120 சவரன் கொள்ளை... முதலாளிக்கு வேட்டு வைத்த வேலைக்காரர்கள்...

வேலை பார்த்த வீட்டிலேயே 120 சவரன் நகைகளை பணியாளர்கள் திருடிச் சென்றுள்ளனர். வட இந்திய வேலையாட்கள் சிலரின் திருட்டுச் செயலை விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு!

120 சவரன் கொள்ளை...  முதலாளிக்கு வேட்டு வைத்த வேலைக்காரர்கள்...

சென்னை: கீழ்ப்பாக்கம் பரசு தெருவில் வசித்து வருபவர் தொழிலதிபர் சாய் வெங்கட் பிரசாத். 49 வயதான இவர் ரியல் எஸ்டேட் உள்பட பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வந்தார். இதே வீட்டில் நேபால் நாட்டைச் சேர்ந்த ராமு, சங்கர் என இருவரும் கடந்த 15 வருடங்களாக வேலை பார்த்து வந்தனர். இவர்களுடன் லோகேஷ் என்ற டிரைவரும் பணிபுரிந்து வந்தார்.

மேலும் படிக்க | கள்ளக்காதலன் கணவனை கொலை செய்வதை வீடியோ காலில் ரசித்த மனைவி...

மிகுந்த செல்வந்தரான சாய் வெங்கட், தனது குடும்பத்தினருடன் வசித்து வந்தாலும், அவ்வப்போது இத்தாலி நாட்டுக்கு தொழில் நிமித்தமாக செல்வது வழக்கம். அந்த வகையில் வெளிநாடுகளுக்கு செல்லும் போது, ராமு, சங்கர் ஆகியோரிடம் வீட்டை பார்த்துக் கொள்ளுமாறு பொறுப்பை ஒப்படைத்து செல்வார். 

மேலும் படிக்க | திருமணமான பெண்ணுடன் தொடர்பில் இருந்த இளைஞர்...! அரிவாளால் தாக்கிய தந்தை...!

வேலையாட்களை நம்பி வீட்டை விட்டுச் சென்ற தொழிலதிபர்...

இந்நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வழக்கம் போல இத்தாலிக்கு கிளம்பியவர் வீட்டை வேலையாட்களிடம் நம்பி ஒப்படைத்தார். ஆனால் அது விபரீதத்தை ஏற்படுத்தும் என சாய் வெங்கட்டுக்கு தெரிந்திருக்கவில்லை. கடந்த மே மாதம் உரிமையாளர் பிரசாத் பெயரில் கொரியர் ஒன்று வீட்டுக்கு வந்திருக்கிறது. அதை வாங்குவதற்கு ஒருவரும் இல்லாத காரணத்தால் உரிமையாளருக்கு கொரியர் நிறுவன ஊழியர் செல்போனில் தொடர்பு கொண்டார். 

மேலும் படிக்க | நகை பட்டறையில் கொள்ளைப்போன 67 கிராம் தங்கம்...! சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பு...!

அப்போதுதான் வீட்டில் யாரும் இல்லை என சாய் வெங்கட்டுக்கு தெரியவந்தது. இதையடுத்து டிரைவர் லோகேஷிடம் தொடர்பு கொண்டு பேசியபோது, ராமு, சங்கர் உள்பட வேலையாட்கள் தகவல் தெரிவிக்காமல் வீட்டை விட்டு சென்றதாக தெரியவந்துள்ளது.

நகை பணத்தை திருடியதோடு மாயமான திருடர்கள்...

இதனால் பதறிப்போன சாய் வெங்கட், இந்தியாவிற்கு திரும்பி சென்னையில் தனது வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் உள்ள 1000 கிராம் எடை கொண்ட தங்கக்காசுகள், தங்கக்கட்டிகள், வெள்ளிப் பொருட்கள் என அனைத்தும் திருடு போனது தெரியவந்தது. பின்னர் இந்த சம்பவம் குறித்து தொழிலதிபர் சாய் வெங்கட், கீழ்ப்பாக்கம் காவல்நிலையத்தில் புகாரளித்திருந்தார்.

மேலும் படிக்க | ரவுடியிடம் இருந்து கைப்பற்றப்பட்ட நாட்டு வெடிகுண்டுகள்...!

இந்த புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், சி.சி.டி.வி. ஆதாரங்களைக் கொண்டும், கைரேகை தடயங்களைத் திரட்டி வந்தனர். தப்பிச்சென்ற நேபால் நாட்டைச் சேர்ந்த பணியாட்களான ராமு, சங்கர் ஆகியோரை தேடிய நிலையில் இந்தக் கொள்ளை வழக்கில் தொடர்புடைய  திருப்பதியைச் சேர்ந்த கருண் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

மேலும் படிக்க | வடிவேலு காமெடி போல, ட்ரயல் வண்டியை அபேஸ் செய்த சம்பவம்...

தப்பியோடிய திருடர்களுக்கு போலீஸ் வலை விரிப்பு...

தனது முதலாளியிடம் பல வருடங்களாக வேலை பார்த்து, அவருக்கே துரோகம் இழைத்துச் சென்றுள்ளனர் ராமு மற்றும் ஷங்கர். ஏற்கெனவே, சென்னையில் வட இந்திய பணியாளர்கள் ஆதிக்கம் அதிகமாவதும், ஒரு சிலரால் கொலை, கொள்ளை போன்ற குற்றச் செயல் பெருகி வரும் நிலையில் இந்த சம்பவம் மீண்டும் மக்களிடையே பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

--- பூஜா ராமகிருஷ்ணன்

மேலும் படிக்க | இது ஒரு வழி பாதை... திரும்பி போக முடியாமல் ஒரேடியாக உயிரிழந்த ரவுடி...