வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்கள் சடலமாக மீட்பு...

மேட்டுப்பாளையம் பவானி ஆற்றில் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 3 மாணவர்களில் 2 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்ட 2 மாணவர்கள் சடலமாக மீட்பு...

கோவை : மேட்டுப்பாளையம் அருகே மாம்பட்டி பகுதியில் பவானி ஆற்றில் குளிக்க சென்ற கல்லூரி மாணவர்கள் 3 பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். அவர்களை தீயணைப்பு துறையினர் சுமார் 16 மணி நேரத்திற்கு மேலாக தேடி வந்தனர்.

சென்னை கொளத்தூர் பகுதியை சேர்ந்த கல்யாணசுந்தரம் மகன் கணிஷ்க் (24),கரூர் மாவட்டத்தை சேர்ந்த விஜயகுமார் மகன் ராஜதுரை (24),சூலூர் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் ஆகியோர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டனர்.

மேலும் படிக்க | சாலையில் குட்டிகளுடன் உலா வந்த காட்டு யானை கூட்டம்...! சுற்றுலாப் பயணிகள் அச்சம்...!

அவர்களது உடலை சுமார் 16 மணி நேரம் தேடி வந்த நிலையில் இன்று காலை மேட்டுப்பாளையம் சாமன்னா வாட்டர் டேங்க் அருகே ராஜதுரை உடலையும்,வெள்ளிப்பாளையம் இரண்டாம் பவானி துணை அமன் நிலையம் அருகே கணிஷ்க் ஆகியோரது உடல் சடலமாக மீட்கப்பட்டது.

மேலும் சுரேந்திரன் உடலை தீயனைப்பு துறை மற்றும் காவல் துறையினர் தேடி வருகின்றனர்.மேலும் மீட்கப்பட்ட இருவரின் உடல் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க | குற்றம் சாட்டும் அண்ணாமலை...பாராட்டி சான்றிதழ் வழங்கிய முதலமைச்சர் ஸ்டாலின்!

இறந்த மாணவர்களின் சடலத்தை பார்த்த பெற்றோர்கள் கண்ணீர் விட்டு கதறியது கண் கலக்க செய்தது.மேலும் அனைத்து தரப்பினரும் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனைக்கு வந்து இறந்த மாணவர்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களுக்கு ஆறுதல் கூறினார்.

மேலும் படிக்க | மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே தீவிரவாத தாக்குதல் என்று சொன்னேன்...!