9 மாதங்களாக 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 28 பேர் கைது...

மகாராஷ்டிர மாநிலத்தில் 15 வயது சிறுமி ஒருவர் 30க்கும் மேற்பட்டவர்களால் பாலியல் வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

9 மாதங்களாக 15 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த 28 பேர் கைது...

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டத்தில்  டொம்பிவிலி காவல்நிலையத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு 15 சிறுமி ஒருவர் தன்னை 30க்கும் மேற்பட்டவர்கள் கடந்த 9 மாதங்களாக பாலியல் வன்புணர்வு மற்றும் கூட்டு பாலியல்  செய்து வருவதாக அதிர்ச்சி புகார் ஒன்றை அளித்தார். இது குறித்து விசாரித்த காவல்துறையினர், கடந்த ஜனவரி மாதம் 29ம் தேதியன்று, நண்பர் ஒருவர் அச்சிறுமியை வலுகட்டயமாக பாலியல் வன்புணர்வு செய்த நிலையில் அதனை அவர் வீடியோவாகவும் எடுத்து வைத்து மிரட்டி அந்த நபர் சிறுமியை சில முறை பாலியல் வன்புணர்வு செய்துள்ளார்.

பின்னர் அந்த விடியோவை வைத்து தனது நண்பர்கள் சிலருக்கு பகிர்ந்த நிலையில்,டொம்பிவிலி, பத்பாபுர், முர்பத் மற்றும் ரபேல் என மாவட்டத்தின் பல இடங்களுக்கு அச்சிறுமியை மிரட்டி வரவழைத்து கூட்டாக பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர்.  இப்படியே 33 பேர் அந்த 15 வயது சிறுமியை நாசம் செய்து பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர்.

அந்த 33 பேரும் 16 முதல் 23 வயதுடையவர்கள், இதில் இருவர் மைனர்கள். சிறுமி அந்த 33 பேரின் பெயர்களையும் காவல்துறையினரிம் கூறியிருந்ததன் பேரில் அதில் 28 பேர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர், எஞ்சியவர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.கைதானவர்கள் மீது பாலியல் வன்புணர்வு, மீண்டும் மீண்டும் பாலியல் வன்புணர்வு செய்தல், கூட்டு பாலியல் வன்புணர்வு, 16 வயதுக்கு கீழ் இருப்பவர்களை பாலியல் வன்புணர்வு செய்தல் போன்ற பிரிவுகளில் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

புகார் அளித்தாலும் அவர்களை கைது செய்ய போலீசார் சிறுமியின் குடும்பத்தினர் திட்டமிட்டனர். இதற்காக, சமூக செயற்பாட்டாளர் ஒருவர் குற்றவாளிகளை கையும் களவுமாக பிடிக்க வேண்டும் என திட்டம் தீட்டி, சிறுமியை மிரட்டி வந்தவர்களில் ஒருவரை சிறுமியை தொடர்பு கொள்ளச் செய்துள்ளார். அந்த நபர் சிறுமியை குறிப்பிட்ட இடத்துக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்த போது, சிறுமியின் குடும்பத்தினர் ஆட்டோவில் அவர்களை பிந்தொடர்ந்தனர்.

இந்த நேரத்தில் ஆட்டோ திடீரென பழுதாகி நின்றுவிட சிறுமி தனது இருப்பிட லொகேஷனை ஷேர் செய்த போது குடும்பத்தினர் இது குறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் காவலர்கள் அங்கு செலவதற்குள் இருவர் அச்சிறுமியை பாலியல் வன்புணர்வு செய்திருக்கின்றனர். 15 வயது சிறுமிக்கு நடந்திருக்கும் இந்த அவலம் பதறவைப்பதாக உள்ளது.