தோதாக, அவனது ஒளிப்பதிவாளர் ஸ்ரீதர் வைக்கும் கேமரா கோணங்களை எல்லாம் என்னவென்ற சொல்ல..? கண்ணால் பார்க்க முடியாத அந்த வீடியோக்களை அருவருப்பூட்டும் கமெண்டுகளுடன் எடிட்டிங் செய்து பதிவேற்றி வருகிறார்கள் இந்த கூட்டுக் களவாணிகள். 

அதேபோலவே அவர்களது வீடியோக்களின் தலைப்புகளும் தரம் தாழ்ந்தவையாகவே உள்ளன. 
பெண்களுக்கு பணம் கொடுத்தோ அல்லது அவர்களின் சம்மதத்துடனோ வீடியோ எடுத்திருந்தாலும் கூட, வெகுஜன சமூக ஊடகமான யூடியூபில் அவற்றை பதிவிடுவது தவறு என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது. இன்று சின்னஞ்சிறு குழந்தைகளின் கைளிலும் செல்போன் தவழும் சூழலில், ஆபாச வலைத்தளங்களையே மிஞ்சும் வகையிலான இத்தகைய வீடியோக்கள், எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற அச்சத்தில் பப்ஜி மதனை கைது செய்ததை போல, சேட்டை ராஜேஷுக்கும் போலீசார் பாடம் கற்பிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்துகின்றனர்.