சீட்டு பணம் வசூலித்து ரூ.1.25 கோடி மோசடி - இருவர் கைது!

பொதுமக்களிடம் சீட்டு பணம் வசூலித்து ஒரு கோடியே 25 லட்சம் மோசடி செய்த இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர்.

சீட்டு பணம் வசூலித்து ரூ.1.25 கோடி மோசடி - இருவர் கைது!

கள்ளக்குறிச்சி | முடியனுர் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன் மனைவி அமுதா (வயது 40) இவர் கடந்த 2013ஆம் ஆண்டு முதல் சேலம் மெயின் ரோட்டில் உள்ள தனியார் கட்டிடத்தில் பி ஜி அக்ரி ஃபார்ம் என்ற கம்பெனியில் உறுப்பினராக சேர்ந்தார்.

அப்போது அவரிடம் கம்பெனி நடத்தி வந்த இரண்டு பேர் மற்றவர்களையும் உறுப்பினராக்க கூறியதன் பேரில் தனக்குத் தெரிந்த 20க்கும் மேற்பட்டவர்களை அதில் உறுப்பினராக்கி அவர்களிடம் பணம் வாங்கி கட்டி உள்ளார். இப்படி வாங்கி கட்டிய தொகை ரூபாய் ஒரு கோடியே 25 லட்சம். ஆனால், திடீரென கம்பெனி சில நாட்களாக   மூடியே இருந்துள்ளது.

மேலும் படிக்க | ஐசிஐசிஐ வங்கி முன்னாள் தலைமை செயல் அதிகாரி மற்றும் கணவர் கைது..!

இதை அறிந்த பணம் கட்டியவர்கள் பணத்தை வாங்கி தரக்கோரி அமுதாவை தொந்தரவு செய்ததால் அவர் கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது மேற்படி கம்பெனி நடத்தி வந்த தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்த ஆனந்தன், சேலம் மாவட்டம் அயோத்தியபட்டினத்தைச் சேர்ந்த தனசேகரன் ஆகிய இருவரையும் தலைமுறைவாக இருந்தபோது போலீசார் மதுரையில் பதுங்கி இருந்தது கண்டுபிடித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, அங்கு சென்று இருவரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கள்ளக்குறிச்சி காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கள்ளக்குறிச்சி பகுதியில் ஒரு கோடியே 25 லட்ச ரூபாய் மோசடி செய்த இரண்டு நபர்கள் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படிக்க | விருது கோரி விண்ணப்பித்த பேராசிரியர்...! அசல் சான்றிதழ்களை ஒப்படைக்காத பல்கலைக்கழகம்..!